Parenting Tips : டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? வாங்க நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? வாங்க நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்!

Parenting Tips : டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? வாங்க நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்!

Priyadarshini R HT Tamil
Updated Jul 18, 2024 03:40 PM IST

Parenting Tips : டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா நீங்கள். எனில் அவர்களை கையாள்வதில் உள்ள சிரமங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள்.

Parenting Tips : டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? வாங்க நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்!
Parenting Tips : டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோரா? வாங்க நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்!

உங்கள் டீன் ஏஜ் குழந்தைக்கு நீங்கள் எப்படி எப்போதும் துணை இருக்கவேண்டும்?

டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோராக இருப்பது மிகவும் சவாலான ஒன்றுதான். ஆனால் அதில் சில வெகுமதிகளும் கிடைக்கும் என்பதால், இரண்டும் சேர்ந்த ஒன்றாக இந்தப்பருவம் இருக்கும். அவர்கள் பெரியவர்கள் ஆவதற்கான சிக்கலான பாதையில் டீன் ஏஜ் பருவத்தை கடக்கிறார்கள்.

டீன்ஏஜ் குழந்தைகளுக்கு தனிப்பட்ட வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் சுதந்திரம் தேவை. ஆரோக்கியமான, மரியாதையான, ஆதரவான ஒரு உறவை உங்கள் டீன் ஏஜ் குழந்தையுடன் வளர்த்துக்கொள்ள வேண்டுமெனில், அதற்கு உங்களுக்கு தேவையான விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

திறந்த உரையாடல்

உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளிடம் நீங்கள் வெளிப்படையாக பேசவேண்டும். இது அவர்களுக்கு நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. மேலும் உங்கள் டீன்ஏஜ் குழந்தைக்கு, அவர்களின் எண்ணங்கள் மற்றும் அவர்கள் தேவைகள் குறித்து நீங்கள் பகிரும்போது, அதை நீங்கள் விமர்சிக்க மாட்டீர்கள் என்ற எண்ணம் வரவேண்டும்.

எவ்வித விமர்சனமும் இன்றி நேர்மையான ஒரு உரையாடல் எப்போதும் உங்கள் இருவருக்குள்ளும் இருக்கவேண்டும். அவர்கள் கூறுவதை நன்றாக உற்று கவனியுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் நிலையில் இருந்து அவர்கள் கூறும் ஒவ்வொன்றையும் கேளுங்கள். அவர்கள் எங்கு பாதுகாப்பாக உணர்கிறார்களோ, அப்படி ஒரு இடத்தை அவர்களுக்கு ஒதுக்குங்கள்.

அவர்களின் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுங்கள்

டீன்ஏஜ் குழந்தைகள், அவர்களின் தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்க சுதந்திரத்தை விரும்புவார்கள். அவர்களின் தனித்தன்மைக்கு மதிப்பு கொடுக்க, அவர்களிடம் நம்பிக்கையை வளர்க்கவும் அது உதவும். அவர்களின் முடிவெடுக்கும் திறனையும் இது வளர்த்தெடுக்கும். உங்கள் டீன் ஏஜ் குழந்தையை வயது ஏற்ற முடிவெடுக்க அனுமதியுங்கள்.

இது அவர்களுக்கு பிரச்னைகளை அனுபவிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இதனால் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று புரிந்துகொள்வார்கள். அவர்களுக்கு தேவையானபோது, வழிகாட்டுங்கள். அவர்களின் அனைத்து தேர்வுகளுக்கும் அனுமதி கொடுப்பதை தவிருங்கள். சில முடிவுகளை நீங்களும் எடுக்கவேண்டும்.

தெளிவான எல்லைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்

உங்கள் குழந்தைகளுக்கு தெளிவான எல்லைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை விதித்துவிடுங்கள். அது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை வழங்கும். நீங்கள் அவர்களுக்கு விதித்துள்ள விதிகளை தெளிவாக விளக்கிவிடுங்கள்.

மேலும் அவற்றை நீங்கள் நடைமுறைப்படுத்துவதில் கடுமை காட்டுங்கள். சரியான காரணங்களுக்காக அதை தொடர்வதையும் அவர்களுக்கு விளக்கிவிடுங்கள். உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் இந்த விதிகளை மதித்து பொறுப்புடன் நடக்கவேண்டும் என்பதையும் அறிவுறுத்திவிடுங்கள்.

ரோல் மாடலாக இருங்கள்

உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள், அவர்களின பெற்றோரை அப்படியே கவனிக்கிறார்கள். எனவே நீங்கள் ஒரு நேர்மறையான நடவடிக்கைகளை பின்பற்றினால், அது அவர்களுக்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டாக அமையும். அவர்கள் அதை கடைபிடிப்பார்கள்.

உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளிடம் நீங்கள் எதுபோன்றற நடத்தைகளை, மதிப்பீடுகளையும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு மரியாதை, பொறுப்பு மற்றும் அனுதாபம் ஆகியவற்றை கற்றுக்கொடுங்கள். உங்களின் தவறுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். அதில் இருந்து அவர்கள் எப்படி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துவிடுங்கள்.

அவர்களின் ஆர்வங்களுக்கு ஆதரவு கொடுங்கள்

உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளின் ஆர்வங்களுக்கு ஊக்கம் கொடுங்கள். மேலும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுங்கள். அவர்களின் ஹாபிக்கள் மற்றும் செயல்பாடுகளில் நேர்மையான ஆர்வம் காட்டுங்கள்.

அவர்களுக்கு வாய்ப்புக்களையும், வளங்களையும் வழங்குங்கள். இதனால், அவர்கள் விரும்பும் ஒன்றை கற்க முனைகிறார்கள். அது விளையாட்டு, கலை, பாடம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆரோக்கிய பழக்கங்கள்

வளரிளம் பருவத்தில்தான் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் ஏற்படும். இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நலனுடன் இருப்பார்கள். எனவே அவர்களுக்கு ஆரோக்கிய பழக்கவழங்கள் மிகவும் அவசியம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவைத்தான் சாப்பிடவேண்டும்.

வழக்கமான உடற்பயிற்சி என்பது அவசியம். போதிய உறக்கம் கட்டாயம் வேண்டும். உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளின் மன ஆரோக்கியம் என்பது மிகவும் தேவையான ஒன்று. அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது, செய்ய தயாராக இருங்கள்.

பொறுப்பாக நடக்க கற்றுக்கொடுங்கள்

பொறுப்பாகவும், பொறுப்புடனும் நடந்துகொள்வது மிகவும் அவசியம். டீன் ஏஜி வயதில் அவர்கள் பொறுப்புணர்வு கற்கும்போதுதான், அவர்கள் வயதானவுடன், நம்பிக்கையானவர்களாகவும், நம்பத்தகுந்தவர்களாகவும் மாறுகிறார்கள். அவர்கள் செய்ய வேண்டிய வீட்டுவேலைகளை அவர்களுக்கு ஒதுக்கிவிடுங்கள்.

அப்போதுதான் அவர்கள் அதை பொறுப்புடன் செய்து முடிப்பார்கள். அவர்களின் பொறுப்புணர்வுக்காக அவர்களை பாராட்டுங்கள். ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால், அதை செய்து முடிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களின் முயற்சிகளைப் போற்றுங்கள். அவர்களின் முன்னேற்றங்களை பாராட்டுங்கள்.

பொறுமை மற்றும் புரிதல்

டீன்ஏஜ் குழந்தைகளுக்கு இந்த வயது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும். ஏனென்றால், அவர்களுக்கு எதுவும் முழுமையாக புரியாது. எனவே அவர்களுக்கு பொறுமை மற்றும் புரிதல் அவசியம் என்பதை கற்றுக்கொடுங்கள். அவர்களின் பெற்றோரிடம் இருந்து இதை கற்கும்போது, அவர்கள் அன்பு மற்றும் ஆதரவு இரண்டையும் பெறுங்கிறார்கள்.

அவர்களிடம் சண்டைகள் போடும்போது அமைதியாக போடுங்கள். அவர்களின் மனமாற்றம், உடல் மாற்றம் என அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கு உறுதுணையாக இருங்கள். அவர்கள் கற்று வளரும் வரை பொறுமையாக இருங்கள். இந்த பருவத்தில் கற்றலில் சவால்கள் என்பது பொதுவான ஒன்று. எனவே அவர்களுக்கு வழிகாட்டுங்கள். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்.