Parenting Tips : என்ன? குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நன்றி சொல்ல வேண்டுமா? அதற்கு இவைதான் காரணம்!
Parenting Tips : என்ன குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நன்றி சொல்ல வேண்டுமா? அதற்கு காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

குழந்தைகளிடம் நன்றியோடு நடந்துகொள்ளுங்கள்
பெற்றோராக இருக்கும் வாழ்வில் நீங்கள் அன்பு, சவால்கள் மற்றும் எதிர்பாராத பாராட்டுக்கள் என பல்வேறு விஷயங்களை சந்திக்கிறீர்கள். பெற்றோர், அவர்களின் குழந்தைகளுக்கு என்ன தரவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். குழந்தைகளும் பல விலை மதிப்பற்ற பரிசுகளை பெற்றோர்களுக்கு கொடுக்கிறார்கள். பெற்றோர்கள் ஏன் குழந்தைகளிடம் நன்றியுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மகிழ்ச்சியை கொண்டுவருவது
குழந்தைகள்தான் தங்கள் பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் கொண்டு வருகிறார்கள். பெற்றோர்களுக்கு தங்கள் வாழ்வில் குழந்தைகள் வந்தவுடன்தான் நேர்மறை எண்ணங்களும், திருப்தியும் கிடைக்கிறது. இது ஆழ்ந்த பிணைப்புக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமாகிறது. பெற்றோரிய பயணத்தில் இது தினமும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
வாழ்வில் புதிய கோணம்
புதிய கண்களால், தங்கள் பெற்றோர்கள், இந்த உலகை பார்க்க குழந்தைகள் வழிவகுக்கிறார்கள். அவர்களின் ஆர்வங்கள் மற்றும் வியப்புகள் என அனைத்துமே பெற்றோர் சிறிய நிகழ்வுகளையும் மகிழ்வுடன் கடக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளின் விளையாட்டு கோணத்தில் அவர்களை கவனம் செலுத்த வைத்து, அவர்களின் கிரியேட்டிவிட்டி மற்றும் திறந்த மனநிலையை அதிகரியுங்கள்.
பொறுமை பாடம்
உறக்கமற்ற இரவுகள் முதல் சிறு குழந்தைகளை பராமரிப்பது வரை பெற்றோருக்கு குழந்தைகள் பொறுமை பாடத்தை கற்கிறார்கள். பொறுமை என்பது வாழ்வின் மிக முக்கியமான குணமாகும். ஒரு குழந்தையை வளர்க்கும்போது பெற்றோர் பொறுமை, சவால்களில் இருந்து மீண்டுவரும் திறன் மற்றும் வெற்றித்திறன் ஆகியவற்றை வளர்க்கிறார்கள்.
நிபந்தனையற்ற அன்பு
பெற்றோருக்கு குழந்தைகள், நிபந்தனையற்ற அன்பை கற்பிக்கிறார்கள். புனிதமான அன்பை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்த பெறுகிறார்கள். பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பு என்பது தனித்தன்மை வாய்ந்தது. இது ஆழ்ந்த அர்ப்பணிப்பு உணர்வை வளர்க்கிறது. பற்றையும், கொடுக்கிறது. இந்த நிபந்தனையற்ற அன்பு பெற்றோரின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்தையும், நலனையும் வலுப்படுத்தும்.
உறவுகளை வலுப்படுத்துவது
குழந்தைகள் இருப்பதுதான் உறவுகளை நெருக்கமாக்குகிறது. பெரியவர்களுக்குள் எற்படும் சிறு சலசலப்புக்களையும் குழந்தைகள் சரிசெய்துவிடுகிறார்கள். பெற்றோருக்கு, தாங்கள் குழந்தை பெற்ற பின்னர்தான் தங்கள் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உள்ள உறவு மேலும் ஆழமாகிறது. இது பகிரும் அனுபவங்களாலும், அடுத்த தலைமுறையை வளர்த்து எடுப்பதில் நல்ல முயற்சியை எடுப்பதாலும் கிடைக்கிறது.
பெற்றோர்களை எப்போதும் சுறுசுறுப்பாகவே வைத்திருக்கிறார்கள்
உடற்பயிற்சிகளை செய்ய வைப்பதில் குழந்தைகள் இயற்கையாகவே நம்மை ஊக்குவிக்கும் தன்மைகொண்டவர்கள். பூங்காக்களில் விளையாடுவது, விளையாட்டுகளில் கலந்துகொள்வது, நடக்கும் குழந்தைகளை துரத்திக்கொண்டு ஓடுவது என பெற்றோர், தங்கள் குழந்தைகளை சுறுசுறுப்புடன் வைத்திருக்கிறார்கள்.
அனுதாப குணம்
குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் பெற்றோருக்கு அனுதாபம் ஏற்படுகிறது. குழந்தைகளின் தேவையை புரிந்துகொள்வது மற்றும் அதற்கு பதில் அளிப்பது என்பது ஆழ்ந்த உணர்வியல் அறிவை ஏற்படுத்துகிறது. இது அனுதாபத்தின் உச்சகட்டத்தை எட்டச்செய்கிறது. இதனால் சமூக தொடர்புகள் அதிகரிக்கிறது. குடும்பம் கடந்த உறவுகளும் அதிகரிக்கிறது.
அவர்களின் நீட்சி
குழந்தைகள் ஒரு தொடர்ச்சி மற்றும் மரபு உணர்வை தங்கள் பெற்றோர்களுக்கு கொடுக்கிறார்கள். மதிப்புகள், கலாச்சாரங்கள் மற்றும் வாழ்வியல் பாடங்கள் என தங்கள் குழந்தைகள் மீது பெற்றோர் கற்பிக்கும் அனைத்தும் தங்களின் வாழ்வுக்குப்பின்னரும், தங்கள் தலைமுறையினரின் அங்கமாக இருக்கும் என்பதை குழந்தைகள் உறுதிசெய்கிறார்கள். இந்த மரபு பெற்றோருக்கு வாழ்ந்த உணர்வைக் கொடுக்கிறது.

டாபிக்ஸ்