Parenting Tips : உலகிலே மகிழ்ச்சியான குழந்தைகள் டச்சு குழந்தைகள்தானாம்! அவர்கள் பெற்றோர் செய்வது இதைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உலகிலே மகிழ்ச்சியான குழந்தைகள் டச்சு குழந்தைகள்தானாம்! அவர்கள் பெற்றோர் செய்வது இதைதான்!

Parenting Tips : உலகிலே மகிழ்ச்சியான குழந்தைகள் டச்சு குழந்தைகள்தானாம்! அவர்கள் பெற்றோர் செய்வது இதைதான்!

Priyadarshini R HT Tamil
May 14, 2024 03:24 PM IST

Parenting Tips : உலகிலே மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்க்கும் டச்சு பெற்றோர்கள் செய்வது என்ன தெரியுமா?

Parenting Tips : உலகிலே மகிழ்ச்சியான குழந்தைகள் டச்சு குழந்தைகள்தானாம்! அவர்கள் பெற்றோர் செய்வது இதைதான்!
Parenting Tips : உலகிலே மகிழ்ச்சியான குழந்தைகள் டச்சு குழந்தைகள்தானாம்! அவர்கள் பெற்றோர் செய்வது இதைதான்!

வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும்

விளையாட்டு பூங்காக்களில் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது அல்லது காடுகளுக்கு அழைத்துச்செல்வது என டச்சுக்குழந்தைகள் வெளியில் விளையாடுவதற்கும், வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இது குழந்தை வயது முதலே அவர்கள் செய்கிறார்கள். இதனால் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுகிறது.

சுதந்திரத்தை வளர்த்தல்

குழந்தை வயதிலேயே டச்சுக்குழந்தைகள் சுயமாக தங்களின் வேலைகளை செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் முடிவுகளை அவர்களே எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது அவர்களுக்கு சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இதனால் அவர்களின் திறன்களை அறிந்துகொள்கிறார்கள். டேலும் அவர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி மற்றும் அவர்களால் மீண்டு எழ முடிவது இதனால் சாத்தியமாகிறது.

சமமான வாழ்க்கைமுறை

டச்சு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சமமான வாழ்க்கையைக் கொடுக்கிறார்கள். பள்ளி, விளையாட்டு மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என அவர்களின் நேரம் ஒவ்வொன்றுக்கும் சமஅளவில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அவர்களுக்கு, ஓய்வாக இருப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு மனஅழுத்ததை கையாளவும், வாழ்வை நேர்மறையான எண்ணங்களுடன் அணுகுவதற்கும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

திறந்த உரையாடல்

டச்சு பெற்றோர்கள், திறந்த உரையாடலை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளின் உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் எதையும் மறைக்காமல் இருக்கிறார்கள். இது நம்பிக்கை மற்றும் புரிதலை குடும்பத்திற்குள் ஏற்படுத்துகிறது. உங்கள் குழந்தைகளுக்கு சவால்களை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கிறது. மேலும் தேவைப்படும்போது, அவர்களுக்கு ஆதரவையும் வழங்குகிறது.

கலாச்சாரம்

டச்சு மக்கள் வேற்றுமையையும், அதில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறார்கள். குழந்தைகளுக்கு பல்வேற கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். மொழிகளையும் தெரிந்துகொள்கிறார்கள். 

பல கோணங்களும் அவர்களுக்கு, குழந்தை வயது முதலே காண்பிக்கப்படுகிறது. இந்த பல கலாச்சார சூழல்களையும் அவர்களுக்கு காட்டுகிறது. மேலும் இதனால் அவர்கள் அனுதாபமிக்கவர்களாகிறார்க. சகிப்புத்தன்மை நிறைந்தவர்களாகவும், ஏற்றுக்கொள்பவர்களாகவும் வளர்கிறார்கள். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது

குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து தரமான நேரத்தை செலவிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து உணவு உண்கிறார்கள். வார இறுதி நாட்களில் வெளியே செல்கிறார்கள். அவர்களின் பொழுதுபோக்கை பகிர்ந்துகொள்கிறார்கள். இதனால் குடும்பத்தினர் இடையே ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. இது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கிறது.

கல்வி

பள்ளிப்பாடத்தில் அவர்கள் முன்னேறுவதை மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டுவதற்கு விழைகிறார்கள். குழந்தைகள் அவர்களின ஆர்வங்களை வளர்த்தெடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கிரிட்டிக்கல் சிந்தனைகளை வளர்க்க உதவுகிறார்கள். அவர்களுக்கு பிடித்ததை செய்ய ஊக்குவிக்கப்டுகிறது. இதனால் அவர்கள் நிறைவான வாழ்வு வாழ்கிறார்கள்.

பணி – வாழ்க்கை சமநிலை

வாழ்க்கை மற்றும் பணி இரண்டையும் சமமாக பிரித்து நேரம் செலவிட டச்சு பெற்றோர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் வெளியே சென்று பல மணி நேரம் வேலை செய்தாலும், வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால், குடும்பத்தினருடன் அர்த்தமுள்ள உரையாடல் நடைபெறுகிறது மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுடன் உணர்வுரீதியான பிணைப்பு உருவாகிறது.

குறைந்தபட்ச வாழ்வு

குறைந்தபட்ச வாழ்வியல் முறையை டச்சு மக்கள் வாழ நினைக்கிறார்கள். அவர்கள் பொருட்களை உடைமையாக்கிக்கொள்வதைவிட, அனுபவங்களை பெற நினைக்கிறார்கள். உண்மையாக எது நல்லது என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். குழந்தைகள் சிறிய விஷயத்தில் கூட மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொடுக்கப்படுகிறார்க்ள். நன்றி உணர்வை வளர்க்கிறார்கள்.

கிரியேட்விட்டியை ஊக்குவிக்கிறார்கள்

டச்சு பெற்றோர்கள், கிரியேட்டிவிட்யை ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளின் கற்பனையை வளர்க்க இது உதவுகிறது. அவர்களுக்கு கலை, கண்டுபிடிப்புகள், தயாரிப்புகள் என அனைத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்புக்களை வழங்குகிறார்கள்.

உணர்வு நுண்ணறிவு

டச்சு பெற்றோர்கள், உணர்வு நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை இனம்கண்டு, அதை ஏற்று, அதை கையாள கற்றுக்கொடுக்கிறார்கள்.

தோல்வியை தழுவ அனுமதிக்கிறார்கள்

தவறுகளுக்காக அச்சம் கொள்வதற்கு பதில், அவர்களுக்கு தோல்விகளை கற்பதற்கும், வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதவேண்டும் என ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு விடாமுயற்சி அதிகரிக்கிறது. நேர்மறை எண்ணங்கள், சவால்களை சந்திக்கும் திறன், மீண்டெழும் சக்தி ஆகியவை உருவாக வழிவகுக்கிறது.

விளையாட்டு நேரம்

டச்சு பெற்றோர்கள், அவர்களின் குழந்தைகளை நாள் முழுவதும் விளையாட அனுமதிக்கிறார்கள். இதனால் குழந்தைகளின கற்பனைத்திறன் வளரும். அவர்களுக்கு பெரியவர்களின் வழிகாட்டல் தேவைப்படாமல் போகிறது.

இயற்கை பாதுகாப்பு

டச்ச பெற்றோர்கள், குழந்தைகளுக்கு இயற்கையை பாதுகாப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு இயற்கை உலகை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்துகிறார்கள். நமது உலகையும், நமது பூமியையும் காப்பது நமது கடமை என்பதையும் குழந்தைகளுக்கு வலியுறுத்தி, அவர்களுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை தூண்டுகிறார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.