Parenting Tips : மகிழ்ச்சியான குழந்தைகளின் பெற்றோர்கள் வித்யாசமாக செய்வது இதைத்தான்?
Parenting Tips : மகிழ்ச்சியான குழந்தைகளின் பெற்றோர்கள் வித்யாசமாக செய்வது இதைத்தான்?

மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்ப்பது
ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கான ஒரு சூழலைத்தான் உருவாக்கிக்கொடுப்பார்கள். குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.
ஒரே மாதிரியான பேரன்டிங் ஸ்டைல் எல்லோருக்கும் உதவாது. பெற்றோர் ஒரு குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை தங்களின் அன்றாட வாழ்வில் கடைபிடிப்பார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில வழிகளை கடைபிடிப்பார்கள்.
சுதந்திரத்தை வளர்த்தெடுப்பது
குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர் சுதந்திரம் மற்றும் தனித்தன்மையின் முக்கியத்துவத்தை உணரவேண்டும். அவர்கள் தங்கள் குழந்தைகள் தேர்வு செய்வது ஊக்குவிக்கவேண்டும்.
சிறு வயது முதலே முடிவுகள் எடுக்க வலியுறுத்த வேண்டும். அது அவர்களுக்கு சுதந்திர உணர்வைக்கொடுக்கும். அவர்களின் எல்லைகளை அவர்களுக்கு உயர்த்தும், அவர்களின் தன்னம்பிக்கை வளர உதவும்.
நன்றாக கவனிக்க வேண்டும்
குடும்பத்திற்குள் நல்ல உரையாடல் ஏற்படுவதற்கு மூலக்கல்லாக உங்கள் குழந்தைகள் கூறுவதை நீங்கள் உற்று கவனிப்பது உள்ளது. எனவே உங்கள் குழந்தைகள் பேசுவதை கேட்பதற்கு நீங்கள் உண்மையாகவே முயலவேண்டும்.
அவர்களின் சிந்தனைகள், உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, நீங்கள் கட்டாயம் அதை நன்றாக கவனிக்க வேண்டும். அவர்களின் பேச்சுக்களுக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது. அவர்களுக்கு உடனடியாக தீர்வுகள் கொடுக்கக்கூடாது. பொறுமையாக கவனிக்க மட்டுமே வேண்டும்.
தோல்விகளை வெற்றியின் படியாக்குங்கள்
உங்கள் குழந்தைகளை தோல்விகளில் இருந்து காப்பதன் மூலம் அவர்களின் திறமைகளை தடுக்காதீர்கள். மகிழ்ச்சியான பெற்றோர், குழந்தைகளின் தவறுகளை கற்பதற்கு மதிப்புமிக்க வழிகளாக பார்க்கிறார்கள்.
சவால்களை தங்கள் குழந்தைகள் எதிர்கொள்வதற்கு தேவையான ஆற்றலை அதிகரிக்க முனைகிறார்கள். அவர்களின் பின்னடைவுகளில் இருந்து பாடம் கற்க கற்றுக்கொடுக்கிறார்கள். விழும்போதெல்லாம் எழுவதற்கு தொடர்ந்து கற்றுக்கொடுக்கிறார்கள்.
வெற்றியை விட முயற்சி பெரியது
எவராலும் மிகச்சரியாகவோ அல்லது துல்லியமாகவோ ஒன்றை செய்ய முடியாது. எனவே உண்மையில்லாத எதிர்பார்ப்புகள் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.
அது மனஅழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கிறது. குழந்தைகளின் முயற்சியை மகிழ்ச்சியான பெற்றோர்கள், கொண்டாடுகிறார்கள். அவர்களின் வெற்றியைவிட அவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைக்கிறது.
விளையாட்டு முக்கியத்துவம்
தங்கள் குழந்தைகளின் கற்பனை, அவர்கள் வெளிப்படுத்துவது மற்றும் அவர்கள் ஒன்றை எளிமையாக உருவாக்குவது என குழந்தைகள் செய்வதை அனுமதித்துவிடவேண்டும். மகிழ்ச்சியான பெற்றோருக்கு இப்படி செய்வதால் ஏற்படும் நன்மைகள் புரியும்.
புதிய விளையாட்டுக்களை கண்டுபிடித்து விளையாடுவது, கோட்டைகளை கட்டுவது, இயற்கையில் கரைவது என அனைத்தையும் அவர்களின் விளையாட்டுகள் எதுவாக இருந்தாலும், அதற்கு அவர்களை விட்டுவிடவேண்டும்.
அவர்களின் கிரியேட்டிவிட்டியை ஊக்குவிப்பதன் மூலம், அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கற்றல் மீது ஆர்வம் கொள்கிறார்கள். அதை பள்ளி வகுப்பறை கடந்தும் செய்கிறார்கள்.
நன்றியுணர்வுக்கு மாதிரியாகுங்கள்
வாழ்வின் ஆசிர்வாதங்கள் மற்றும் சிறிய சந்தோசங்களுக்கு நன்றி செலுத்துவது மிகவும் நல்லது. அது நன்றி கூறுவதாக இருக்கலாம் அல்லது நன்றியை எழுதுவதாக இருக்கலாம்.
அன்பை வெளிக்காட்டுவதாக இருக்கலாம். அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வாழ்வில் தங்களுக்கு கிடைத்த அற்புதங்களுக்கும், அதிகப்படியான சந்தோஷங்களுக்கும் நன்றி கூறுகிறார்கள்.
திரை நேரத்தை குறைப்பது
தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட எல்லைகளை வகுக்க வேண்டும். அதற்கு அவர்கள் பல்வேறு ஆஃப் லைன் வேலைகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
அது புத்தக வாசிப்பு, வெளியே சென்று விளையாடுவது, வெளியில் செல்வது அல்லது உடல், மன, சமூக நலனுக்கு உதவக்கூடிய நல்ல காரியங்களை அவர்கள் செய்வதற்கு ஊக்குவிப்பது என அவர்களை செய்ய அனுமதிப்பார்கள்.
உணர்வுசார் நுண்ணறிவு
குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவும், அங்கீகரிக்கவும், மேலாண்மை செய்யவும் கற்றுக்கொடுக்க வேண்டும். இதை கற்றுக்கொடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அவர்கள் குழந்தைகள் தங்களின் திறன்களை நிரூபிப்பதற்கு வாய்ப்புக்களை வழங்குவார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். பல்வேறு உணர்வுகளை அவர்கள் வெளிக்காட்டவும் உதவுகிறார்கள்.
நேர்மறையான வீட்டுச் சூழல்
வீட்டுக்குள் இருக்கும் சூழல் குழந்தைகள் நல்லவர்களாக வளர்வதற்கு மிகவும் அவசியம். அது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு உதவுகிறது. எனவே அன்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.
அங்கு அன்பு, மரியாதை மற்றும் மகிழ்ச்சி அதிகம் இருக்கும். அவர்களுடன் தரமான நேரம் செலவிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உணவை பரிமாறிக்கொள்வது அல்லது விளையாட்டு அல்லது ஒரு அர்த்தமுள்ள உரையாடல் என எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு மிகவும் நல்லது.
சுய அக்கறைக்கு முக்கியத்துவம்
ஒருவரின் நலனின் அக்கறை எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். அப்போதுதான் அவர்கள் தங்களின் உடல், மனம் மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்வார்கள்.
தங்களை கவனித்துக்கொள்வது சுயநலமாக இருப்பது கிடையாது. ஆனால் ஒரு நல்ல பேரன்டிங்குக்கு தங்களை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்