தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips These Are The Most Common Reasons Why Children Fail In Exams Ways To Teach Them

Parenting Tips : குழந்தைகள் தேர்வில் தோற்பதற்கான பொதுவான காரணங்கள் இவைதான்! அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வழிகள்!

Priyadarshini R HT Tamil
Mar 16, 2024 12:49 PM IST

Parenting Tips : பாடங்களை சரிவர புரிந்துகொள்ளாதது, முக்கிய பகுதிகளை தவறாக புரிந்துகெள்வதும் தேர்வில் தோல்வி அடைவதற்கான காரணங்கள் ஆகிறது. சரியாக புரிந்துகொள்ள முடியாததால் குழந்தைகள் தேர்வில் சரியாக பதிலளிக்க முடியாமல் போகிறது.

Parenting Tips : குழந்தைகள் தேர்வில் தோற்பதற்கான பொதுவான காரணங்கள் இவைதான்! அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வழிகள்!
Parenting Tips : குழந்தைகள் தேர்வில் தோற்பதற்கான பொதுவான காரணங்கள் இவைதான்! அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வழிகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

தயாரிப்பு குறைவு

போதிய அளவு அல்லது தேவையான அளவு படிக்காதது. மோசமான நேர மேலாண்மை, தள்ளிப்போடுவது ஆகியவை தேர்வுக்காக தயாரிப்பதற்கு போதிய அளவு நேரமும், உழைப்பும் இல்லாமையை காட்டுகிறது. இதனால் மதிப்பெண்கள் குறைகிறது.

பாடங்கள் குறித்த புரிதலின்மை

பாடங்களை சரிவர புரிந்துகொள்ளாதது, முக்கிய பகுதிகளை தவறாக புரிந்துகெள்வதும் தேர்வில் தோல்வி அடைவதற்கான காரணங்கள் ஆகிறது. சரியாக புரிந்துகொள்ள முடியாததால் குழந்தைகள் தேர்வில் சரியாக பதிலளிக்க முடியாமல் போகிறது.

தேர்வு பயம்

தேர்வு என்றால் பயம், மனஅழுத்தம் மற்றும் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் ஆகியவை, நினைவாற்றல் திறனை பாதிக்கிறது. இதனால் கவனமின்மை ஏற்படும். இதனால் தேர்வுகளில் சரிவர பதிலளிக்க முடியாமல் போவதால் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைகிறார்கள்.

படிக்கும் நுட்பங்கள் போதாமை

மனப்பாடம் செய்தல், செயல்படுத்தி பார்க்காத அல்லது பரிசோதித்து பார்க்காத கற்றல் முறை ஆகிய யாவும், புரிதலை குறைக்கிறது. இதனால் போதிய தகவல்களை மனதில் வைத்துக்கொள்ள முடியாமல் போகும். இதனால் தேர்வில் தோல்வி ஏற்படுகிறது.

கவனச்சிதறல் மற்றும் கவனக்குறைவு

சமூக வலைதளங்கள், எலக்ட்ரானிக் டிவைஸ்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் ஏற்படும் வெளிப்புற கவனச்சிதறல்கள் ஆகியவை கவனிக்கும் திறனை குறைக்கிறது. இதனால் நன்றாக படிக்க முடியாமல் போகிறது மற்றும் தேர்வில் சரியான பதில்களை எழுதும் திறனை குறைக்கிறது.

உடல் நலக்கோளாறுகள்

உடல் நல அல்லது மனநலக்கோளாறுகள், காய்ச்சல், சோர்வு, மனஅழுத்தம் போன்றவையும் குழந்தைகள் சரியாக படிக்காததற்கு காரணமாகின்றன. இதனால் குழந்தைகளால் கவனிக்க முடியாமல் போகிறது. படித்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் அவர்களால் தேர்வில் சரியாக எழுத முடியாமல் போகிறது.

மோசமான நேர மேலாண்மை

படிப்பதற்கு போதிய சேரம் ஒதுக்காமதல், மற்ற வேலைகளுடன் படிக்கும் சமமாக நேரம் ஒதுக்காமல், காலக்கெடுவுக்குள் வேலையை சரியாக முடிக்காமல், கடைசி நேரத்தில் பரபரப்பாக தேர்வுக்கு தயாராவதால், சரியாக தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது.

போதிய ஊக்கமின்மை

குழந்தைகளுக்கு போதிய ஊக்கமின்மை, ஆர்வமின்மை, தெளிவான இலக்குகள் இல்லாமை மாணவர்களுக்கு ஊக்கமளிக்காமல், படிப்பில் அவர்கள் ஆர்வம் காட்டாமல், தேர்வுகளுக்கு தயாரிப்பதில் அதிகம் ஈடுபடாமல் இருப்பதும் தேர்வில் அவர்கள் தோல்வியடைவதற்கு காரணமாகிறது.

ஆசிரியர்களுடன் வாக்குவாதம்

பள்ளியில் கொடுக்கப்படும் அசைன்மென்ட்களை சரியாக புரிந்துகொள்ளாமல், தெளிவான புரிதல் இல்லாமல், புரியாத பாடத்தை சரியாக கற்றுக்கொள்ளலாம் போவதால், ஆசிரியரிடம் முறையாக சந்தேகங்களை தீர்க்காமல் போவது ஆகியவையம் தேர்வில் தோற்பதற்கு காரணமாகிறது.

ஏமாற்றுதல்

படிப்பதாக ஏமாற்றுவது, காப்பியடிப்பது, கற்றலை குறைத்து மதிப்பிடுவது, நேர்மையை அழிப்பது போன்றவற்றால் நீங்கள் நீண்ட நாட்கள் படிப்பதில் வெற்றிபெற முடியாது.

உங்கள் குழந்தைகள் தேர்வில் தோல்வியடைந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்துகொண்டு, நீங்கள் அவர்களுக்கு உதவுங்கள். ஆனால் அவர்கள் மதிப்பெண் குறைந்தால் அவர்களை திட்டுவதால் எந்த பயனும் கிட்டாது. ஏனெனில் குழந்தைகளுக்கு சில விஷயங்களை பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

 

WhatsApp channel

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்