குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : குழந்தைகளை படிக்க வைக்க படாதபாடு படுகிறீர்களா? அவர்களை ஊக்குவிக்க சிறந்த வழி!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : குழந்தைகளை படிக்க வைக்க அவர்களை எப்படி ஊக்குவிக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கடுமையாக படிப்பது எப்படி?
எல்லா பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் படிப்பில் முதலிடம் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் உங்கள் குழந்தைகளை தினமும் படிக்கும்படி ஊக்குவிப்பது, அவர்களை கவனித்து, பாடத்தில் ஊன்றி படிக்கவைப்பதெல்லாம் சவாலான ஒன்று. குழந்தைகளுக்கு எப்போதும் கவனச்சிதறல் ஏற்படும். ஆர்வம் குறையும், குறிப்பாக படிப்பு போர் அடிக்கும் விஷயமாக மாறும். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளை படிககும்படி ஊக்குவிக்க என்ன செய்யலாம். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. என்ன செய்யலாம் பாருங்கள்.
படிக்கும் பழக்கம்
குழந்தைகளுக்கு ஒரு வழக்கத்தை உருவாக்குவது சிறந்தது. ஏனெனில் நீங்கள் அவர்களுக்கு படிப்பதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கினால், அவர்கள் அந்த நேரத்தில் தினமும் படிக்க அவர்களின் மூளை பழக்கப்படுத்திக்கொள்ளும். இதனால்தான் நீங்கள் அவர்களுக்கு இந்தந்த நேரத்தில் இந்தந்த வேலை என ஒரு அட்டவணையை உருவாக்கிவிடவேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் 40 நிமிடங்கள் படிக்கும் நேரத்தை ஒதுக்கவேண்டும். அடுத்த 10 நிமிடங்கள் அவர்களுக்கு ஒரு ப்ரேக் கொடுக்கவேண்டும். இதனால் அவர்களின் கவனம் சிதறாமல் இருக்கவேண்டும். எப்போதும் படிக்க இந்த முறையை பின்பற்றி பாருங்கள் குழந்தைகள் சோர்வடையாமல் படிப்பார்கள்.
படிப்பை மகிழ்ச்சியான நிகழ்வாக்குங்கள், கிரியேட்டிவான வழிகளை பின்பற்றுங்கள்
மைன்ட் மேப், குவிக் ரிவிஷனுக்கு குறிப்புக்களை எழுதிவைத்து படித்தல் போன்ற முறைகளை பின்பற்றவேண்டும். இதனால் நீங்கள் தகவல்களை மனதில் படமாக ஓடவிடுங்கள். கல்வி விளையாட்டுகளை நீங்கள் விளையாடுவதன் மூலம் பாடங்களை கலந்துரையாடல் முறையில் கற்கலாம்.
நேர்மறையான கற்றல் சூழல்
சந்தடி நிறைந்த அல்லது பரபரப்பான படிக்கும் சூழல் இருந்தால் குழந்தைகளின் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கான அமைதியான மற்றும் சவுகர்யமான இடத்தை தேர்ந்தெடுத்துக்கொடுக்கவேண்டும். அந்த இடத்தை அவர்கள் படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தவேண்டும். நல்ல வெளிச்சம் மற்றும் எவ்வித இடையூறும் இல்லாமல் அந்த இடம் இருக்கவேண்டும். அங்கு டிவியோ அல்லது செல்போனோ உபயோகிக்கக் கூடாது.
மேலும் வாசிக்க - திராட்சை ஊறவைத்த தண்ணீரில் உள்ள சத்துக்கள் என்னவென்று பார்க்கலாமா?
முயற்சிகளுக்கு பாராட்டு, ரிசல்ட்களுக்கு மட்டுமல்ல
உங்கள் குழந்தைகளின் முயற்சிகளை நீங்கள் அங்கீகரிக்கும்போது, அவர்களுக்கு ஊக்கம் கிடைத்ததாக அவர்கள் உணர்கிறார்கள். மதிப்பெண்களில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தாமல், நீங்கள் அவர்களின் கடின உழைப்பையும் பாராட்ட வேண்டும். சிறிய பாராட்டுகளான அவர்களுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்கள், கூடுதல் விளையாட்டு நேரம், ஸ்டிக்கர்கள் போன்றவற்றை நீங்கள் கொடுக்கும்போது, அது அவர்களை தொடர்ந்து படிக்க அது ஊக்குவிக்கிறது.
கற்றலுக்கு ரோல் மாடல்
குழந்தைகள் தங்களின் பெற்றோரைத் தான் எப்போதும் பின்பற்றுவார்கள். அவர்கள் புத்தகம் வாசிப்பதை குழந்தைகள் பார்த்தால் அல்லது புதிய திறன்களை கற்பதை பார்த்தால் அல்லது கல்வி குறித்து நேர்மறையாக அவர்கள் பேசுவதை பாத்தால் குழந்தைகளும் அதையே பின்பற்றுகிறார்கள். எனவே உங்கள் சொந்த கற்றல் அனுபவங்களில் இருந்து நீங்கள் கதைகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். அறிவார்ந்த விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். இது அவர்களுக்கு ரோல் மாடலாகும்.
ஒன்றாக சேர்ந்து சாதிக்கக் கூடிய இலக்குகள்
ஒரு மணி நேரத்தில் ஒரு பாடத்தை முடித்துவிட்டால் அல்லது சில புதிய வார்த்தைகள் மற்றும் அதற்கான அர்த்தங்களை கற்றுக்கொண்டுவிட்டால் அல்லது 5 கணக்குகளை போட்டு முடித்துவிட்டால் அவர்களை பாராட்டுங்கள். இதுபோல் சிறிய இலக்குகளை நிர்ணயித்து முடிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து படிக்கவேண்டும்
தனியாக அமர்ந்து படிப்பது குழந்தைகளுக்கு போர் அடிக்கும். எனவே அவர்கள் தங்களின் நண்பர்களுடன் இணைந்து படிக்கலாம். இதனால் அவர்கள் உற்சாகமாவார்கள். எனவே அவர்களின் பள்ளித்தோழர்களுடன் இணைந்து படிக்கும் நேரத்தை உருவாக்குங்கள். இதனால் அவர்கள் டாபிக்குகள் குறித்து கலந்துரையாடலாம். சந்தேகங்களைத் தீர்க்கலாம் மற்றும் குவிஸ் போல் ஒருவருக்கொருவர் கேள்விகள் கேட்கலாம்.
நேர மேலாண்மையைக் கற்றுக்கொடுங்கள்
அவர்களுக்கு நேர மேலாண்மையை எப்படி செய்வது என்று கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு படிப்பதற்கு ஒரு அட்டவணையைப் போட்டுக்கொடுங்கள்., இன்றைய நாளில் முடிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிடுங்கள். 25 நிமிடம் படிப்பு 5 நிமிடம் இடைவெளி என்ற முறையையும் பின்பற்றிப்பாருங்கள்.

டாபிக்ஸ்