Parenting Tips : பதின் பருவம் மற்றம் வாலிப வயது குழந்தைகளின் பெற்றோரா? அவர்களிடம் எப்படி நடப்பது?
Parenting Tips : உங்கள் பருவ வயது குழந்தைகளுக்கு கட்டாயம் நீங்கள் நல்வழியில் நடக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
பதின் பருவத்தில் இருந்து வாலிப பருவத்திற்குள் உங்கள் குழந்தை நுழையும்போது, அந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. இந்த பருவத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இந்த காலத்தில் தான் அவர்கள் கொஞ்சம் பெரியவர்களாக மாறுகிறார்கள். அவர்களின் தனித்துவம் குறித்து அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். அவர்களை சுற்றியுள்ள உலகம் குறித்து அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்களை சுற்றியுள்ள அனைத்து குறித்தும் அவர்களுக்கு கருத்து ஏற்படுகிறது.
இந்த காலதட்டத்தில் அவர்கள் பெற்றோரின் கட்டுப்பாடுகளில் இருந்து விலகிவிடுவார்கள். தானாக சிலவற்றை செய்ய முயல்வார்கள். இந்த காலகட்டத்தில் இவர்கள் வளர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். சில நேரத்தில் குழந்தைகளாகவும் இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்பது அவசியம். அதே நேரத்தில் அவர்களை வழிநடத்துவதும் மிக கடினம்.
இந்தப்பருவத்தில் அவர்களுடன் நாம் நண்பர்களைப்போல் பழகவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நண்பர்கள் ஆனாலும், குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த வயதில் பெற்றோரின் உற்ற துணையால் மட்டும் அவர்கள் எதிர்கொள்ளும் உறவுச்சிக்கல்கள், எதிர்பாலின ஈர்ப்பு ஆகியவற்றை சமாளிக்க முடியும். அவர்களின் வயதுக்கு ஏற்ப அவர்களுக்கு பெற்றோர் உதவவேண்டும்.
திறந்த உரையாடல்
உங்கள் வாலிப வயது மற்றும் பருவ வயது குழந்தைகளிடம் திறந்த மற்றும் நேர்மையான உரையாடல் நிகழ்த்த வேண்டும். அப்போதுதான் அது பெற்றோர் – குழந்தை உறவை வலுப்படுத்தும். அவர்கள் தவறு செய்தாலும் அந்த தவறை உங்களிடம் எடுத்து வருவார்கள்.
சில எல்லைகள் கட்டாயம்
நாம் நமது குழந்தைகளுக்கு பிடித்த பெற்றோராக இருக்க வேண்டும் என்றாலும், அவர்களுக்கு தேவையான சில எல்லைகளை வகுக்க வேண்டும். அவர்களுக்கு சில விதிகளும் விதிக்கப்படவேண்டும். எனவே உங்கள் எதிர்பார்ப்புகளை தெளிவாக கூறிவிடுங்கள். அது தொடர்ந்து இருக்கட்டும்.
கட்டுப்பாட்டை அவர்களிடம் கொடுங்கள்
சில விதிகள் மற்றும் எல்லைகளும் கடுமையாக இருக்கும். எனவே உங்கள் குழந்தைகள் அவர்களுக்கு எந்த மாதிரியான எல்லைகள் விதிக்கப்படவேண்டும் என்று அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு கட்டுப்பாடு கொடுங்கள். இருதரப்பு எதிர்பார்ப்புகளையும் உறுதிப்படுத்த வேண்டும். எனவே அதுகுறித்து அவர்கள் முடிவெடுக்க அனுமதிக்கப்படவேண்டும்.
உணர்வு ரீதியான பாதுகாப்பு
சில நேரங்களில் நமது குழந்தைகள் நமக்கு சில ஆச்சர்யங்களையும், ஷாக்குகளையும் கொடுப்பார்கள். வீடு எப்போதும் அவர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை உறுதிப்படுத்துங்கள். அங்குதான் அவர்கள் எவ்வாறு இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அதுதான் அவர்களுக்கு நல்லதும்.
ஆரோக்கிய பழக்கவழக்கங்களுக்கு உதாரணமாகுங்கள்
நமது குழந்தைகள் எத்தனை வளர்ந்தாலும், அவர்கள் நமது வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறார்கள. அவர்கள் நம்மை பார்த்து சில பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்ற உதாரணமாக வேண்டும். ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் உதவவேண்டும். வீட்டில் பழகும் நல்ல பழக்கங்கள் நீண்ட காலம் அவர்களுக்கு உறுதுணையாகும்.
அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுங்கள்
சில நேரங்களில், வாலிப வயது குழந்தைகளை சமாளிப்பது நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் இந்த உலகை பார்க்கும் பார்வை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக இருக்கும். பெற்றோர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். குழந்தைகளின் மனஅழுத்தங்களுக்கு சிகிச்சை கொடுப்பது அவர்களின் பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.
சில நேரங்களில் இது அவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது. மனநல மருத்துவர்கள்தாக் குழந்தைகளை மதிப்பிடாமல் அவர்கள் தேறி வருவதற்கு காரணமாகிறது. எனவே உங்கள் குழந்தைகள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால், அவர்களுக்கு போதிய உறுதுணையாக இருங்கள்.
டாபிக்ஸ்