குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எதற்கெல்லாம் ‘நோ’ சொல்லியே தீரவேண்டும் எனப் பாருங்கள்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : இது உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடங்களை எவ்வாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும் என்பதால், இது மிகவும் அவசியம். அவர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ளவும், எதிர்காலத்துக்கு தயாராகிக்கொள்ளவும் இது அவர்களுக்கு உதவும்.

நீங்கள் சில நேரங்களில் உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் ‘நோ’ சொல்லியே ஆக வேண்டும். அது எதற்கு என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஏன் ‘நோ’ சொல்லவேண்டும்? பேரன்டிங்கில் இது முக்கியமான அங்கமாகும். இது உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடங்களை எவ்வாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும் என்பதால், இது மிகவும் அவசியம். அவர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ளவும், எதிர்காலத்துக்கு தயாராகிக்கொள்ளவும் இது அவர்களுக்கு உதவும்.
காரணமற்ற தேவைகள்
குழந்தைகளுக்கு தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் கூடாது என்று சொல்லிவிடவேண்டும். நடக்க இயலாத காரியங்களை அவர்கள் செய்ய முயலும்போது அதை நீங்கள் தடுத்துதான் ஆகவேண்டும். அவர்கள் விரும்பி நாய் வளர்த்தால், நீங்கள் அதற்கு கூடாது என்று சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், அவர்கள் அதை பாதுகாக்க மாட்டார்கள். எனவே அது அவர்களுக்கு தேவையில்லாதது. இது அவர்களுக்கு எது சரி அல்லது எது தவறு என்பதைக் கற்றுக்கொடுக்கும்.
அதிக திரை நேரம்
உங்கள் குழந்தைகள் அதிக நேரம் திரையை பார்த்தால் நீங்கள் அதை அனுமதிக்கக்கூடாது. அப்போது நோ சொல்ல நீங்கள் தயங்கக் கூடாது. அதிகம் அவர்கள் திரையில் மூழ்கிக்கிடந்தால் அவர்களால் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் போகும். இது அவர்களை மிகவும் பாதிக்கும் என்பதால், அவர்களை அதிகம் ஃபோன் பார்க்க அனுமதிக்கக்கூடாது.