குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை நேர்வழிப்படுத்த இந்த நேர்மறையான வழிகள் உதவும்! அவை என்னவென பாருங்கள்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளை நேர்வழிப்படுத்தவேண்டுமெனில், நீங்கள் அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள நேர்மறையான வழிகளைக் கடைபிடிக்கலாம். அவை என்னவென்று பாருங்கள்.

உங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி? உங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதுதான் கடுமையான டாஸ்குகளுள் ஒன்றாகும். அவர்களுக்கு அனுதாபத்தின் வழியே வழிகாட்ட வேண்டும். மரியாதை அவர்களுக்கு சுய கட்டுப்பாட்டைத் தரும். அவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் திறனை மேம்படுத்தும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில டெக்னிக்குகள் உங்களுக்கு குழந்தைகளை ஒழுங்குபடுத்த உதவும். மேலும், பெற்றோர் – குழந்தைகள் உறவை வலுப்படுத்தவும் உதவும்.
ஒன்றாக இணைந்து பிரச்னைகளை சரிசெய்யுங்கள்
உங்கள் குழந்தைகளையும் உங்களுடன் சேர்ந்து பிரச்னைகளை தீர்ப்பதில் ஈடுபடுத்துங்கள். இது அவர்களிடம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பைக் கொடுக்கும். குழந்தைகளுக்கு இது சூழலை சரியாக மதிப்பிட உதவும். இதனால் அவர்களின் உணர்வுகள் மதிப்பட்ட எண்ணமும் அவர்களுக்கு மரியாதை கொடுப்பட்டதைப் போன்ற உணர்வும் கிடைக்கும்.
அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுங்கள்
அவர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள். அதன் வளர்சியைப் பாராட்டுங்கள். அந்த விஷயத்தில் நீ கடுமையான பணியை மேற்கொண்டாய் என அவர்களை உற்சாகப்படுத்துங்கள். நல்ல வேலை என்று கூறுவதற்கு பதில், இப்படி கூறினால், அது அவர்களுக்கு வளர்ச்சி மனநிலையைத் தரும். அவர்களை ஊக்கப்படுத்தும்.