Parenting Tips : உங்கள் குழந்தைகள் வெற்றியாளராக வேண்டுமா? இதோ இவற்றை மட்டும் அவர்களிடம் கூறுங்கள்!
Parenting Tips : உங்கள் குழந்தைகள் வெற்றியாளராக வேண்டுமா? இதோ இவற்றை மட்டும் அவர்களிடம் கூறுங்களேன், பின்னர் நடப்பதை பார்த்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்வீர்கள்.

உங்கள் குழந்தைகளிடம் இந்த நேர்மறை கருத்துக்களை மட்டும் கூறிப்பாருங்கள். அவர்கள் வெற்றியாளராக நிச்சயம் மாறுவார்கள்.
ஒரு குழந்தை என்ன கேட்க விரும்புகிறது?
ஒரு பெற்றோராக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நமது குழந்தைகளிம் பெரிய பாதிப்புபை ஏற்படுத்துகிறது. நேர்மறை எண்ணங்கள் உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. அவர்கள் உணர்வு ரீதியான அறிவாளிகளாவதற்கு உதவுகிறது. உங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாவதற்கு, நீங்கள் அவர்களிடம் இவற்றையெல்லாம் கூற வேண்டும். இது அவர்களின் வெற்றிக்கும் வழிவகுக்கும்.
நான் உன்னை விரும்புகிறேன்
இவற்றை பார்த்தால் மிகவும் எளிமையான வார்த்தைகளாக இருக்கம். ஆனால், இதன் பாதிப்பு அதிகம். ஒரு உளவியல் ஆய்வில், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அதிக முறை நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறினால், அவர்களின் மகிழ்சசி அதிகரிப்பதாக தெரிவிக்கிறது. மேலும் அவர்களின் மதிப்பை அவர்கள் உயர்த்திக்கொள்வதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.