குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : எப்போதெல்லாம் பெற்றோர் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : எப்போதெல்லாம் பெற்றோர் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும்?

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : எப்போதெல்லாம் பெற்றோர் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும்?

Priyadarshini R HT Tamil
Updated Apr 15, 2025 01:21 PM IST

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை ஒரு நல்ல மனிதராக மாற்ற நீங்கள் எப்போதெல்லாம் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும் என்று பாருங்கள்.

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : எப்போதெல்லாம் பெற்றோர் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும்?
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : எப்போதெல்லாம் பெற்றோர் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும்?

எல்லைகளை தெளிவாக வகுத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் தெளிவாகவும், தெரடர்ச்சியாகவும் ஒரு விதியை வகுக்கும்போது, அது குழந்தைகளுக்கும் பிடிக்கத்தான் செய்யும். என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது பாதுகாப்பு உணர்வு, பொறுப்பு மற்றும் மரியாதையைக் கொடுக்கிறது. அவர்கள் வாழ்க்கை முழுவதற்கும் தேவையான மரியாதை மற்றும் பொறுப்பை அவர்கள் இதன் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள்.

அன்றாட வேலைகள் பழகுவது

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப வீட்டில் வேலைகளை பிரித்து கொடுத்துவிடவேண்டும். இதனால் அவர்களுக்கு பொறுப்பு, ஒருங்கிணைந்து வேலை செய்வது மற்றும் கடின உழைப்புக்கான பலன் ஆகியவற்றைக் கொடுக்கிறது. அவர்கள் தனித்தன்மையை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் அனைவரின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

திரை நேரத்துக்கு எல்லை

உங்கள் குழந்தைகளின் திரை நேரத்துக்கான எல்லை என்பது மிகவும் முக்கியமானது. அது அவர்களின் கிரியேட்டிவிட்டி மற்றும் சமூகத்துடன் பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. உறக்கத்தின் தரத்தையும் அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு கற்பனைத் திறன், நிகழ்கால உலகில் வாழ்வது மற்றும் மக்களுடன் இணைந்திருப்பது ஆகிய குணங்களை வளர்த்து எடுக்கிறது. திரையில் இருந்து விலகியிருக்கும்போது மட்டும்தான் இவை சாத்தியமாகின்றன.

அமைதி

உங்கள் குழந்தைகளுக்கு ‘தயவுசெய்து’ மற்றும் ‘நன்றி’ என்ற இரண்டு வார்த்தைகளையும் கற்றுக்கொடுங்கள். மேலும் மரியாதை மற்றும் அனுதாபத்தையும் கொடுக்கும். இந்த பழக்கங்கள் அவர்களுக்கு சமூக ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மனிதர்களாக உருவாக வழிவகுக்கும். மற்றவர்களையும் தங்களைப் போல் நினைக்கும் எண்ணத்தை அவர்களிடம் விதைக்கும்.

வேண்டாம் என்றால் வேண்டாம்

உங்கள் குழந்தைகளுக்கு ‘இல்லை‘ என்ற வார்தையை ஏற்க கற்றுக்கொடுக்கவேண்டும். இது அவர்களுக்கு பொறுமை, உணர்வுகளைக் கட்டுப்படுத்த மற்றும் மீள் திறன் ஆகியவற்றை வளர்க்க உதவும். இது அவர்களுக்கு வாழ்வில் கிடைக்கும் தோல்விகளை எதிர்கொள்ள தயார்படுத்தும். அவர்களுக்கு கருணை மற்றும் முதிர்ச்சியைத் தரும்.

உறக்க பழக்கத்துக்கு முன்னுரிமை

தொடர்ந்து ஒரே நேரத்தில் உறங்கச் செல்வது உடல், மனம் மற்றும் மூளை இயக்கத்துக்கு நல்லது. இது ஒழுக்கத்தை அதிகரிக்கிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. பள்ளியில் அவர்களின் திறனை அதிகரிக்கிறது. நாள் முழுவதும் அவர்கள் நல்ல பழக்கத்தைப் பழக உதவுகிறது.

பொறுப்பாக நடந்துகொள்ள ஊக்குவிக்கவேண்டும்

குழந்தைகளை அவர்களின் நடத்தை அவர்களை பொறுப்பாக்குவது அவர்களிடம் நேர்மை மற்றும் தவறு செய்தால் அதை ஏற்கும் பக்குவத்தை அவர்களிடம் வளர்த்தெடுக்கும். அவர்களின் செயல்களுக்கு உள்ள பக்கவிளைவுகளை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். அவர்களின் தவறுகளை ஏற்றுக்கொண்டு அதில் இருந்து கற்றுக்கொள்வார்கள்.

மற்றவர்கள் மீது பழிபோடக்கூடாது

உங்கள் குழந்தைகளுக்கு மற்றவர்களின் மீது பழி போடக்கூடாது என்பதைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்களின் தவறுகளுக்கு அவர்களே பொறுப்பேற்பார்கள். அவர்களுக்கு மனமுதிர்ச்சியும் ஏற்படும். அவர்கள் எப்படி பொறுப்பேற்பது என்று புரிந்துகொள்வார்கள். அவர்கள் பிரச்னைகளை தீர்ப்பார்கள், தோல்விகளில் இருந்து மிக வலுவாக மீண்டு வருவார்கள்.

உணவு நேரம்

அனைவரும் அமர்ந்து சாப்பிடும் உணவு நேரத்தை குடும்பத்தினருக்கு கட்டாயமாக்கவேண்டும். ஒன்றாக சேர்ந்து அமர்ந்து அவர்களுக்கு தேவையானதை அவரவர்கள் பரிமாறிக்கொண்டு சாப்பிடும்போது, பொறுப்பு, உணர்வு ரீதியான பாதுகாப்பு மற்றும் நல்ல நினைவுகளையும் அது உருவாக்கித் தரும். இது குடும்பத்தில் மதிப்பீடுகளையும், குடும்பத்தில் ஒருவருடன் ஒருவர் இணைந்திருக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும்.

பாரட்டுக்கள்

ஒரு சிறிய விஷயங்களுக்குக் கூட நன்றியை எதிர்பார்ப்பது மகிழ்ச்சியையும், நல்ல கேரக்ட்டரையும் உருவாக்கி தருகிறது. குழந்தைகளுக்கு நன்றியைக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். அவர்கள் அனுதாபத்துடனும், சுயநலமில்லாமலும், வாழ்க்கையை நேர்மறையான கோணத்தில் அணுகுவார்கள்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.