தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க படாதபாடு படுகிறீர்களா? இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க படாதபாடு படுகிறீர்களா? இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

Priyadarshini R HT Tamil
May 06, 2024 03:00 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்குவது இத்தனை சுலபமா?

Parenting Tips : உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்குவது இத்தனை சுலபமா?
Parenting Tips : உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்குவது இத்தனை சுலபமா?

ட்ரெண்டிங் செய்திகள்

உங்கள் குழந்தையின் முழுத்திறமையையும் அவர்கள் வெளிக்காட்ட நீங்கள் அவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் உதவவேண்டும். கற்றல் மீது ஆர்வத்தை தூண்டுவது முதல், அவர்களுக்கு ஆரோக்கியமான பழக்கத்தை கற்றுக்கொடுப்பது வரை நீங்கள் செய்ய வேண்டியது நிறைய விஷங்கள் உள்ளது. உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்குவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்.

உங்கள் குழந்தைகளுடன் நீங்களும் வாசிக்கத் துவங்குங்கள்

உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க வேண்டும் என்றால், அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை நீங்கள் ஊக்குவிக்கவேண்டும். குழந்தை வயதிலேயே அவர்களுக்கு வாசிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக வாசிப்பு இருக்கவேண்டும். அது உங்களுக்கு இரவு உறங்கச்செல்லும் முன் படிக்கவைப்பதாக இருக்கலாம் அல்லது பெட்டைம் ஸ்டோரியாக இருக்கலாம்.

மாலை நேரத்தில் வாசிக்க வைக்கலாம். உங்கள் குழந்தைகள் புத்தகங்களுடன் நேரம் செலவிடும்போது, அவர்களின் மொழித்திறன் அதிகரிக்கிறது. அவர்கள் புதிய வார்த்தைகளை கற்கிறார்கள். அது அவர்களின் கற்பனைத்திறனை அதிகரிக்கிறது. எனவே பல்வேறு வகை புத்தங்களையும் உங்கள் குழந்தைகள் படிப்பதை உறுதிப்படுத்துங்கள். இதனால் அவர்களின் அறிவாற்றல் மற்றும் கோணம் விரிவடையும்.

உங்கள் வீட்டின் சூழலை மாற்றுங்கள்

பழங்கால கற்றல் முறைகள், உங்கள் குழந்தைகளை சோர்வாக்கும். எனவே நீங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடும்போது, மகிழ்ச்சி நிறைந்த நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். விடுகதைகள், குவிஸ்கள் மற்றும் உரையாடல்கள், வாதங்கள் ஆகியவை அவர்கள் கற்க உதவும். அதனுடன், அவர்களின் கிரியேட்டிவிட்டி, கொலாபுரோசன் மற்றும் கிரிட்டிக்கல் சிந்தனைகள் ஆகியவற்றை வளர்க்கும்.

கற்றலை மகிழ்ச்சியான நிகழ்வாக மாற்றும்போது உங்கள் குழந்தைகளின் கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கும். வெற்றிபெற தூண்டும் கதையம்சங்கள் கொண்ட படங்களை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள்.

உண்மையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள் அல்லது கதைகள் கூறி, உங்கள் குழந்தைகளிடம் விடாமுயற்சி, சாதிக்கும் எண்ணம் ஆகியவற்றை வளர்த்தெடுங்கள். அர்த்தமுள்ள உரையாடல்களை நிகழ்த்துங்கள். சிறந்த வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டேயிருங்கள்.

அறிவுறுத்தாமல் அவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டேயிருங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கூறிக்கொண்டேயிருக்காமல், அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

அவர்களின் முயற்சிகளை பாராட்டுங்கள். அவர்களின் பலங்களில் கவனம் செலுத்துங்கள். அவர்களின் பலவீனங்களை சுட்டிக்காட்டாதீர்கள். அவர்களுக்கு நேர்மறையான வழிகளை காட்டுவதன் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை நீங்கள் ஊட்டலாம். புதிய விஷயங்களை கற்க ஊக்குவியுங்கள்.

அவர்களிடம் அவர்கள் ஜீனியஸ் என்று கூறுங்கள்

உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கைக்கு நேர்மறை சிந்தனைகளை அவர்களிடம் விதைப்பது மிகவும் அவசியம். எனவே அவர்கள் அறிவாளி, அவர்கள் எதையும் செய்யும் திறன்பெற்றவர்கள் மற்றும் அவர்கள் வெற்றிபெற தகுதியானவர்கள் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

அவர்களின் தனித்திறமையை அவர்களுக்கு எடுத்துக்கூறி ஊக்கப்படுவதன் மூலம் அவர்களின் முழுத்திறனையும் அவர்கள் அடைவதற்கு உதவமுடியும். அவர்களின் பலங்களை எடுத்துக்கூறுங்கள். அவர்களின் வெற்றிகளை கொண்டாடுங்கள். அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

உறக்கத்துக்கு முக்கியத்துவம்

உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்களின் உறக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியம். போதிய உறக்கம்தான், அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் மற்றும் உணர்வுத்திறன் வளர உதவும். இவையனைத்தும் உங்கள் குழந்தைகள் படிப்பில் சிறந்துவிளங்க உதவும். எனவே இரவில் சீக்கிரம் உறங்கச்செல்லும் பழக்கத்தை அவர்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு போதிய உறக்கம் கிடைக்கும் ரம்யமான சூழலை உருவர்ககவேண்டும். திரைநேரத்தை குறைத்து, குறிப்பாக உறங்கச்செல்லும் முன் திரையை கட்டுப்படுத்தி, இருள் சூழ்ந்த மற்றும் அமைதியான படுக்கையறையில் அவர்களை உறங்க வைக்கவேண்டும். அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி என அவர்களை அமைதிப்படுத்தும் நுட்பங்களை கற்றுக்கொடுக்கவேண்டும்.

சுய ஒழுக்கம்

வெற்றியாளர்கள் சுய ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் ஜீனியஸ் ஆகவும் உள்ளார்கள். எனவே உங்கள் குழந்தைகள் சுய ஒழுக்கத்தை கற்க உதவுங்கள். அதற்கு தெளிவான எல்லைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை உருவாக்குங்கள்.

அவர்களுக்கு விடாமுயற்சியின் மதிப்பை கற்றுக்கொடுங்கள் அவர்களின் செயல்களுக்கு அவர்கள் பொறுப்பெடுக்க ஊக்குவியுங்கள். அவர்கள் சுயகட்டுப்பாடுகளை வளர்த்தெடுக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நன்றியுடன் நடந்துகொள்ள அறிவுறுத்துங்கள். விளையாட்டில் அவர்களின் முறைக்காக காத்திருப்பது, அவர்களுக்கு கிடைக்கும் பணத்தை அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஊக்குவிப்பது. என அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

அவர்களின் இலக்குகளில் கவனம் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவியுங்கள். இவையனைத்து அவர்களின் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும்.

மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுங்கள்

பள்ளி சாதனைகளும் முக்கியம். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மற்றும் நலனும் அவசியம். மகிழ்ச்சியான குழந்தைகளே பள்ளி மற்றும் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாகிறார்கள். எனவே உங்கள் வீட்டில் எப்போதும் நேர்மறையான சூழலை உருவாக்குங்கள். உங்கள் வீடு அன்பும், பாசமும் நிறைந்ததாக இருக்கட்டும்.

குடும்பமாக தரமான நேரத்தை செலவிடுங்கள். உங்கள் குழந்தைகளின் ஆர்வத்துக்கு ஊக்கம் கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு வளர்ச்சி மனநிலையைக் கொடுங்கள். அவர்களின் சாதனைகளில் மற்றும் கவனம் செலுத்தாமல் அவர்கள் தோல்விகளில் இருந்து மீளவும் கற்றுக்கொடுங்கள்.

நண்பர்களிடம் இருந்து பெரும் பாதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்றும் குணநலன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு வடிவம்கொடுப்பதில் அவர்களின் வயதையொத்தவர்களின் பங்கு முக்கியமானது. உங்கள் குழந்தைகளைச் சுற்றி எப்போது நண்பர்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அவர்களின் ஆர்வங்களுக்கும், அவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும், அவர்களை உற்சாகப்படுத்துபவர்களாகவும் அந்த நண்பர்கள் இருக்கட்டும்.

குழந்தைகள் மற்றவர்களுக்கு பேசுவதை கண்காணியுங்கள். அவர்கள் எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்படுகிறார்களா என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளுடன் திறந்த உரையாடல் நடத்தவது மிகவும் அவசியம். எனவே நண்பர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்