Parenting Tips : உங்கள் குழந்தைகளை புத்தக புழுவாக்க வேண்டுமா? எனில் இதை செய்ய மறக்காதீர்கள்!
Parenting Tips : புத்தகங்கள் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் செய்தது இதைத்தான்.
உங்கள் குழந்தைகள் புத்தங்களை வாசிக்க வேண்டுமென விரும்பினால், நீங்கள் இதைப்படித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
பெற்றோர் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான ஒன்றையே தர விரும்புவார்கள். குழந்தைகளிடம் நல்ல பழக்கங்களை வளர்க்க விரும்புவார்கள்.
வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்
புத்தகத்ததை விரும்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகளும் வாசிப்பு பழக்கத்தை கைகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். குழந்தைகள் தங்களின் ஆரம்ப கால வயதிலே வாசிக்கத் துவங்குவது நல்லது.
அதற்கு பெற்றோர் அவர்களுக்கு நிறைய புத்தகங்களைக் கொடுக்க வேண்டும். மேலும் வாசிப்பதற்கான வசதி, வாய்ப்புக்களை பெற்றோர்தான் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
உதாரணமாகுங்கள்
குழந்தைகள் தங்களின் பெற்றோரின் வாசிப்பு பழக்கத்தை பார்க்கும்போது அவர்களும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பெற்றோர் வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, குழந்தைகளுக்கு புத்தகங்களின் மதிப்பும் தெரியவருகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் வாசிக்கவேண்டும் என்ற ஆவலை வளர்த்துக்கொள்கிறார்கள்.
ஒன்றாக சேர்ந்து வாசியுங்கள்
குழந்தைகளுடன் நீங்களும் சேர்ந்து வாசிப்பது அவர்களும் வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. இது புத்தகங்களுடன் ஒரு நேர்மறையான தொடர்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
தங்கள் குழந்தைகளுக்கு தினம் புத்தகங்கள் வாசித்து காட்டும் பழக்கமுள்ள பெற்றோர், இலக்கிய வளம், உரை நடை திறனை குழந்தைகளிடம் வளர்த்தெடுக்கிறார்கள் மற்றும் கதை சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறார்கள்.
நூலகங்கள் மற்றும் புத்தக கடைகளுக்கு அழைத்துச் செல்லுங்கள்
குழந்தைகளை நூலகங்கள் மற்றும் புத்தக கடைகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். இதனால் அவர்களுக்கு புத்தக உலகின் அறிமுகம் கிடைக்கும். இது அவர்களுக்கு புத்தம் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக அமையும்.
புத்தகங்கள் குறித்து பேசுங்கள்
குழந்தைகளை புத்தங்கள் மற்றும் கதைகள் குறித்து பேசுவதற்கு ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களுக்கு கிரிட்டிக்கல் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும்.
கேள்வி கேட்கும் பெற்றோர், அவர்களின் குழந்தைகளின் வாசிப்பு அனுபவங்கள் குறித்து ஆர்வம் காட்டுகிறார்கள் மற்றும் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்துகிறார்கள்.
வாசிப்பு சாதனைகளை கொண்டாடுங்கள்
தங்கள் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை பெற்றோர்கள் கொண்டாடவேண்டும். அப்படி செய்யும்போது அவர்களுக்கு வாசிப்பின் அருமை புரிகிறது.
புத்தகம் வாசிக்கும்போது மட்டுமல்ல, எதிலும் அவர்கள் சிறந்து விளங்கும்போதும், புதிய திறனை கற்கும்போதும் அவர்களை பாராட்டவேண்டும். ஒரு புத்தகத்தை அவர்கள் வாசித்து முடித்தால் பரிசு கொடுத்து பாராட்டுங்கள். இது அவர்களுக்கு வாசிப்பை தொடர்வதற்கு ஊக்குவிக்கும்.
வாசிப்புக்கு உகந்த சூழல்
வீட்டில் வாசிப்புக்கு உகந்த சூழல் இருக்குமானால், குழந்தைகள் உற்சாகமாக வாசிப்பார்கள். வாசிக்கும் சூழல், வாசிக்கும் நேரம், வாசிப்பை பழக்கமாக்குவது என குழந்தையின் அன்றாட வேலைகளுள் ஒன்றாக வாசிப்பை புகுத்துவது அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும்.
திரை நேரத்தை குறையுங்கள்
திரை நேரத்தைவிட எந்த பெற்றோர் வாசிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அது வாசிப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்.
எனவே அவர்களுக்கு எலக்ட்ரானிக் பொருட்களில் ஈடுபாட்டை குறைத்து, படிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். இது அவர்களை புத்திசாலியாகவும் மாற்றும்.
ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்
குழந்தைகளுக்கு பொதுவான தலைப்புகளைக் கூறி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இது அவர்களுக்கு பல்வேறு தலைப்புகளிலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்.
இதனால் அவர்களின் வாசிப்பும், அறிவும் விரிவடையும். இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்கவேண்டும் என்று ஆர்வத்தை ஏற்படுத்தும்.
வாசிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள்
பெற்றோர் தங்கள் குழந்தைகளை வாசிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவேண்டும். வாசிப்பு பழக்கத்தை மட்டும் ஊக்குவிக்கக் கூடாது. அதனுடன் தொடர்புடையவற்றையும் செய்ய ஊக்குவிக்கவேண்டும்.
கதை எழுதுவது, வார்த்தை விளையாட்டுகள், எழுத்தாளர்களின் நிகழ்வுகள் என அவர்களை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களின் மொழி மற்றும் கிரியேட்விட்டி ஆகியவற்றிற்காக அவர்களை பாராட்ட வேண்டும்.
டாபிக்ஸ்