தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips Parents Of Self Confident Children Dont Do This

Parenting Tips : தன்னம்பிக்கையுடைய குழந்தைகளின் பெற்றோர் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள்!

Priyadarshini R HT Tamil
Mar 26, 2024 02:56 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தையை அதிக தன்னம்பிக்கையுடன் வைப்பது எப்படி?

Parenting Tips : தன்னம்பிக்கையுடைய குழந்தைகளின் பெற்றோர் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள்!
Parenting Tips : தன்னம்பிக்கையுடைய குழந்தைகளின் பெற்றோர் இதையெல்லாம் செய்ய மாட்டார்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

பொதுஇடத்தில் அவமதிக்கக் கூடாது

நம்மை யாராவது பொது இடத்தில் வைத்து திட்டிவிட்டால் நமக்கு எப்படி இருக்கும். அவமானமாக இருக்காது. அதுபோலத்தான் குழந்தைகளுக்கும் இருக்கும். பொதுஇடத்தில் அவர்களை வைத்து திட்டுவது அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் குறைக்கும். மாறாக அவர்களை தனியாக அழைத்துச் சென்று அந்த பிரச்னைகள் குறித்து பேசலாம். அவர்களின் கண்ணியத்தை காப்பதன் மூலம், அவர்களின் நம்பிக்கையைப் பெறலாம்.

ஒப்பீடு

ஒவ்வொரு குழந்தையும் தனித்திறன் கொண்டவர்கள். அவரவர்களுக்கு பலம், பலவீனம் உள்ளது. வளர்ச்சி காலத்தில் அவரவர் பலம், பலவீனத்தை நாம் உணர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து குழந்தைகளை அவர்களின் உடன் பிறந்தவர்களோடு, பள்ளித்தோழர்கள், உறவினர்களின் குழந்தைகளோடு ஒப்பிடுவது, அவர்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வையும், அவர்களுக்கே அவர்களின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும். அவர்களின் தனிப்பட்ட சாதனைகளை கொண்டாடுங்கள். அவர்களின் தனித்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். இது அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அடித்தளம் அமைக்கும்.

மன மாற்றங்களை அனுமதியுங்கள்

குழந்தைகள் குழப்பம் நிறைந்தவர்கள், திடீரென தங்களின் மனதை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் ஹாபியாக இருக்கட்டும், அல்லது எதிர்கால இலக்குகளாக இருக்கட்டும், ஒரு சிறிய விஷயங்களுக்கு கூட அவர்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களால், என்ன சாப்பிடலாம் என்று கூடி முடிவெடுக்க முடியாமல் இருப்பார்கள்.

அவர்களின் முடிவுகளை மாற்றிக்கொள்வதில் அவர்களை தடுத்தால், அது அவர்களின் சுய மரியாதையை பாதிக்கும். அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கும். எனவே அவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கி, அவர்கள் மனதை மாற்றிக்கொண்டே இருந்தாலும், அதை ஏற்கவேண்டும். பெற்றோர், அவர்களின் குழந்தைகளிக் தேர்வுகளை அவர்கள் தன்னப்பிக்கையுடன் தேர்ந்தெடுக்க உதவவேண்டும்.

அவர்கள் கூறுவதை கேட்டு பதில்கொடுங்கள்

உங்கள் குழந்தைகளையுன் உணர்வுகளை புறக்கணித்தாலோ அல்லது முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலோ, அவர்களின் உணர்வுகள் மதிப்பற்றவை மற்றும் முக்கியமில்லாதவை என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும். இது சுய விழிப்புணர்வை குறைக்கும், மூடிவைக்கும் உணர்வுகளை தோற்றுவிக்கும்.

உணர்வு அறிவுத்திறன் மற்றும் தன்னம்பிக்கை வளர்வதை தடுக்கும். எனவே அனுதாபத்துடன் உங்கள் குழந்தைகள் கூறுவதை கேட்டு, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, மதிப்பு பொடுத்து, அவர்களுக்கு வலுவான தன்னம்பிக்க வளர காரணமாகுங்கள்.

அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு, வலுவான உரையாடல் மிகவும் அவசியம். அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுத்து, அவர்களிடம் கேள்விகள் கேட்டாலோ அல்லது கருத்துக்களை கூறினாலோ அல்லது அவர்களின் கிரியேட்டிவான திறன்களை தடுத்தாலோ அது அவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் வளர்வதை தடுக்கும். எனவே திறந்த உரையாடலுடன், அவர்களை தொடர்ந்த் கவனிக்க வேண்டும். இது அவர்களின் தன்னம்பிக்கைக்கு உரமிடும். அவர்கள் தங்களை வெளிப்படுத்தவும் உதவும்.

எனவே இந்த குறிப்புக்களையெல்லாம் பின்பற்றி, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து தன்னம்பிக்கை நிறைந்த குழந்தைகளை வளர்த்தெடுங்கள். 

WhatsApp channel

டாபிக்ஸ்