குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை அன்பானவர்களாக வளர்த்தெடுக்கவேண்டுமா? அவர்களிடம் இதைக் கூறுங்கள்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை அன்பானவர்களாக வளர்த்தெடுக்கவேண்டுமெனில் நீங்கள் அவர்களிடம் என்ன கூறவேண்டும் என்று பாருங்கள்.

குழந்தைகளிடம் அன்பை வளர்த்தெடுக்கும் வார்த்தைகள் எது என்று தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் தினமும் நீங்கள் நல்ல வார்த்தைகளைக் கூறவேண்டும். அப்படி நீங்கள் கூறி வரும்போது, அது குழந்தைகளின் நடத்தையில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி அவர்களிடம் அன்பை வளர்க்கிறது. சில எளிய வார்த்தைகள் அவர்களிடன் அனுதாபம், மரியாதை, பாராட்டுக்கள் என அனைத்தையும் வளர்த்தெடுக்கிறது. இது நேர்மறை உறவுகளையும், அன்பான இதயத்தையும் வளர்க்கிறது. எனவே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.
தயவுசெய்து
உங்கள் குழந்தைகளுக்கு ‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைக் கற்றுக்கொடுங்கள். இது அமைதி, பொறுமை, மரியாதை, சிந்தனைகள் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள உதவுகிறது. இதை நீங்கள் தினமும் அவர்களிடம் பேசும்போது அவர்களிடம் அன்பு மற்றும் அனுதாப உணர்வுகளை வளர்க்கிறது.
மன்னிப்பு
உங்கள் குழந்தைகளிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதை அறிவுறுத்துவதன் மூலம், அது அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவும், குழந்தைகள் அவர்களின் செயல்களை புரிந்துகொள்ளவும் உதவுகிறது. இதனால் இரக்கம் மற்றும் உணர்வு ரீதியான அறிவுத்திறன் ஆகியவை வளர்கின்றன.
