தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : சொல் பேச்சு கேட்க மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை கீழ்படியவைக்கும் சூட்சமங்கள் இவைதான்!

Parenting Tips : சொல் பேச்சு கேட்க மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை கீழ்படியவைக்கும் சூட்சமங்கள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Jun 27, 2024 10:55 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தைகள் சொல் பேச்சு கேட்கமாட்டேன் என அடம்பிடிக்கிறார்களா? அவர்களை கீழ்படியவைக்கும் சூட்சமங்கள் இவைதான்!

Parenting Tips : சொல் பேச்சு கேட்மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை கீழ்படியவைக்கும் சூட்சமங்கள் இவைதான்!
Parenting Tips : சொல் பேச்சு கேட்மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை கீழ்படியவைக்கும் சூட்சமங்கள் இவைதான்!

ட்ரெண்டிங் செய்திகள்

எடுத்துக்காட்டாக இருப்பதும், நேர்மறை எண்ணங்களை விதைப்பதும் முக்கியம்

அதிகம் கீழ்படிதலுள்ள குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்கு மரியாதை, கவனிக்கும் திறன் மற்றும் பொறுப்புக்களை கற்றுக்கொடுப்பது என்பது ஆரம்ப காலத்திலேயே நடக்கவேண்டும். தொடர் பழக்கவழக்கங்கள் என்பது நல்ல பழக்கங்கள், சுயகட்டுப்பாடு, நேர்மை மற்றும் மற்றவர்களுக்கு உதவுவது ஆகியவை ஆகும்.

முழு கவனத்துடன் கவனிப்பது

அதிகம் கீழ்ப்படிதல் குணமுள்ள குழந்தைகள், மற்றவர்கள் பேசும்போது முழு கவனத்துடன் கவனிப்பார்கள். இது அவர்களுக்கு கண்களுடன் தொடர்புகொள்வதற்கும், குறுக்கிடாமல் இருப்பதற்கும் உதவும். அவர்கள் பதிலளிக்கும் முன்னர் என்ன கூறுகிறார்கள் என்பதில் கவனம் கொள்வார்கள். நல்ல கவனிக்கும் திறன், மரியாதை மற்றும் தெளிவாக தொடர்புகொள்வதை வளர்த்தெடுக்கிறது.

அதிகாரத்திற்கு மதிப்பளிக்கும் பண்பு

இந்த குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை மதிக்க வேண்டும் என்று குழந்தை வயதிலேயே கற்றுக்கொள்கிறார்கள். இதற்குப் பொருள் விதிகளை மதிப்பது, அவர்களி வாழ்வில் அதிகாரத்தின் பங்கு என்ன என்பதை அங்கீகரிப்பது, வழிகாட்டியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது என அனைத்தையும் கற்பார்கள்.

அன்றாட வாழ்வில் தொடர்ச்சியாக பயணிப்பார்கள்

தினசரி பழக்கவழங்கள் மற்றம் அட்வணைகளை பின்பற்ற அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். இது அவர்களின் அன்றாட உணவை நேரத்தில் எடுத்துக்கொள்வது, வீட்டுப்பாடங்கள் மற்றும் படுக்கை நேரம் உள்ளிட்ட அனைத்தும் முறையாக நடப்பதை உறுதிசெய்யும். இது அவர்களுக்கு பொறுப்புணர்வையும், ஒழுக்கத்தையும் வளர்த்தெடுக்க உதவும்.

கண்ணியம்

குழந்தை பருவம் முதலே இவர்களுக்கு நன்றி, மன்னிக்கவும் மற்றும் தயவு செய்து போன்ற வார்த்தைகள் கற்றுக்கொடுக்கப்படும். மற்ற கண்ணியமாகவும், அமைதியாகவும் நடந்துகொள்ளும் வழிமுறைகளும் கற்றுக்கொடுக்கப்படும். நல்ல பழக்கங்கள், மரியாதையான உரையாடலுக்கு வழிவகுத்து, சமூக இணக்கத்தை ஏற்படுத்தும்.

பொறுப்பேற்றுக்கொள்வது

கீழ்படியும் குணமுள்ள குழந்தைகள், அவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொள்வார்கள். இது அவர்களின் தவறுகளை அவர்கள் ஏற்பவும், விளைவுகளை புரிந்துகொள்ளவும், அனுபவங்களில் இருந்து கற்கவும், எதிர்காலத்தில் நல்ல தேர்வுகளை எடுக்கவும் உதவுகிறது.

மற்றவர்களுக்கு உதவி

மற்றவர்களுக்கு உதவவும், அனுதாபம் காட்டவும் இவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள். அது வீட்டுவேலைகளில் உதவுவதாக இருக்கட்டும் அல்லது வகுப்பு தோழர்களிடம் அன்பு காட்டுவதாக இருக்கட்டும் அனைத்து வகையிலும் உதவியாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவுவது, இணைந்து வாழவும், மற்றவர்கள் மீது அக்கறை குணத்தை வளர்க்கவும் உதவும்.

சுயகட்டுப்பாடு

குழந்தைகளின உணர்வுகள் மற்றும் தூண்டுதல்களைக் கையாளக் கற்றுக்கொடுப்பார்கள். இது பொறுமையாக காத்திருப்பதாகட்டும், விரக்தியை கையாள்வது ஆகட்டும், சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது ஆகட்டும், எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு இந்த நல்ல பழக்கங்கள் கற்றுக்கொடுக்கப்படும்.

நேர்மையை பழகுவது

நேர்மை மிகவும் முக்கியமான ஒரு குணம் ஆகும். கீழ்படிதல் உள்ள குழந்தைகள் உண்மையை மட்டுமே பேசுவதற்கு கற்பிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்களில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பார்கள். நேர்மை மற்றும் உண்மையானவராக இருப்பதற்கு நேர்மை மிகவும் அவசியம் என்பதை புரிந்துகொள்வார்கள்.

சொல் பேச்சை கேட்பார்கள்

சரியான மற்றும் துல்லியமான தகவல்களை அவர்கள் கடைபிடிக்கவேண்டும் என்று பழக்கப்படுத்தப்படுவார்கள். இந்தப்பழக்கங்கள், அவர்களின் முக்கிய வேலைகளை அவர்கள் முடிப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர்கள் புரிந்துகொள்வார்கள். இது அவர்கள் மீது நம்பகத்தன்மையை வளர்த்தெடுக்கும்.

எல்லைகளை மதிப்பது

தனது மற்றும் அடுத்தவர்களின் எல்லைகளை மதிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் அனுமதி கேட்பார்கள், தனிப்பட்ட இடத்தை புரிந்துகொள்வார்கள், மற்றவர்களின் தனித்தன்மைக்கும் மதிப்பு கொடுப்பார்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.