குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : அப்துல் கலாமின் இந்த வாக்கியங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்; அவர்களை உற்சாகப்படுத்தும்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துகலாமின் வாக்கியங்களை கூறினால் அவர்கள் உற்சாகமாவார்கள். அவை என்னவென்று பாருங்கள்.

கலாமின் வார்த்தைகள், ஞானத்தின் திறவுகோலாகும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஒரு அறிவார்ந்த அறிவியல் அறிஞர் மட்டும் கிடையாது. அவருக்கு தொலைநோக்குப் பார்வை இருந்தது. இவர் இளந்தலைமுறையினரின் சக்தியை அறிந்து வைத்திருந்தார். இவரின் வார்த்தைகள் குழந்தைகளை, மாணவர்களை எப்போதும் ஈர்பவையாகும். இவரின் கனவு காணுங்கள் என்ற வாசகம் பிரபலமானதும் ஆகும். மேலும் கடின உழைப்பு மற்றும் அடக்கமாக நடந்துகொள்வது என அனைத்தும் குழந்தைகளுக்கு தேவையானவை. இவை தவிர அப்துல் கலாம் கூறிய வார்த்தைகளைப் பாருங்கள்.
வானத்தைப் பாருங்கள் நாம் தனியாக இல்லை
வானத்தைப் பாருங்கள் நாம் தனியாக இல்லை என்ற இவரின் வாசகம், இந்த உலகம் முழுவதும் நமது நண்பர்கள் என்பதைக் குறிக்கிறது. நாம் எப்போதும் சிறப்பானதை மட்டுமே இந்த உலகுக்கு கொடுக்கவேண்டும் என்பதை அது குறிக்கிறது. இது குழந்தைகளை அவர்களை சுற்றியுள்ள உலகுடன் தொடர்புகொள்ளவும், நேர்மறை எண்ணங்களையும் விதைக்கிறது. இது விடாமுயற்சியை ஊக்கப்படுத்துகிறது.
நம் அனைவரின் திறமையும் ஒரே மாதிரியானது கிடையாது
நம் அனைவரின் திறமையும் ஒரே மாதிரியானது கிடையாது. ஆனால் நமக்கு திறமைகளை வளர்த்துக்கொள்ள சமமான வாய்ப்புக்கள் கிடைக்கும். இது குழந்தைகளுக்கு வெற்றி என்பது ஆரம்பம் முதலே நீங்கள் சிறப்பானவர்களாக இருப்பதால் கிடைப்பதல்ல, ஆனால் நீங்கள் வாய்ப்புக்களை பயன்படுத்தி கற்பது மற்றும் வளர்வதன் மூலம் மட்டுமே சாத்தியமாகிறது என்பதைக் குறிக்கிறது.