Parenting Tips : சோம்பேறி குழந்தைகளை வழிக்கு கொண்டு வர உதவும் மந்திரங்கள் இவைதான்!-parenting tips these are the mantras to bring lazy kids back on track - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : சோம்பேறி குழந்தைகளை வழிக்கு கொண்டு வர உதவும் மந்திரங்கள் இவைதான்!

Parenting Tips : சோம்பேறி குழந்தைகளை வழிக்கு கொண்டு வர உதவும் மந்திரங்கள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Jan 27, 2024 04:27 PM IST

Parenting Tips : சோம்பேறி குழந்தைகளை வழிக்கு கொண்டு வர உதவும் மந்திரங்கள் இவைதான்!

Parenting Tips : சோம்பேறி குழந்தைகளை வழிக்கு கொண்டு வர உதவும் மந்திரங்கள் இவைதான்!
Parenting Tips : சோம்பேறி குழந்தைகளை வழிக்கு கொண்டு வர உதவும் மந்திரங்கள் இவைதான்!

நான் உன்னை நம்புகிறேன், உன்னை நீ நன்றாக பார்த்துக்கொள்வாய்

உங்கள் குழந்தைகளின் திறன்களை நீங்கள் நம்புகிறீர்கள் மறறும் அவர்களின் பொறுப்புக்களை அவர்களால் கையாள முடியும் என்ற என்பதையும் நீங்கள் அவர்களுக்கு உணர்த்தினால், அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க உதவும். இது நம்பிக்கையை மட்டும் வளர்க்கவில்லை. மேலும் அவர்களின் செயல்களுக்கு சொந்தம் கொண்டாட அல்லது பொறுப்பேற்க அவர்களை ஊக்குவிக்கிறது. பொறுப்பை உருவாக்குகிறது.

அன்புதான் நீ மற்றவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பரிசு

உங்கள் குழந்தைகளுக்கு அன்பை போதிக்க வேண்டும். அது உங்கள் குழந்தைகளை வடிவமைக்க உதவும் சிறந்த கருவி. அன்பாக இருக்க வேண்டும் என்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு நீங்கள் அவர்களுக்கு பரிவுடன் நடந்துகொள்வதையும், கீழ்படிதலுக்கு நேர்மறையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுக்க வேண்டும்.

உங்கள் மனம் வேலை செய்யும் வழியை நான் விரும்புகிறேன்

உங்கள் குழந்தைகளின் அறிவு மற்றும் கற்பனைத்திறன், கிரியேட்டிவிட்டு ஆகியவற்றை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். இது அவர்களின் தனித்தன்மையை வளர்க்க உதவுகிறது. மேலும் அவர்களின் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. பாராட்டுபெறும் குழந்தைகள் அதிக ஊக்கம் பெற்றவர்களாகவும், கீழ்படிதல் உள்ளவர்களாகவும் விளங்குவார்கள்.

இதை செய்ய உன்னால் முடியும்

உங்கள் குழந்தையின் தன்மைபிக்கையை அதிகரிக்கவும், அவர்களிடம் கீழ்படிதல் உணர்வை வளர்தெடுக்கவும் இதை நீங்கள் அவர்களிடம் மீண்டும், மீண்டும் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். 

அவர்களின் திறன்கள் குறித்து அவர்களிடம் மீண்டும், மீண்டும் இதுபோன்ற வாசகங்களைக் கூறி, எடுத்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்துவது, சோம்பேறிதனத்தை ஒழித்து, நம்மால் முடியும் என்ற மனநிலை ஏற்படுத்தும். அதற்கு இந்த வாசம் உதவும்.

நீங்கள் உறுதியானவர்கள் மற்றும் செய்யக்கூயை திறன் பெற்றவர்கள்

உங்கள் குழந்தைகளின் பலங்கள் மற்றும் திறன்களை எப்போதும் அவர்களிடம் எடுத்துக்கூறிக்கொண்டே இருங்கள். அது அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை உருவாக்கி, அவர்களின் சுய அடையாளத்தை நிலைநாட்ட உதவும். 

ஒரு குழந்தை தன்னை பலம் வாய்ந்தவராகவும், திறமை வாய்ந்தவராகவும் உணர்ந்தால், அவர்கள் சவால்களை உற்சாகத்துடன் ஏற்பவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் கீழ்படிதல் இருக்கும். எனவே அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அது அவர்களை வளர்த்தெடுக்கும்.

நான் உனது முயற்சி மற்றும் கடின உழைப்பு இரண்டையும் பாராட்டுகிறேன்

உங்கள் குழந்தைகளின் முயற்சிகளையும், அவர்கள் கடின உழைப்பின் முக்கியத்துவத்தையும் நீங்கள் அங்கீகரிக்கவேண்டும். அவர்களின் முயற்சிகளுக்காக அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களின் முயற்சிகளுக்கு மதிப்பு கிடைத்த உணர்வுகளை அவர்களுக்கு ஏற்படுத்தும். அவர்களை ஊக்கப்படுத்தி, மேலும் முயற்சி செய்ய வலியுறுத்தும். அவர்களின் பணிகளை சிறப்பாக செய்ய ஊக்கம் தரும்.

உங்களிடம் சிறப்பாக யோசனைகள் உள்ளது

கிரியேட்டிவிட்டியாக அவர்களை உற்சாகப்படுத்துவது முக்கியம். அது அவர்களை ஊக்கப்படுத்தும். அவர்களின் கற்பனைத்திறன் நிறைந்த சிந்தனைகளை நீங்கள் தூண்டிவிடுவதன் மூலம், அவர்களின் பிரச்னைகளை சரிசெய்யவும், அவர்களின் கற்பனைகளை வளர்க்கவும் உதவும். இந்த நேர்மறையான தூண்டுதல், கீழ்படிதல் உள்ள குழந்தைகளை உருவாக்கும்.

நீ புதிய விஷயங்களை முயற்சிகளை மேற்கொள்வதற்காக நான் பெருமை கொள்கிறேன்

உங்கள் குழந்தைகள் அவர்களின் கம்ஃபோர்ட் சோனை விட்டு வெளியேறும்போது அவர்களை அங்கீகரித்து கொண்டாடினால், அவர்கள் மேலும் உற்சாகமடைவார்கள். 

அவர்கள் புதிய முயற்சிகளை செய்யும்போது, அவர்களை பாராட்டினால், அது அவர்களின் பறந்த சிந்தனை மற்றும் முயற்சிகளுக்கு வழிவகுக்கும். அது சாதனை உணர்வு மற்றும் நேர்மறையான எண்ணங்களை வளர்க்க உதவும். அது அவர்களின் பொறுப்பை வளர்க்க உதவும்.

நீ இந்த குடும்பத்தின் முக்கிய அங்கம்

உங்கள் குழந்தைகள் உங்கள் குடும்பத்தின் முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மதிப்புமிக்கவர்களாகவும், முக்கியமானவர்களாகவும் அவர்களை அங்கீகரிப்பது, அவர்கள் குடும்பத்தில் பங்களிக்க ஊக்கமளிக்கும். 

சொந்தம் என்ற உணர்வை வெளிப்படுத்த உதவும். அவர்களின் முக்கிய பங்கை பராமரிப்பதில் கீழ்படிதலுடன் நடந்துகொள்ள உதவுங்கள்.

எது வந்தாலும் நான் உன் மீது கொண்ட அன்பு மாறாது

நிபந்தனையற்ற அன்பு வலுவான பெற்றோர்-குழந்தை அடித்தளத்தை உருவாக்குகிறது. உங்கள் குழந்தையிடம் உங்களின் அன்பு, நிலையானது என்பதை அவர்களிடம் அறிவுறுத்திக்கொண்டிருக்க வேண்டும். 

அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் நிலையான அன்பை வழங்கும்போது, அது அவர்களுக்கு பாதுகாப்ப உணர்வை கொடுக்கும். சூழலுடன் ஒத்துப்போக அறிவுறுத்தும். இந்த பாதுகாப்பு உணர்வு அவர்களை கீழ்படிதலுடன் நடந்துகொள்ள உதவுகிறது. அது அவர்கள் தொடர்ந்து முன்னேற பாதை வகுக்கிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.