Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு புதிய வார்த்தைகளை கற்றுக்கொடுத்து, அவர்களின் மொழித்திறனை வளர்க்கலாம் வாங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு புதிய வார்த்தைகளை கற்றுக்கொடுத்து, அவர்களின் மொழித்திறனை வளர்க்கலாம் வாங்க!

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு புதிய வார்த்தைகளை கற்றுக்கொடுத்து, அவர்களின் மொழித்திறனை வளர்க்கலாம் வாங்க!

Priyadarshini R HT Tamil
Updated Jun 21, 2024 09:18 AM IST

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு புதிய வார்த்தைகளை கற்றுக்கொடுத்து, அவர்களின் மொழித்திறனை வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு புதிய வார்த்தைகளை கற்றுக்கொடுத்து, அவர்களின் மொழித்திறனை வளர்க்கலாம் வாங்க!
Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு புதிய வார்த்தைகளை கற்றுக்கொடுத்து, அவர்களின் மொழித்திறனை வளர்க்கலாம் வாங்க!

8 வயதுக்குள் உங்கள் குழந்தைகளுக்கு புதிய வார்த்தைகளை கற்றுக்கொடுத்துவிடவேண்டும். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். உரையாடல், பல மொழிகளில் பேசுவது, உண்மை வார்த்தைகளை பயன்படுத்துவது, குழந்தை மொழிகளை தவிர்ப்பது அவர்களின் கற்றலுக்கு உதவும்.

குழந்தைகளுக்கு 8 வயதுக்குள் அதிகளவில் புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொடுப்பது, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இது அவர்களின் வாசிக்கும் திறனை நன்றாக மேம்படுத்தும். 

உங்கள் குழந்தைகளுக்கு புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொடுப்பது என்பது, அவர்களுக்கு புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல அவர்களுக்கு மொழியில் உயர்ந்த சூழலை உருவாக்குவது, ஆர்வத்தை தூண்டுவது, தன்னம்பிக்கையை வளர்ப்பது, கற்றல் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவது என அவர்களுக்கு அது வழிகாட்டும். எனவே புதிய வார்த்தைகளை கற்பதை உங்கள் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றுங்கள்.

உரையாடல்கள்

உங்கள் குழந்தைகளின் மொழித்திறனை வளர்ப்பதற்கு அவர்களுடன் உரையாடல்களை அதிகரிக்க வேண்டும். அது அவர்களுக்கு நல்லது. அவர்களிடம் அடிக்கடி பேசுவது மற்றும் உங்கள் குழந்தைகளுக்கு புதுப்புது வார்த்தைகளை அறிமுகப்படுத்தும். 

அவர்களின் மொழித்திறனை வளர்க்கும். அடிக்கடி குழந்தைகளிடம் பேசும் தாய்மார்களின் குழந்தைகள் 2 வயதுக்குள் 30 வார்த்தைகளை கற்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. குறைவாக பேசுபவர்களின் குழந்தைகளால் இத்தனை வார்த்தைகளை கற்க முடியாது.

குழந்தை மொழிகளை தவிர்த்து சரியான வார்த்தைகளை பேசுங்கள்

குழந்தைகளிடன் நாய்களுக்கு ‘பௌ, பௌ‘ உணவுக்கு ‘மம் மம்‘ என்று பேசுவது அழகாக இருக்கும். ஆனால் சரியான வார்த்தைகளை பயன்படுத்தும்போதுதான், அவர்கள் சரியான வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள உதவும். 

கூடுதலாக குழந்தைகளுக்கு பல மொழிகளை கற்றுக்கொடுப்பது நல்லது. ஆரம்பத்திலேயே இரட்டை மொழி அல்லது பல மொழிகளில் பேசிப்பழகுவது குழந்தைகளின் நினைவாற்றலுக்கு நன்மையைக் கொடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பெரிய வார்த்தைகளை உபயோகிக்க அஞ்சாதீர்கள்

பெரிய வார்த்தைகளை பேசுவது உங்கள் குழந்தைகள் புதிய வார்த்தைகள் கற்பதையும், மொழித்திறனையும் பாதிக்காது. அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் என்றால், குழந்தைகள் சிக்கலான வார்த்தைகளை கற்க முடியும். எளிமையான வார்த்தைகளை கற்பதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சியே நீண்ட வார்த்தைகளை கற்பதற்கும் போதுமானது.

வீட்டில் உள்ள பொருட்களின் பெயர்களை குறிப்பிடுவது

குழந்தைகள், பொருட்களின் பெயர்களை கண்களால் பார்த்து கற்பது அவர்களுக்கு படிக்கும்போது எளிமையாக புரிய வழிவகுத்து, அவர்கள் தெளிவாகப் படிக்க உதவுகிறது. இதனால் அவர்களால் தடையின்றி சத்தமாகப் படிக்க முடிகிறது. புத்தகங்களில் 50 சதவீதம் வார்த்தைகள் தினசரி உரையாடல்கள் அல்லது டிவி நிகழ்ச்சிகளைவிட அதிகம் உள்ளது. 

இது அவர்களுக்கு நிறைய புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறது. தினமும் 5 புத்தகங்களை அவர்கள் படிப்பதன் மூலம் அவர்கள் 1.4 மில்லியன் வார்த்தைகளை அவர்கள் கே.ஜி வகுப்புகள் கற்று முடிப்பதற்குள் கற்றுக்கொள்ள உதவுகிறது.

வார்தைகளை விளையாட்டாகவும், எளிமையாகவும் மாற்றுங்கள்

சொல் அகராதியைப் பயன்படுத்தி, புதிய வார்த்தைகள் மற்றும் அவற்றுக்கான அர்த்தங்களை கண்டுபிடிக்க கற்றுக்கொடுங்கள். வார்த்தை விளையாட்டுக்களை ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தைளே வாக்கியங்களை அமைத்து விளையாட உற்சாகப்படுத்துங்கள். 

உங்கள் குழந்தைகள் கதைகளை சொல்வதற்கு ஊக்குவியுங்கள். புதிய வார்த்தைகளை கற்பதற்கும் அவர்களுக்கு உதவுங்கள். அவர்களின் மொழித்திறன் மற்றும் கிரியேட்டிவிட்டியை மேம்படுத்துங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.