Parenting Tips : டிஜிட்டலுக்கு அடிமையாகும் உங்கள் குழந்தைகளின் மூளைக்கு என்னவாகிறது பாருங்கள்!
Parenting Tips : டிஜிட்டலுக்கு அடிமையாகும் உங்கள் குழந்தைகளின் மூளைக்கு என்னவாகிறது பாருங்கள். குழந்தைகளுக்கு உதவி அவர்களுக்கு நல்ல டிஜிட்டல் அனுபவத்தைக் கொடுங்கள்.
டிஜிட்டல் கேட்ஜெட்களை பாதுகாப்பாக உபயோகிப்பது எப்படி?
இந்த டிஜிட்டல் காலத்தில் நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக டிஜிட்டல் கேட்ஜெட்கள் உள்ளது. குழந்தைகளின் திரைநேரத்தை மேலாண்மை செய்வதில் கடும் சவால்கள் உள்ளது. குழந்தைகள் நாளொன்றுக்கு 8 மணி நேரத்திற்கும் மேல திரையில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. தகவல் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அது எச்சரிக்கும் வகையில் உள்ளதாக கூறுகிறது.
மூளை வளர்ச்சி மற்றும் நரம்பியல் தாக்கங்கள்
நமது இளைஞர்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தை டிஜிட்டல் திரையிலே மூழ்கிக்கிடக்கவே செலவிடுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. இது மூளையின் வளர்ச்சியை பாதிக்கவே செய்கிறது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும், தங்களின் முக்கியமான ஆண்டுகளில் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, சமூக முதிர்ச்சி என அனைத்திலும் அவர்களின் நரம்பு மண்டலம் பல்வேறு மாற்றங்களை அடிக்கடி சந்திக்கிறது. குறிப்பாக, டீன் ஏஜ்க்கு முன்னர், டோப்பமைன் என்ற மகிழ்ச்சி தரும் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள், வளர்கின்றன.
இந்த நரம்பியல் மாற்றங்கள், அவர்களுக்கு சமூகத்தால் வழங்கப்படும் வெகுமதிகளுக்காகவும், தங்கள் வயதையொத்தவர்களின் கவனம் தங்கள் மீது குவியவேண்டும் என்பதற்காகவும், அங்ககீகாரம் கிடைப்பதற்காகவும் அவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, தங்களை அழித்துக்கொள்கிறார்கள்.
டிஜிட்டல் அடிமைத்தனம்
குழந்தைகளும், டீன் ஏஜ் வயதினரும், டிஜிட்டல் கேட்ஜெட்களில் பொழுதுபோக்கு, தொடர்பில் இருப்பது மற்றும் தகவல்களுக்காக சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கிறார்கள். இதனால், டிஜிட்டல் அடிமைத்தனத்துக்கு ஆளாகிறார்கள்.
இவர்கள் நாள் முழுவதும் திரையில் மூழ்கிக்கிடப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அவர்களுக்கு கவனச்சிதறல், சமூகத்திறன்கள் குறைவது, பயம், பதற்றம் ஆகியவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது மூளையின் இயக்கம் மற்றும் அமைப்பையே மாற்றுகிறது.
பெற்றோர் என்ன செய்யவேண்டும்?
இந்த கடுமையான சூழலில் பெற்றோர் தங்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவே கருதுகிறார்கள். அது உண்மையும் ஆகும். தொழில்நுட்பத்துடன் ஆரோக்கியமான தொடர்பு இருக்கவேண்டும்.
எனினும் இது கடினம்தான் என்றாலும், பெற்றோர்கள் அதை சமாளிக்க சில வழிகாட்டுதல்களை நிபுணர்கள் வழங்குகிறார். குழந்தைகளுக்கு பெற்றோர், டிஜிட்டல் பயன்பாடுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கூறி அவரக்ளுக்கு ஆரோக்கியமான மற்றும் சமமான டிஜிட்டல் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும்.
எல்லைகளை வகுப்பது
உங்கள் குழந்தைகள் டிஜிட்டல் கேட்ஜெட்களை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு ஒரு எல்லை வகுப்புது முக்கியம். 5 வயதுக்கு முன்னர் குழந்தைகளுக்கு திரையை காட்டக்கூடாது. திரை நேரமும் சரியான அளவில் இருக்கவேண்டும.
மேலும் திரையில் அவர்கள் பார்க்கும் விஷயங்களும் அவர்களின் வயதுக்கு உகந்ததாக இருக்கவேண்டும். கல்வி தொடர்பானவற்றையும் அவர்கள் பார்க்கவேண்டும். அப்போதுதான் படிப்பும், பொழுதுபோக்கும் சமஅளவில் செல்லும்.
மாற்று செயல்பாடுகளை ஊக்குவிப்பது
மாற்று செயல்பாடுகளை ஊக்குவிப்பது, குழந்தைகளின் உடல், சமூகம் மற்றும் உணர்வு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வெளியே விளையாடவேண்டும். உடற்பயிற்சிகள் மற்றும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்வது என டிஜிட்டல் கவனச்சிதறல்கள் ஏற்படாமல் காத்து, தேவையான வாழ்க்கை திறன்களை வளர்த்தெடுப்பது, அதிக திரை நேரத்தை குறைக்கும்.
கல்வி முக்கியம்
கல்வி கற்பது முக்கியம். தங்கள் குழந்தைகள் பார்க்கும் டிஜிட்டல் கன்டன்ட்களை பார்த்து அவை அவர்களின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருவதா என்பதை ஆராய்ந்து தெரிந்துகொண்டு அவர்கள் அதை பயன்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும். உங்கள் குழந்தைகளின் டிஜிட்டல் அனுபவத்தில், சிறந்த பங்கு வகிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகள் தொழில்நுட்பத்துடன் நல்ல உறவை வளர்க்க குழந்தைகளுக்கு உதவவேண்டும்.
திறந்த உரையாடல்
திறந்த உரையாடல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கன்டன்ட் குறித்து வழக்கமான உரையாடல் மற்றும் ஆன்லைன் நடவடிக்கைகள் குறித்து உரையாடவேண்டும். அது அவர்களுக்கு மதிப்புமிக்க உள்ளீடுகளை வழங்கி, நம்பிக்கையை ஏற்படுத்தும். பெற்றோர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கிய டிஜிட்டல் பழக்கங்களை கற்றுக்கொடுக்க வழிகாட்ட உதவும்.
பொறுப்புடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது
பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பது, அவர்கள் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்களை கண்காணிப்பது, உதவிகரமான ஒன்று. அவர்களை கண்காணிப்பது அவர்களை இழிவுபடுத்துவதாக அமையக்கூடாது.
எனவே நம்பிக்கைக்கும், ஒழுக்கத்துக்கும் இடையே சமநிலையை பேணுங்கள். அவர்களை கண்காணிப்பது பின்விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது. குழந்தைகளின் அந்தரங்கத்தையும் மதிப்பதாக இருக்கவேண்டும். கொச்சைப்படுத்துவதாக இருக்கக்கூடாது.
டாபிக்ஸ்