Parenting Tips : குத்தும் எரியும் வெயில்! வெப்ப அலைக்கு பலியாகும் நிலை! குழந்தைகளை காக்க என்ன செய்யவேண்டும்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : குத்தும் எரியும் வெயில்! வெப்ப அலைக்கு பலியாகும் நிலை! குழந்தைகளை காக்க என்ன செய்யவேண்டும்?

Parenting Tips : குத்தும் எரியும் வெயில்! வெப்ப அலைக்கு பலியாகும் நிலை! குழந்தைகளை காக்க என்ன செய்யவேண்டும்?

Priyadarshini R HT Tamil
Jun 01, 2024 02:34 PM IST

Parenting Tips : குத்தும் எரியும் வெயிலால் வெப்ப அலைக்கு பலியாகும் நிலை உள்ளது. இதில் இருந்து குழந்தைகளை காக்க என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Parenting Tips : குத்தும் எரியும் வெயில்! வெப்ப அலைக்கு பலியாகும் நிலை! குழந்தைகளை காக்க என்ன செய்யவேண்டும்?
Parenting Tips : குத்தும் எரியும் வெயில்! வெப்ப அலைக்கு பலியாகும் நிலை! குழந்தைகளை காக்க என்ன செய்யவேண்டும்?

வீட்டிற்குள் இருந்து படிக்க வேண்டும்

வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தால், வெப்பநிலை அதிகம் உள்ளது. எனவே உங்கள் குழந்தைகளை வீட்டிற்குள் இருந்து விளையாட அனுமதியுங்கள். வீட்டிற்கு உள்ளேயே சாகசங்களை ஏற்படுத்துங்கள். தலையணைகள், சேர்கள், போர்வைகள் என வீட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை வைத்து விளையாட்டை நிர்மாணியுங்கள்.

ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள். குழந்தைகள் டேபிளுக்கு அடியில் சென்று விளையாட அனுமதியுங்கள். அவர்கள் குதித்து ஓடட்டும். தாவி விளையாடட்டும், வளைந்து வளைந்து ஓடி விளையாடட்டும்.

அறிவியல் பரிசோதனைகள் செய்து பார்க்கவேண்டும்

சில அறிவியல் பரிசோதனைகளை வீட்டில் இருந்தே செய்யமுடியும். அவற்றை குழந்தைகள் செய்வதை வலியுறுத்துங்கள். அதற்கான கிட்களும் கிடைக்கும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நீங்கள் சிலவற்றையும் செய்ய முயலலாம். பேக்கிங் சோடா மற்றும் வினிகரை வைத்து எரிமலையை உருவாக்கலாம். சர்க்கரையில் இருந்து ஸ்லைம்களை உருவாக்கலாம். இந்த விளையாட்டுத்தனமான நடவடிக்கைகள், அதே நேரத்தில் கற்றலுக்கு வழிவகுக்கும்.

வீட்டிற்குள்ளே இருந்து செய்யும் வேலைகளை செய்யவேண்டும்

வீட்டில் உள்ள ஹாலில் டென்ட் செட் செய்யவேண்டும். தலையணை மற்றும் போர்வைகள் வைத்து அதை உருவாக்கவேண்டும். கதைகள், ஸ்னாக்ஸ்கள் மற்றும் ப்ளாஷ் லைட் விளையாட்டுகள் வைத்து விளையாடவேண்டும். 

இது மணிக்கணக்காக குழந்தைகளை பொழுதுபோக்குடன் வைத்திருக்கும். இது அவர்களுக்கு சாகச உணர்வைத்தரும். இதனால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவேண்டிய தேவையில்லை.

கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்யலாம்

உங்கள் வீட்டில் உள்ள ஒரு கார்னரில் ஓவியம் வரைவதற்கு செட் செய்துவிடுங்கள். சில கைவினை விளையாட்டுக்களையும் நிகழத்துங்கள். பேப்பர், மார்க்கர்கள், க்ளூ மற்றும் ரிசைக்கிள் பொருட்களை வைத்து, உங்கள் குழந்தைகள் தங்களின் கைவினை திறமைகளை வெளிக்காட்ட அனுமதியுங்கள்.

ஒளித்து வைத்து விளையாடுவது

உங்கள் வீட்டுக்குள் ஏதேனும் பொருட்களை ஒளித்து வைத்துவிட்டு, மேப் போட்டு, சில பொருட்களை ஒளித்து வையுங்கள். இந்த நடவடிக்கைகள் பிரச்னைகளை தீர்க்கும் திறனை குழந்தைகளுக்கு வளர்க்கும். உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியுடனும், செயல் ஊக்கத்துடனும் வைத்திருக்கும்.

ஆன்லைன் கேம்கள் விளையாடலாம்

ஆன்லைன் கேம்கள் விளையாடுவது உங்கள் குழந்தைகளுக்கு நல்லது கிடையாது. ஆனால் கல்வி தொடர்பான ஆன்லைன் விளையாட்டுக்களை அவர்கள் விளையாட வேண்டும். அதற்கான ஆப்கள் உள்ளன. இதனால் உங்களுக்கு கற்றல் அவர்களுக்கு அதிகரிக்கும்.

சமையல் செய்யலாம்

உங்கள் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அவர்களுக்கு நீங்கள் சமையல் வேலைகளை கற்றுக்கொடுக்கலாம். இது அவர்களுக்கு உணவில் அளவு, மளிகை சாமான்கள், எப்படி சமைப்பது, பரிமாறுவது என அனைத்தையும் கற்றுக்கொடுக்கும். அவர்கள் தரமான சமையல் திறமைகளை வளர்த்துக்கொள்வதில்லை. அதனுடன், அவர்கள் கணிதமும் கற்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வாழ்வும் சிறக்கும்.

டான்ஸ் பார்ட்டி

உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த நடனத்தை இசையுடன் ஆடிக்காட்டுங்கள். உங்கள் அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் நண்பர்களின் குழந்தைகளை இணைத்து நடனம் ஆடவிடுங்கள். இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும். இதனால் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.