Parenting Tips : பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் இதையா கற்கிறார்கள்? என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
Parenting Tips : பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்கும் 9 பழக்கங்கள் என்னவென்று தெரியுமா?

பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் கற்கும் கெட்ட பழக்கங்கள்
குழந்தைகள் வளரும் காலங்களில் அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்துதான் அனைத்து பழக்கங்களையும் கற்கிறார்கள். அவர்கள் நீங்கள் சொல்வதை பார்த்து அதையே செய்கிறார்கள். அவர்களை நல்ல குழந்தைகளாக வளர விடுவதற்கு நீங்கள் பேசுவது மற்றும் செய்வதை கவனிக்க வேண்டும்.
ஆனால் சில காரணங்களால், கெட்ட பழக்கங்களை நம்மால் எளிதில் மாற்ற முடியாது. அவற்றை எளிதாக கற்றிருப்போம், ஆனால், அவற்றை அத்தனை எளிதாக மாற்ற முடியாது. எனவே இந்த கெட்ட பழக்கவழக்கங்கள் குறித்து கவனமாக இருங்கள். அவர்கள் உங்களிடம் இருந்து கற்றிருக்கக் கூடும்.
பொருட்களை சரியாக மடித்து வைக்காமல் போவது
குழந்தைகள் பெரியவர்களை அப்படியே பிரதிபலிக்கிறார்கள். பெற்றோரில் ஒருவருக்கு தங்களின் உடைகளை சரியாக மடித்து வைக்கும் பழக்கம் இல்லையென்றால், குழந்தைகளும் அப்படியே இருப்பார்கள்.
பெற்றோர் புதிய உடை மாற்றும்போது பழைய உடையை கழட்டி அப்படியே போட்டுவிட்டு செல்பவர்களாக இருந்தால், குழந்தைகள் அதை அப்படியே பின்பற்றுவார்கள். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தப்பழக்கத்தை கற்கிறார்கள். எனவே உடைகள், படுக்கைகள் மற்றும் காலணிகளை எவ்வாறு சுத்தமாக அடுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
அதிக போட்டிகள்
பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளியில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்துதான், வெற்றியை அளவிடுகிறார்கள். அவர்கள் குழந்தைகளை அவர்களின் வேகத்துக்கு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். இப்போது குழந்தைகள் இது குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கிறது. இதனால் அவர்கள் விரக்தியடைகிறார்கள். மனஅழுத்தம் ஏற்படுகிறது. ஏமாற்றமடைவதும் ஏற்படுகிறது.
மோசமான தன் சுகாதாரம்
நீங்கள் பற்களை துலக்காமல் உறங்கச் செல்லும் நபர் என்றால், உங்கள் குழந்தைகளும் அப்படியே செய்வார்கள். இதனால் அவர்களுக்கு தவறான வாய் ஆரோக்கியம் பேணுபவர்களாக இருப்பார்கள்.
எனவே தினமும் குளிப்பது, தங்களின் தங்களின் உள்ளாடைகளே தாங்களே துவைத்துக்கொள்வது, அவர்களுக்கு தேவையானவற்றை அவர்கள் செய்துகொள்வது என இருந்தால் போதும், இவற்றையெல்லாம் பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் வளர்த்து எடுக்க வேண்டும்.
மற்றவர்கள் மீது தாக்குதல்
மற்ற குழந்தைகளை தாக்கும் பழக்கம் சில குழந்தைகளிடம் உள்ளது. சில பெற்றோர், இதற்கு காரணம். குழந்தைகளும் மற்றவர்களை தாக்குவது பிர்சனையில்லை என்று எண்ணுவார்கள். அவர்களை நீங்கள் அடித்து திருத்துவது நல்லதுதான் என்றாலும், அவர்கள் அதை அவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என எண்ணவிடாமல் பார்க்க வேண்டும்.
திட்டுவது
உங்கள் குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பேசுவதை நீங்கள் பார்த்தால், நீங்கள் உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அர்த்தம். குழந்தைகள் புதிய வார்த்தைகளை கற்றுவிடவேண்டும் என்ற முனைப்பில் எப்போதும் இருப்பார்கள். அவர்களுக்கு புதிய வார்த்தைகள் என்பது கற்றல்தான். எனவே அவர்களை சுற்றியும் நேர்மறை எண்ணங்கள் மற்றும் நேர்மறை ஆற்றலை வைத்திருப்பது பெற்றோரின் கடமை.
பிடிவாதம்
நாம் விரும்பும் ஒன்றை நாம் அடைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு ஆசைப்படுவதெல்லாம் கிடைக்காது என்ற புரிதல் இருக்காது. உங்கள் இருவரில் ஒருவர் அடம்பிடித்து ஒரு பொருளை வாங்குபவராக இருந்தீர்கள் என்றால், குழந்தைகளும், அதை அப்படியே கடைபிடிப்பார்கள். எனவே நீங்கள் அவ்வாறு நடந்துகொள்ளாமல் இருக்க வேண்டும்.
நகம் கடித்தல்
நீங்கள் மனஅழுத்தத்தின்போது நகம் கடிப்பவராக இருந்தால், உங்கள் குழ்ந்தைகள் அதை பார்த்தால், அதை பழகிவிடுவார்கள். குழந்தைகள் நகம் கடிப்பதை நீங்கள் குறிப்பிட்ட வயதிலே தடுத்து நிறுத்தாவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நகம் கடிப்பவராகவே வளர்வார்கள். அது அவர்களுடனே இருக்கும் பழக்கமாகிவிடும்.
அதிக திரை நேரம்
நீங்கள் அதிக நேரம் திரையின் முன் அமர்ந்துகொண்டே இருந்தால், அதைப்பார்த்து வளரும் உங்கள் குழந்தைகளும் நீண்ட நேரம் திரையின் முன்னே அமர்ந்திருப்பார்கள்.
எனவே நீங்கள் ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் மற்றும் டேப்களில் மூழ்குவதை குறைக்க வேண்டும். ஏனெனில் உங்கள் குழந்தைகளும் இந்த பழக்கவழக்கங்களை கடைபிடிக்கக்கூடும்.
சுகாதாரமற்ற உணவுப்பழக்கம்
குழந்தைகள் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை பார்க்கிறார்கள். நீங்கள் சூப், பீட்சா என எது சாப்பிட்டாலும், குழந்தைகள் அதை பார்க்கும்போது அவர்களும் அதையே சாப்பிடவேண்டும் என்று விரும்புவார்கள்.
ஐஸ்கிரீம், கேக், பீட்சா, பர்கள், பேஸ்ட்ரீஸ், குக்கீஸ் என உங்களின் உணவுப்பழக்கங்களை மாற்றினால்தான் அவர்களும் ஆரோக்கியமான உணவு உட்கொள்வார்கள். சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகள் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் அவர்கள் எடை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

டாபிக்ஸ்