Parenting Tips : உங்கள் குழந்தையை வெற்றியாளராக்க வேண்டுமா? இதோ எப்படியென்று தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் குழந்தையை வெற்றியாளராக்க வேண்டுமா? இதோ எப்படியென்று தெரிந்துகொள்ளுங்கள்!

Parenting Tips : உங்கள் குழந்தையை வெற்றியாளராக்க வேண்டுமா? இதோ எப்படியென்று தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 09, 2023 02:00 PM IST

Parenting Tips : மிக இளம் வயதிலேயே ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் அது சவாலான ஒன்றுதான், ஒருமுறை உங்கள் குழந்தைகளுக்கு இவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்துவிட்டால் போதும், அது உங்கள் குழந்தைகளில் உள்ள சிறப்பானவற்றை வெளிக்கொணரும்.

Parenting Tips : உங்கள் குழந்தையை வெற்றியாளராக்க வேண்டுமா? இதோ எப்படியென்று தெரிந்துகொள்ளுங்கள்!
Parenting Tips : உங்கள் குழந்தையை வெற்றியாளராக்க வேண்டுமா? இதோ எப்படியென்று தெரிந்துகொள்ளுங்கள்!

அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்

ஒரு நாளை உற்சாகமாக்குவதே அந்த நாளில் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக வைகளை செய்வதே, இது உங்களின் வேலை நேரத்தை மட்டும் அதிகரிக்கவில்லை, உங்களின் பலத்தையும், உங்களின் திறனையும் அதிகரிக்கிறது.

படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பக்கம் எழுதவேண்டும்

அந்த நாளில் நடந்தவை குறித்த உங்கள் யோசனைகள் மற்றும் நீங்கள் கவனித்தவற்றை ஒரு பேப்பரில் எழுதி வைக்க வேண்டும். அப்போது உங்கள் குழந்தைகள் அவர்கள் கடந்த நாளில் மீண்டும் வாழ்ந்து, அந்த நாள் குறித்து சிந்தித்து பார்ப்பார்கள். இதுபோல் ஆழ்ந்து சிந்திப்பது, அவர்களை சோர்வாக்கி, ஓய்வுக்கு தயாராக்கி, நல்ல ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கிறது.

தினம் ஒரு மணி நேர உடற்பயிற்சி கட்டாயம்

நீண்ட நேரம் மற்றும் நல்ல தரமான உடற்பயிற்சிகளுக்குப்பின்னர், உறங்குவது உடலுக்கு நல்லது. உங்கள் குழந்தையை உடற்பயிற்சி செய்ய ஊக்கப்படுத்துங்கள். அது அவர்களின் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. அதன் பலனை அதிகரிக்கவும் உதவுகிறது.

தினமும் 10 நிமிடம் ஒரே இடத்தில் இருங்கள்

அமைதியான இடத்தில் அமர்வது உங்களின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. இதனால் உங்கள் சுவாசம் மற்றும் இதய துடிப்பு இரண்டும் மெதுவாகும். உங்கள் குழந்தைக்கு பயம், பதற்றம் ஏற்பட்டால், இது அவர்களின் தோள்பட்டை, பின்புறம், தாடை மற்றும் கழுத்துப்பகுதி ஆகியவை ஓய்வு பெற உதவுகிறது.

இயற்கையுடன் அரை மணி நேரம் செலவிடுங்கள்

இயற்கையுடன் தினமும் அரை மணி நேரம் செலவிடுவது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. வெளியில் சிறிது நேரங்கள் உலாத்துவது உங்கள் குழந்தையின் மனஅழுத்தத்தை குறைக்கும் என்றும், உங்கள் குழந்தை வாழ்வின் அர்த்தம் மற்றும் குறிக்கோள் உணர அது உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

தினமும் 10 பக்கங்கள் படிக்க வேண்டும்

உங்கள் குழந்தையை தினமும் 10 பக்கங்கள் படிக்க பழக்கப்படுத்தினால், அது நல்லது. இதன் மூலம் அவர்கள் ஓராண்டில் மில்லியன் அளவுக்கு புதிய வார்த்தைகளை கற்கிறார்கள். இந்தளவு வாசிக்கும்போது அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் அவர்கள் உச்சத்தில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்

உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தண்ணீர் குடிப்பது மிகவும் தேவையாகிறது. அடிக்கடி தண்ணீர் பருகுவதால் நீங்கள் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டு, உடல் எடையை அதிகரிக்க பராமரிக்க உதவுகிறது. தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, அது குழந்தையின் மூட்டுகள் பலமாக உதவுகிறது. உடலின் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது.

இணையதள திறனை வளர்த்துக்கொள்ள அரை மணி நேரம் செலவிடுங்கள்

புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது எளிமையான ஒன்றுதான், உங்கள் குழந்தைக்கு பிடித்த பாடத்தை கற்பதற்கு தினமும் அரை மணி நேரம் செலவிட உதவுங்கள். ஒரு மாதம் முழுமையாக அதை செய்துவிட்டு, நீங்கள் குறிப்பிட்ட வேலையை சரியாக செய்துள்ளீர்களா என்று இறுதியில் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் எந்தளவு முடித்துள்ளீர்கள் என்று தெரியும்.

ஆரோக்கியமான உறக்க பழக்கத்தை பழக்குங்கள்

வழக்கமாக உறங்கி, வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தில் அவர்கள் சரியாக இருப்பதற்கு பெற்றோர் உதவுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தையின் உடல் சரியாக இயங்க அது உதவும். அது உங்கள் எடையை சரியாக பராமரிக்க உதவும். உங்களின் நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது. உங்களை மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.