தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips Taking The Kids On A Trip What To Be Careful About

Parenting Tips : குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்கிறீர்களா? எதில் கவனமாக இருக்க வேண்டும்?

Priyadarshini R HT Tamil
Feb 07, 2024 02:49 PM IST

Parenting Tips : குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்கிறீர்களா? எதில் கவனமாக இருக்க வேண்டும்?

Parenting Tips : குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்கிறீர்களா? எதில் கவனமாக இருக்க வேண்டும்?
Parenting Tips : குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் செல்கிறீர்களா? எதில் கவனமாக இருக்க வேண்டும்?

ட்ரெண்டிங் செய்திகள்

சிறு குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது சவால்கள் நிறைந்ததுதான். அது பல சுவாரஸ்யங்களை தரக்கூடியது. ஆனால் அதுபோல் அவர்களை வெளியில் அழைத்துச் செல்வது அவர்களுக்கு உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் நல்லது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் வளர உதவும். ஆனால் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல தீவிரமான திட்டமிடல் தேவைப்படுகிறது. நீங்கள் சரியாக திட்டமிட்டதால்தான் உங்களால் சுற்றுலாவிலும் மகிழ்ந்திருக்க முடியும். குழந்தைகளையும் பாதுகாப்பாக அழைத்துச்செல்ல முடியும்.

உடன் பயணிப்பவர்களும் மகிழ்ந்திருக்க முடியும். அவர்களின் தேவைகள் என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் முன்தயாரிப்புகள் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற தங்குமிடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான விளையாட்டுகள் இருக்கும் இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

முன்னரே திட்டமிடுதல் உங்களின் பயண நேர பரபரப்பு மற்றும் டென்சனை குறைக்கும். சில எதிர்பாராத தருணங்களில் கூட எப்படி நடந்துகொள்ள வேண்டும் என முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள உதவும். உடல் உபாதைகள் ஏற்படும்போது நீங்கள் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடனும் செயல்பட உதவுகிறது.

நேரத்தையும் சரியாக கையாண்டு திட்டமிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரம் செலவிட உதவுகிறது. இந்த சரியான திட்டமிடல் உங்களின் பயணத்தை மகிழ்ச்சிநிறைந்ததாக மட்டுமின்றி, மனஅழுத்தம் குறைந்ததாகவும் மாற்றுகிறது. உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் தனிப்பட்ட திறமை தேவைகள் மற்றும் ஆர்வத்தை பூர்த்தி செய்வதாக உள்ளது.

சரியான திட்டமிடல் என்றால் என்ன?

பயணத்துக்கு முன்னரே திட்டமிடவேண்டும். எங்கு செல்ல வேண்டும் என்ற தெளிவு, எதில் செல்கிறோம், எங்கு தங்குகிறோம், குழந்தைகளுக்கு ஏற்ற நடவடிக்கைகள் என்ன? குடும்பத்துக்கு ஏற்ற இடத்தை தேடி கண்டுபிடியுங்கள். அங்குள்ள வசதிகளையும் தெரிந்துகொள்ளுங்கள். 

தேவையான பொருட்களை பட்டியலிடுங்கள், ஆடைகள், பாத்ரூமுக்கு தேவையான பொருட்கள், மருந்துகள் (குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது மிகவும் அவசியம்) உங்களுக்கான மருந்துகள், குழந்தைகளுக்கு என தனித்தனியாக எடுத்துவையுங்கள்.

ஸ்னாக்ஸ், பொழுபோக்கு அம்சங்கள் (புத்தகங்கள், விளையாட்டு சாமான்கள் மற்றும் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள்) முதலுதவி பொருட்கள். குடும்பத்திற்கு தேவையான வசதிகளை வழங்கும் தங்குமிடங்களை தேர்ந்தெடுங்கள். அங்கு தொட்டில், விளையாட்டு இடங்கள், சேர்கள் என அனைத்தும் உள்ளதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். தாராளமான இடவசதி, உங்களுக்கு வசதியானதாகவும் இருக்க வேண்டும்.

நீண்ட தூர பயணம் என்றால், இடையில் எங்கு நிறுத்துவது என்பதையும் முடிவெடுத்துவிடுங்கள். அவ்வப்போது கழிவறை செல்வது மற்றும் தேவையானதை சாப்பிடுவது என திட்டமிடுங்கள். பயண நேரத்தை சரியாக திட்டமிடுங்கள். விமானங்களில் வெளிநாடுகள் செல்கிறீர்கள் என்றால், அதற்கு ஏற்றாற்போல் திட்டமிடவும்.

உடல் ஆரோக்கியம்

குழந்தைகளுடன் செல்கிறீர்கள் என்றால், அவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். போதிய தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ளுங்கள். முதலுதவிக்கு தேவையான அனைத்தையும் சரியாக எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். தங்குமிடங்களில் குழந்தைக்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். நல்ல சுகாதாரத்தை பேணுங்கள்.

அடிக்கடி கை கழுவுவதும், சானிடைசர்களை எடுத்துச்செல்வதையும் உறுதிப்படுத்துங்கள். நீர்ச்சத்துடன் இருங்கள். ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். கடும் சூட்டில் இருந்து காப்பாற்ற சன்ஸ்கிரீன் மற்றும் தேவையான உடைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

வானிலை மாற்றத்து ஏற்ப ஆடைகளையும் வைத்திருங்கள். குழந்தைகளை இடையிடையே கொஞ்சம் ரிலாக்ஸாக விடுங்கள். உள்ளூர் மருத்துவமனைகளை தெரிந்துகொள்ளுங்கள். அவசர உதவி எண்களையும் தெரிந்துகொள்வது அவசியம்.

திட்டமிடாத இடங்களுக்கு செல்ல நேரிட்டாலும் அதையும் சமாளிக்க தயாராக இருங்கள்

நீங்கள் திட்டமிட்ட இடத்தைவிட கூடுதலாக இடங்கள் அல்லது வேறு எங்கும் செல்ல நேரிட்டால் அதற்கு தயாராகவும் இருங்கள். குழந்தைகளின் விருப்பத்துக்கு எற்ப அவர்களை விளையாட அனுமதியுங்கள். அவர்களுடன் பொறுமையாக இருந்து விளையாடுங்கள். அவர்களுக்கு திடீரென சிறுநீர் அழைப்புகள் ஏற்படும்.

அதற்கெல்லாம் அவர்களை பொறுமையாக அழைச்செல்லுங்கள். அவர்களை நன்றாக விளையாட விடுங்கள். அதேநேரத்தில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துங்கள். மகிழ்ச்சியாகவும், நேர்மறையாகவும் இருங்கள். மகிழ்ச்சியாக இருக்க செல்கிறீர்கள். எனவே மகிழ்ந்திருங்கள். சில இடங்களில் தாமதமாகலாம். அதற்கெல்லாம் தயாராக இருங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்