தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள்! அடக்குவதா? விடுவதா? குழம்பும் பெற்றோர்! என்ன செய்வது?

Parenting Tips : பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள்! அடக்குவதா? விடுவதா? குழம்பும் பெற்றோர்! என்ன செய்வது?

Priyadarshini R HT Tamil
Jul 06, 2024 02:04 PM IST

Parenting Tips : குழந்தைகளை பிடிவாதமானவர்களாக மாற்றும் விஷயங்கள் இவைதான்! இத மட்டும் செஞ்சுடாதீங்க!

Parenting Tips : பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள்! அடக்குவதா? விடுவதா? குழம்பும் பெற்றோர்! என்ன செய்வது?
Parenting Tips : பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள்! அடக்குவதா? விடுவதா? குழம்பும் பெற்றோர்! என்ன செய்வது?

உங்கள் குழந்தைகளை பிடிவாதமானவர்களாக மாற்றும் விஷயங்கள் இவைதான். எனவே இவற்றை மட்டும் செய்துவிடாதீர்கள்.

குழந்தைகள் எப்படி பிடிவாதக்காரர்கள் ஆகிறார்கள்?

ஒரு குழந்தையை முழு மனிதராகவும், நல்லவராகவும் வளர்த்து எடுக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் முயல்வார்கள். உங்கள் குழந்தைகளின் அன்றாட பழக்கங்கள் சிலவை, அவர்களிடம் பிடிவாத குணங்களை ஏற்படுத்திவிடுகிறது.

அவற்றை நீங்கள் செய்யவேண்டும் என்ற நோக்கில் செய்திருக்கமாட்டீர்கள். உங்கள் குழந்தைகளை பிடிவாதக்காரர்களாக மாற்றும் பொதுவான பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஒழுக்கம் குறைவு

வீட்டில் விதிக்கப்படும் விதிகளில் பெற்றோர்கள் தளர்வுகள் ஏற்படுத்தினால் அந்த குழந்தைகள் பிடிவாதக்காரர்களாக மாறுகிறார்கள். பிடிவாதம் செய்தால் விதிகள் தளர்த்தப்படும் என்ற எண்ணங்கள் அவர்களுக்கு தோன்றும். எனவே விதிகளில் சரியான முறை பின்பற்றப்படாவிட்டால், குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் போகிறார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

மிகைப்படுத்துதல்

குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுப்பது மற்றும் அவர்களுக்கு தேவையானவை என அதிகம் வாங்கிக்கொடுப்பது பிடிவாதமான குழந்தைகளை உருவாக்குகிறது. எனவே அதிகப்படியாக செய்யும் எதுவும், குழந்தைகள் எதிர்பார்க்கும் எதுவும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பை அவர்களிடம் விதைக்கும். அவர்களுக்கு அது கிடைக்காதபோது அவர்களை பிடிவாதக்காரர்களாக மாற்றுகிறது.

வழமை இல்லாதது

தினமும் பள்ளி செல்வதற்கு என்று ஒரு வழக்கம், விடுமுறை தினங்களில் ஒரு வழக்கம் என முறையான பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்ளவேண்டும். அது இல்லாவிட்டால், குழந்தைகள் பிடிவாதக்காரர்களாக மாறுகிறார்கள். குழந்தைகள் தங்களின் அன்றாட பழக்கவழக்கங்களை சரியாக செய்ய பழக்காவிட்டால் அவர்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வும், மாற்றத்தை எதிர்நோக்கியும், புதிய விதிகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

அதிகாரமான பெற்றோர்

கடுமையான மற்றும் அதிகாரமான பெற்றோர் குழந்தைகளின் பிடிவாதத்திற்கு காரணமாகிறார்கள். அதிகம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட குழந்தைகள் போராளிகளாக மாறுகிறார்கள். பெற்றோர் அதிகாரம் மட்டுமே செலுத்தும்போது, குழந்தைகளுக்கு தேவையான அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் அவதியுறுகிறார்கள்.

சுதந்திரமின்மை

குழந்தைகளுக்கு அவர்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுகளும், வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படாவிட்டால், அவர்கள் பிடிவாதமானவர்களாக மாறுகிறார்கள். 

எனவே குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறன்களை அவர்களுக்கு கொடுங்கள். அவர்களுக்கு நீங்கள் உதவலாம். இது அவர்களுக்கு மதிப்பளிப்பதுடன், அவர்களிடம் அதிகாரத்துடன் நடந்துகொள்ளாததையும் ஊக்குவிக்கும்.

கவனம்

குழந்தைகள் பிடிவாதமாக இருப்பது கவனத்தை ஈர்ப்பதற்காகக் கூட இருக்கலாம். குறிப்பாக அவர்கள் தங்கள் பெற்றோரிடம் இருந்து சீரற்ற தன்மையை எதிர்கொள்ளும்போது அவர்கள் பிடிவாதக்காரர்கள் ஆகிறார்கள். 

எனவே அவர்கள் பிடிவாதம் பிடிக்கும்போது கவனிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்துகொண்டால், அவர்கள் தங்களின் பிடிவாத குணத்தை அதிகப்படுத்திக்கொள்கிறார்கள். எனவே அப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது.

அதிக பாதுகாப்பு

உங்கள் குழந்தைகளை நீங்கள் அதிகம் பாதுகாத்தால், அது உங்கள் குழந்தைகளின் திறன்களுக்கு எல்லை ஏற்படுத்தி, அவர்கள் பிடிவாதமாக நடந்துகொள்ள வழிவகுக்கிறது. அவர்கள் எதுவும் கற்காமல் போய்விடுவார்கள். 

எதையும் பரிசோதிக்க முயற்சிக்க மாட்டார்கள். சவால்களை தாங்களாகவே முயற்சிக்க அனுமதிக்கப்படாத குழந்தைகள், அவர்களால் புதிய யோசனைகளை கொண்டுவரமுடியாது. அவர்கள் வழக்கமான பணிகளிலே சிக்கிக்கொண்டு வாழ்வார்கள்.

எதிர்மறை எண்ணங்கள்

நோக்கமின்றி பிடிவாத குணத்தால் நீங்கள் ஒரு விஷயத்தை அனுமதித்தால், அவர்கள், பிடிவாதம் பிடித்தால் எதையும் சாதிக்கலாம் என்று எண்ணி எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்க முடியும் என்று கற்றுக்கொள்கிறார்கள். 

அவர்கள் இரவு உறக்கச் செல்லாமல் விளையாடிக்கொண்டேயிருந்தால், அவர்களை அனுமதித்துவிட்டால், குழந்தைகள் பிடிவாதத்தை பழக்கிக்கொண்டு, இதை அனைத்து செயல்களில் செய்ய முனைகிறார்கள்.