தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips We Must Allow Our Children To Suffer Do You Know Why

Parenting Tips : நாம் நம் குழந்தைகளை கஷ்டப்பட அனுமதிக்க வேண்டும். ஏன் தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Feb 27, 2024 04:04 PM IST

Parenting Tips : நாம் நம் குழந்தைகளை கஷ்டப்பட அனுமதிக்க வேண்டும். ஏன் தெரியுமா?

Parenting Tips : நாம் நம் குழந்தைகளை கஷ்டப்பட அனுமதிக்க வேண்டும். ஏன் தெரியுமா?
Parenting Tips : நாம் நம் குழந்தைகளை கஷ்டப்பட அனுமதிக்க வேண்டும். ஏன் தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

கஷ்டப்பட்டால் தான் முன்னேற முடியும்

ஒரு செடிக்கு எதிர்ப்புத்திறன் இருந்தால்தான் அது நன்றாக வளரும். அதுபோல் குழந்தைகள் நன்றாக வளர அவர்களும் கஷ்டப்படவேண்டும். அப்போது தான் அவர்கள் வலுவாக இருப்பார்கள். அவர்களுக்கு எதிர்த்து முட்டிமோதி முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். எங்கும் அவர்களால் நிற்க முடியும். குழந்தைகள் போராட்டங்களை எதிர்கொள்ளும்போது, அவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்க முடிகிறது. அவர்களால் கிரியேட்டிவாக யோசிக்க முடிகிறது. கஷ்ட காலங்களில் விடா முயற்சியுடன் முன்னேற முடிகிறது.

நல்ல நடத்தைகள் வளரவேண்டும்

குழந்தைகள் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போதுதான், நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் அவர்கள் பொறுமை, விடாமுயற்சியுடன் செயல்பட முடியும். தடைகளை கடக்கும்போதுதான், குழந்தைகள் மதிப்புமிக்க பாடங்களை கற்கிறார்கள். வீழ்ந்தாலும் எழவேண்டும் என்ற உத்வேகம், எப்போதும் முன்வைத்த காலை பின் வைக்கக்கூடாது என்ற உத்வேகம் ஆகியவை பிறக்கிறது.

உணர்வு மேலாண்மை

குழந்தைகள் அன்றாடம் கஷ்டப்படும்போது, அவர்களுக்கு தினமும் எப்படி உணர்வுகளை கையாள வேண்டும் என்பது தெரியும். சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கு விரக்தி முதல் ஏமாற்றம் வரை தெரிகிறது. இதனால் அவர்கள் எதையும் தாங்கும் இதயம் பெறுகிறார்கள்.

சுய வக்காலத்து

குழந்தைகள் கஷ்டப்படும்போது, அவர்களுக்கு அவர்களை தற்காத்துக்கொள்ளும் திறன் வளர்கிறது. அவர்களின் தேவைகளையும், அவர்களுக்கான உதவிகளையும் கேட்டுப்பெறும் துணிச்சல் பெறுகிறார்கள். அவர்களுக்கு தேவையான தொடர்புகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்கிறார்கள். தன்னம்பிக்கையும் கூடவே வளர்க்கிறது. இதனால், அவர்கள் கடின காலங்களை எதிர்கொள்ளும் திறனை பெறுகிறார்கள். சுதந்திரமாக சூழல்களை கையாள்கிறார்கள்.

அதிக துன்பங்கள் கூடாது

உங்கள் குழந்தையின் தனிப்பட்ட திறன்கள் மற்றும் தேவைகள் குறித்து கவனம்செலுத்துங்கள். அவர்கள் சந்திக்கும் சவால்கள் அவர்களின் வயதுக்கு ஏற்றதா என்பதை உறுதிப்படுத்துங்கள். அவர்களால் அதை கையாள முடியுமா என்று பாருங்கள். அவர்கள் அதிக மனஅழுத்தத்தில் உள்ளார்களா அல்லது அதிகம் விரக்தி கொள்கிறார்களா என்று பாருங்கள். அவர்களுக்கு ஆதரவும், வழிகாட்டவும் எப்போதும் தயாராக இருங்கள். அவர்களுக்கு தேவைப்படும்போது உங்கள் துணை இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

அதிகாரம் கொடுப்பதன் மூலம் மீண்டெழும் திறன் வளர்த்தல்

கஷ்டங்கள் நிறைந்திருக்கும் சூழலில் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து அதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பது அவர்கள் சவால்களை சந்திப்பதை விட மிகவும் சிறந்தது. உங்கள் குழந்தைகளை எந்த மாதிரி சூழலில் வளர விடலாம் என்பதற்கான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் சவால்களை சந்திக்க தயாராக உள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்துவது

உங்கள் குழந்தைகள் சவால்களை எதிர்கொள்வதற்கு முன், அவர்களுக்கு தேவையான திறன்கள் மற்றும் ஆதரவு வெற்றிக்கு தேவை. எதிர்பார்ப்புகளை குறைத்து, அவர்களுக்கு தேவை ஏற்படும்போது உதவி செய்தால் அது அவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும்.

இடைவேளைக்கு அனுமதியுங்கள்

உங்கள் குழந்தைகள், இடைவேளை எடுத்துக்கொள்ள உங்கள் குழந்தைக்கு இடம்கொடுங்கள். அவர்கள் சவால்களை எதிர்கொள்ளும்பபோது இடைவேளையும் தேவை. அவர்களின் தவறுகளில் இருந்து அவர்கள் பாடம் கற்க ஊக்கப்படுத்துங்கள். மீண்டும் முயற்சிக்க அனுமதியுங்கள். அவர்களுக்கு தோல்வி குறித்து நேர்மறை உண்ணங்கள் வேண்டும். அது வெற்றி மற்றும் வளர்ச்சிக்கான படி என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்