Parenting Tips : குழந்தைகளின் தன்னம்பிக்கையை குலைக்கும் விஷயங்கள் இவைதான்! அத மட்டும் செஞ்சுடாதீங்க!
Parenting Tips : குழந்தைகளின் தன்னம்பிக்கையை குலைக்கும் விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொண்டு, அதை மட்டும் செய்துவிடாதீர்கள்.

குழந்தைகளின் தன்னம்பிக்கையை குலைப்பவையாக கூறப்படுவது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகள் எப்படி தன்னம்பிக்கையை இழக்கிறார்கள்?
தன்னம்பிக்கை, குழந்தை வளர்ச்சியின் முக்கியமான ஒன்றாகும். அதுதான் அவர்களை வாழ்விலும், தாழ்விலும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை நிரூபிக்கும். சில நடவடிக்கைக மற்றும் நடத்தைகள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை குலைத்துவிடுபவை. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையில்லாதபோது விமர்சனம் செய்யக்கூடாது
ஒரு குழந்தையிடம் தொடர்ந்து அதன் முயற்சிகள் எதுவும் போதிய அளவு இல்லை என்று கூறிக்கொண்டே இருக்கக்கூடாது. அவர்களுக்கு அவர்களின் திறன்கள் மீதே அவநம்பிக்கை ஏற்படும். அவர்கள் புதிய சவால்களை ஏற்கமாட்டார்கள். வெட்கப்படுவார்கள்.
அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். எனவே அவர்களை விமர்சிக்காமல் அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்வதற்கும், அவர்களின் பலத்தை அடிக்கோடிட்டு காட்டவும் வேண்டும்.
அதிகம் பாதுகாக்கும் பெற்றோர்
கெட்ட விஷயங்களில் இருந்து குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாக்க விரும்புவது இயல்புதான். ஆனால் அதிகமாக பாதுகாப்பதும், குழந்தைகளின் தன்னம்பிக்கையை குலைக்கும். குழந்தைகளை தெரிந்துகொள்ளவிடாமல் கட்டுப்படுத்தி வைக்கும்போது அவர்கள் எவ்வித முயற்சியுடம் செய்ய மாட்டார்கள்.
அவர்களுக்கு அச்ச உணர்வு ஏற்படும். எந்த ஒன்றுக்கும் பயப்படக்கூடாது. புதிய சூழல்களை சந்திப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் அவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம். அது இல்லாமல் போய்விடும்.
அதிக எதிர்பார்ப்பு
அதிகம் எதிர்பார்ப்பது, குழந்தைகள் சாதிக்க ஊக்கம் கொடுக்கும். ஆனால், அவர்கள் அது மிக அதிகமாகும்போது, அது எதிராக மாறிவிடும். குழந்தைகள் தங்கள் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று நினைக்கும்போது, அவர்கள் முயற்சியையே கைவிட்டுவிடுகிறார்கள். அவர்கள் தோற்றுவிடுவோம், வெற்றியே பெற முடியாது என நினைக்கிறார்கள்.
ஒப்பீடு எனும் சாத்தான்
குழந்தைகளை அவர்களின் உடன் பிறந்தவர்கள், மற்ற குழந்தைகள் அல்லது நண்பர்கள், பள்ளி மாணவர்கள் என மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் தன்னம்பிக்கை முற்றிலும் குலைந்துவிடுகிறது. அது அவர்களுக்கு பொறாமை அல்லது போதாமையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு நாம் செய்யவே முடியாது என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது.
பாராட்டுகள் அவசியம்
குழந்தைகளின் முயற்சிகளை அங்கீகரிக்கவில்லையென்றால், அவர்களை யாரும் மதிக்கவில்லை மற்றும் அவர்கள் எதற்கும் உபயோகமில்லை என்றும் எண்ண துவங்குவார்கள். குழந்தைகளின் முயற்சிகளை எப்போதும் பாராட்டவேண்டும்.
அவர்கள் செய்யும் செயல்கள் மிகச் சிறியதாக இருந்தாலும் அதை பாராட்டுவது அவர்களின் மதிப்பை அதிகரிப்பதாகவும், அவர்களை ஊக்கப்படுத்தி, தொடர்ந்து முன்னேறிச் செல்ல அறிவுறுத்துவதாகவும் இருக்கும்.
கொஞ்சுவது ஆபத்து
குழந்தைகளுக்கு அன்பும், ஆதரவும் கொடுக்கவேண்டியது முக்கியம் தான். ஆனால் அவர்களை அதிகம் கொஞ்சுவது கூடாது. அது அவர்களின் நம்பிக்கையைப் போக்கும்.
குழந்தைகளுக்கு அதிகப்படியாக எதையும் செய்யும்போது, அது அவர்களை சார்ந்திருக்கச் செய்கிறது. இதனால் அவர்கள் மற்றவர்களை சார்ந்தே வாழ்ந்து, எந்த பிரச்னை வந்தாலும், அவர்களால் அதை எதிர்கொள்ள முடிவதில்லை. அவர்கள் தாங்களாக எதுவும் செய்யவும் முனைவதில்லை.
உணர்வுகள் என்றால் என்ன?
குழந்தைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவு மிகவும் முக்கியம். அவர்களின் உணர்வுகளை மதிக்கவில்லையென்றாலோ அல்லது அதை மதிக்கவில்லையென்றாலோ அவர்கள் பாதுகாப்பின்றியும், மதிக்கப்படாமலும் இருப்பதாக உணர்வார்கள்.
குழந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது மட்டுமே அவர்கள் தங்களின் மதிப்பு மீது வலுவான அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
தவறுகள் மற்றும் தண்டனை
கற்றல் காலத்தில் தவறுகள் என்பது இயற்கைதான், ஆனால் கடுமையான தண்டனைகள் அவர்களுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்திவிடும். அது அவர்களின் தன்னம்பிக்கையையும் குலைத்துவிடும். எனவே அவர்களின் தவறுகளுக்காக அவர்களுக்கு தண்டனைகள் கொடுக்கும்போது, அவர்களுக்கு அது கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக இருக்கட்டும்.
அதிக எல்லைகள் மற்றும் விதிகள்
குழந்தைகளுக்கு தெளிவான, தொடர்ச்சியான எல்லைகள் வகுக்கப்படவேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் புரிதல் மிகவும் அவசியம். அவர்களுக்கு விதிகள் தொடர்ச்சியாக இல்லாமலும், கணிக்க முடியாததாகவும் இருந்தால், அது குழப்பம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.

டாபிக்ஸ்