குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : பிரச்னைகளை சமாளிக்க கற்றுக்கொடுக்கவேண்டுமா? உங்கள் குழந்தைகளுக்கு இது உதவும்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகள் பிரச்னைகளை சமாளிக்க வேண்டுமெனில் நீங்கள் அவர்களிடம் கூறவேண்டிய விஷயங்கள் என்னவென்று பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் மரியாதை தேவை. மற்றவர்கள் நம்மை மரியாதை குறைவாக நடத்தினால் அது விளையாட்டாக இருக்கும் வரை சரிதான். ஆனால் அது அதிகமாகும்போது மிகவும் தவறு. இதுபோன்ற கொடுமைகளை உங்கள் குழந்தைகள் கடந்து அவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்று அறிய இந்த வரிகள் உதவும். எவ்வாறு கொடுமைகளில் இருந்து வெளியேறுவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
நிறுத்துங்கள், எனக்கு இது பிடிக்கவில்லை
உங்கள் குழந்தைகளை மற்றவர்கள் அளவுக்கு மீறி வம்பிழுக்கும்போது, அவர்கள் இதுபோல் கூறலாம். இது சிறிய, தெளிவான அதே நேரத்தில் சரியான பதிலாகும். அவர்கள் செய்வதை இப்போதே நிறுத்திவிடவேண்டும் என்று பொருள். இது ஒரு தனிப்பட்ட எல்லையை வகுக்கிறது. மேலும் உங்கள் பதிலில் தெளிவாக இருங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள், நீங்கள் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. எனவே இதை உடனே நிறுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன் என தெளிவாகக் கூறவேண்டும்.
அது உண்மை கிடையாது. நீங்கள் என்னை அதுபோல் நடத்தக்கூடாது
இது உங்களை துன்புறுத்துவதை தாங்கிக்கொள்ள முடியாது என்பதைக் காட்டுகிறது. உங்களால் நேர்மையற்ற செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை உணர்த்துகிறது. இது உங்களின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. உங்களின் சுயமரியாதையை பாதுகாக்கவும் உதவுகிறது.
