Train Your Teen : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவ குழந்தைகளை கையாள்வது எப்படி? இதோ வழிகாட்டி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Train Your Teen : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவ குழந்தைகளை கையாள்வது எப்படி? இதோ வழிகாட்டி!

Train Your Teen : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவ குழந்தைகளை கையாள்வது எப்படி? இதோ வழிகாட்டி!

Priyadarshini R HT Tamil
Published Jul 26, 2024 06:00 AM IST

Parenting Tips : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ என்ற இந்த தொடரில் உங்கள் டீன் ஏஜ் பருவ குழந்தைகளை கையாள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Parenting Tips : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவ குழந்தைகளை கையாள்வது எப்படி? இதோ வழிகாட்டி!
Parenting Tips : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவ குழந்தைகளை கையாள்வது எப்படி? இதோ வழிகாட்டி!

உங்கள் குழந்தையின் 13 முதல் 18 வயது வரை அவர்களின் டீன்ஏஜ் பருவம் உள்ளது. அப்போது அவர்கள், புதிய திறன்களை கற்கிறார்கள். தினமும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். 

வளரிளம் பருவம் என்பது, முக்கியமான காலகட்டம், இந்த காலகட்டத்தில்தான் அவர்கள் வளர்ந்தவர்களாக இந்த சமுதாயத்தில் எப்படி வலம் வரப்போகிறார்கள் என்பது தெரியவரும். அவர்களின் வளர்ச்சியும் அபிரிமிதமாக இருக்கும்.

உங்கள் டீன்ஏஜ் குழந்தைகள் பல வழிகளில் சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் இருக்க முயல்வார்கள். ஆனாலும் அவர்கள் உங்களின் வழிகாட்டுதல் தேவை. உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் சவால்களை சந்திக்கும்போது, அவர்களுக்கு புதிய வாழ்வியல் திறன்களை கற்றுக்கொடுக்க வாய்ப்புக்கள் வழங்குகள்.

அவர்களுக்கு சுதந்திரமாகவும், பொறுப்புடனும் செயல்பட வாய்ப்புக்களை வழங்குங்கள். ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அடித்தளமாகும். உங்களின் பிணைப்பையும் வலுப்படுத்தும்.

ஆரோக்கியமாக பழக்க வழக்கங்களை கற்க ஊக்கப்படுத்துங்கள்

உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளுக்கு அவர்களின் உடலை எப்படி கவனித்துக்கொள்வது என கற்றுக்கொடுங்கள். தங்களை பராமரித்துக்கொள்வது எவ்வளவு நல்லது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். 

அவர்களுக்கு சில விதிகளை விதிப்பதைவிட அவர்களிடம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, உடற்பயிற்சி மற்றும் உறக்கம் ஆகியவை குறித்து பேசுவது நல்லது.

ஊட்டச்சத்து உணவுகள்

பெரும்பாலான வளரிளம் பருவத்தினருக்கு போதிய அளவு கால்சியம், இரும்பு, சிங்க் மற்றும் வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் கிடைப்பதில்லை. அதற்கு இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவர்களின் உணவு தேர்வும் ஒரு காரணமாகிறது.

உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளுக்கு சத்தான ஆரோக்கிய உணவுகள் மிகவும் அவசியம். அது அவர்களின் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கிடைக்கச் செய்கிறது. உணவில் இருந்து அவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கவேண்டும்.

டீன் ஏஜ் வயதினர் அவர்களின் வயது, எடை மற்றும் உயரத்துக்கு ஏற்ப கலோரிகள் எடுத்துக்கொள்ளவேண்டும். பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு 2,800 கலோரிகளும், பெண் குழந்தைகளுக்கு 2,200 கலோரிகளும் நாளொன்றுக்கு தேவை.

டீன் ஏஜ் வயதுடையவர்கள் அவர்களின் உணவை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அது பெரும்பாலும் துரித உணவுகளாக இருக்கும். எனவே உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளிடம் ஆரோக்கிய உணவுப்பழக்கத்தை வளர்த்தெடுப்பது மிகவும் அவசியம்.

அவர்கள் உடல் மற்றும் மூளைக்கும் சுறுசுறுப்பு கொடுக்கும் அளவுக்கு, பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்துங்கள். வாய்க்கு ருசியான உணவை அவ்வப்போது எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கலாம்.

அவர்களின் உடலின் அளவு மற்றும் தோற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப டீன் ஏஜ் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு உணவு உண்பதில் கட்டுப்பாடு இருக்கும். அதிகம் உணவு சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்ற அச்சம் வரும்.

இதனாலும் அவர்கள் உணவு உட்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். அவர்களுக்கு இந்த பருவத்தில் அது அதிகம் இருக்கும். எனவே அவர்களுக்கு அறிவுறுத்துங்கள் உணவு உட்கொள்வது, உடலை ஆரோக்கியமாக எப்படி பராமரிக்க வேண்டும் என்றும், அப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள்.