தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips Want Your Child To Be A Winner Then Just Tell Me This

Parenting Tips : உங்கள் குழந்தை வெற்றியாளராக வேண்டுமா? அப்போ இதை சொல்லிக்கொடுங்க போதும்!

Priyadarshini R HT Tamil
Feb 24, 2024 02:28 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தை வெற்றியாளராக வேண்டுமா? அப்போது இதை சொல்லிக்கொடுங்க போதும்!

Parenting Tips : உங்கள் குழந்தை வெற்றியாளராக வேண்டுமா? அப்போது இதை சொல்லிக்கொடுங்க போதும்!
Parenting Tips : உங்கள் குழந்தை வெற்றியாளராக வேண்டுமா? அப்போது இதை சொல்லிக்கொடுங்க போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

விழுந்தால் எப்படி மீள வேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

வெற்றியாளராகவோ அல்லது சாதனையாளராகவோ மாறும் குழந்தைகளுக்கு அவர்களின் குடும்பத்தினர், எதிர்த்தெழும் வித்தையை கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். பின்னடைவுகளில் இருந்து எப்படி மீண்டு வரவேண்டும் என்பதை அவர்கள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். 

அதுவும் விடாமுயற்சியுடன் மீண்டும் உத்வேகத்துடன் தொடரவேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தோல்வி என்பது வளர்ச்சியின் படிதான் என்பது புரியும். பின்னடைவுகளை வாய்ப்புகளாகவும், கற்றல் மற்றும் வளர்ச்சிகான வழிகளாகவும் வகுத்துக்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கப்படும், அவர்களை யாரும் கவனிக்காதபோதும் அவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள்.

வெற்றியாளராக உருவாகும் குழந்தைகளிடம் சுய ஒழுக்கம் நிறைந்திருக்கும். அவர்களிடம் தெளிவான எதிர்பார்ப்பு, முறையான பழக்கவழக்கங்களை வளர்த்தெடுப்பது மற்றும் அவர்களுக்கு மனநிறைவின் மதிப்பு ஆகியவற்றை கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களை வெற்றியாளராக்க முடியும். 

இவர்களுக்கு எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது தெரியும். அவர்களின் நேரத்தை நன்றாக உபயோகிப்பார்கள், நீண்ட நாள் கனவுகளை வைத்து அதில் முழுகவனம் செலுத்துவார்கள்.

அவர்கள் மற்றவர்களை சார்ந்திராமல் வாழ அறிவுறுத்தப்பட்டிருப்பார்கள்

குழந்தை முதலே சுதந்திரமாக வளர்க்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் முன்னெடுப்புக்களில் பங்கேற்க கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பார்கள், அவர்களாகவே முடிவுகள் எடுக்கவும், பிரச்னைகளை தீர்க்கவும் கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பார்கள். 

அவர்கள் தனித்து செயல்பட குடும்பத்தினர் வாய்ப்புகள் கொடுப்த்திருப்பார்கள். அவர்களின் ஆர்வங்களை ஊக்குவிப்பார்கள், அவர்கள் விரும்புவதை சுதந்திரமாக செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு அனுதாபம் போதிக்கப்படும்

வெற்றியாளராக மாறும் குழந்தைகளிடம் அனுதாபம் போதிக்கப்படும். அதற்கு உதாராணமாக குடும்ப உறுப்பினர்கள் நடந்துகொள்வார்கள். 

அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வார்கள் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள். நல்ல உறவுகளை வளர்த்து, அதன் மூலம் அன்பு, பாசம், மரியாதை என அனைத்தையும் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

அவர்களின் அர்வத்தை அவர்கள் குடும்பத்தினர் வளர்தெடுப்பார்கள்

வெற்றியாளராகும் குழந்தைகளின் ஆர்வங்களை குடும்பத்தினர், வளர்த்தெடுப்பார்கள். அவர்கள் அதை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துவார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்பார்கள், கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துவார்கள். இவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். இவர்கள் நன்றாக சிந்திப்பார்கள், பள்ளி வகுப்பறை கடந்தும் கற்பார்கள்.

அவர்கள் எல்லா சூழலுடனும் ஒன்றி போவார்கள்

வெற்றியாளர் குழந்தைகள், அவர்கள் குடும்பத்தினரிடம் இருந்து ஒற்றுப்போகும் திறமையை வளர்த்துக்கொள்வார்கள். மாற்றங்களை நெகிழ்வுத்தன்மை மற்றும் மீண்டெழும் திறனுடன் கடப்பார்கள். அவர்களுக்கு புதிய சவால்களை எதிர்கொள்வது முக்கியம் என்பது புரியும். 

எதிர்பாராத சூழல்களுக்கு பொருந்திப்போவார்கள். அனுபவங்களில் இருந்து கற்பார்கள், அவர்களுக்கு சவுகர்யமான இடங்களில் இருந்து வெளியேறி, புதிய இடங்களில் சென்று சவால்களை ஏற்பார்கள்.

அவர்கள் அறம் பழக அவர்கள் குடும்பத்தினர் மாதிரியாக இருப்பார்கள்

குடும்பத்தினர், கடின உழைப்பு, அறம் என அனைத்துக்கும் சிறந்த மாதிரியாக இருப்பார்கள். இவர்கள் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் ஒரு செயலில் நடந்துகொள்வார்கள். இவர்கள் படிப்பு, விளையாட்டு, கலை, போட்டிகள் எதிலும் முயற்சி செய்துவிட்டு, அதற்கான பலனை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

அனைவரிடமும் பாசத்துடன் நடந்துகொள்வார்கள்

வெற்றியாளர் குழந்தைகள் அனைவரிடமும் பாசத்துடனும், அன்புடனும் நடந்துகொள்வார்கள். அனைவரிடமும் நன்றாக உரையாடுவார்கள். இவர்களின உடையாடல் நேர்மையானதாகவும், திறந்த மனதுடனும் இருக்கும். அவர்கள் தெளிவாக தங்கள் தரப்பை வெளிப்படுத்துவார்கள். 

அவர்கள் நன்றாக கவனிப்பார்கள், அவர்களின் உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். அனுதாபம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

அவர்களுக்கு நிதி குறித்த அறிவு சிறுவயது முதலே இருக்கும்

குடும்பத்தினர்கள் அவர்களுக்கு நிதிகுறித்து தெரிந்துகொள்வார்கள். அவர்களுக்கு பொறுப்பான பண மேலாண்மையை வளர்த்தெடுப்பார்கள். அவர்களுக்கு பணம் குறித்த புரிதல் இருக்கும். 

அவர்களுக்கு பட்ஜெட், சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த புரிதல் இருக்கும். நிதி சுதந்திரம் குறித்தும் இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். பணம் தொடர்பான முடிவுகள் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் அறிந்துவைத்திருப்பார்கள்.

அவர்கள் மற்றவர்களை மதிப்பார்கள்

வெற்றியாளர் குழந்தைகள் மற்றவர்களை மதிப்பார்கள். அவர்களின் குடும்பத்தில் உள்ள வித்யாசங்களை பாராட்டுவர்கள். அவர்களுக்கு கலாச்சார்ம், இனம், மொழி, பொருளாதா வேற்றுமை கடந்து அனைவரையும் மதித்து நடக்க வேண்டும் என்பது புரியும். அவர் நீதி, நியாயம் என்று நடப்பார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்