Parenting Tips : குட் நைட் மட்டுமல்ல; உறங்கச் செல்லும் முன் உங்கள் குழந்தைகளிடம் கூற வேண்டியது என்ன தெரியுமா?
Parenting Tips : குட் நைட் மட்டுமல்ல; உறங்கச் செல்லும் முன் உங்கள் குழந்தைகளிடம் கூற வேண்டியது என்ன தெரியுமா?
குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ் மற்றும் அன்பான வார்த்தைகள்
படுக்கை அறைதான் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு மகிழ்ச்சியளிக்கும், அவர்கள் சேர்ந்திருக்கும் இடம். ஒரு நாளின் நிறைவு மற்றும் அப்போது நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்பான வார்த்தைளைப் பேசி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். உறங்கச்செல்லும் முன் நீங்கள் உங்கள் குழந்தைகளை எப்படி குஷிப்படுத்தி உறங்க வைக்கலாம் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
எனக்கு உன்னுடன் இருப்பதற்கு ஒரு நாள் கிடைத்தது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
ஒன்றாக நேரம் செலவிட்டது குறித்த உங்களின் மகிழ்ச்சியை நீங்கள் வெளிப்படுத்தும்போது அது குடும்ப பிணைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. உங்கள் குழந்தைகளை அது குஷிப்படுத்துவதுடன் அது அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வையும் கொடுக்கிறது. அது அமைதியான இரவு உறக்கத்திற்கு ஒரு நல்ல சூழலை உருவாக்குகிறது.
நீங்கள் எனக்கு மிகவும் சிறப்பு
உங்கள் குழந்தைகளின் தனித்தன்மைகள் மற்றும் திறமைகளை அங்கீகரித்து அவர்கள் எத்தனை மதிப்பானவர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தினீர்கள் என்றால் அவர்கள் மகிழ்வார்கள். இது ஒரு வலுவான பெற்றோர்-குழந்தை உறவை உருவாக்கும். அவர்களுக்கு உங்கள் மனதில் ஒரு சிறப்பான இடம் உள்ளது என்பது குறித்து இது கூறுகிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
உங்கள் நாள் எப்படி கழிந்தது என்பது குறித்து நான் கேட்க விரும்கிறேன்?
உங்கள் குழந்தைகளின் தினசரி அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் உங்கள் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் மற்றும் அவர்களுடன் திறந்த உரையாடலை ஊக்குவியுங்கள். இது உங்கள் பிணைப்பை மட்டும் பலப்படுத்துவதில்லை. அது அவர்களின் நாளை நல்ல முறையில் கழிக்க உதவுகிறது. அவர்களின் உணர்வு நலன்களையும் காக்க உதவுகிறது.
எது நடந்தாலும் நான் உன்னுடன் இருக்கிறேன்
குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை கட்டமைப்பது முக்கியம். உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும், உங்கள் அன்பு நிலையானது மற்றும் பிரிக்க முடியாதது என்று அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டிருங்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுங்கள். சவால்களை நேரடியாக எதிர்கொள்ளும் தைரியத்தை அவர்களுக்கு கொடுங்கள்.
உனது பெற்றோராக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்
அவர்களின் சாதனைகளை கொண்டாடுங்கள். அவை எத்தனை பெரியதாக அல்லது சிறியதாக இருந்தாலும் நல்லது. நீங்கள் அவர்களிடம் பெருமிதமாகக் கூறுவது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இது அவர்களை வெற்றியை நோக்கி செல்ல ஊக்குவிக்கிறது. வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் வெற்றியை அடைய வழிகாட்டுகிறது.
உங்களிடம் ஆச்சர்யமூட்டும் யோசனைகள் உள்ளன
அவர்களின் கற்பனைத்திறன் மற்றும் கிரியேட்டிவிட்டியை வளர்த்தெடுங்கள். அதற்கு நீங்கள் அவர்களின் யோசனைகளை வளர்க்க வேண்டும். இது ஒரு நேர்மறையான மனநிலையை உருவாக்குகிறது. பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்க உதவுகிறது.
நீ எவ்வளவு கடுமையான முயற்சிக்கிறாய்; எனக்கு பெருமையாக உள்ளது
அவர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள். இது அவர்களுக்கு விடாமுயற்சி மற்றும் மீண்டு எழும் ஆற்றலை தூண்டுகிறது. வாழ்வின் சவால்களை கடந்துவர தேவையான திறன்களை வளர்க்க உதவுகிறது.
நீ நல்ல நண்பன் அல்லது சகோதரன்/சகோதரி
குடும்பத்திற்குள் உள்ள உறவுமுறைகளில் மதிப்புகளை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். குடும்பத்தில் ஒரு நல்ல சூழல் இருக்கும்போது அவர்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரிடமும் நன்றாக பழகுவார்கள்.
நீங்கள் பலம் வாய்ந்தவராகவும், துணிச்சல்மிக்கவராகவும் உள்ளீர்கள்
உங்கள் குழந்தையிடம் தைரியம் மற்றும் பலத்தை வளர்த்தெடுங்கள். இவை அவர்கள் இந்த உலகத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வைக்கும். அவர்களுக்கு உள்ளார்ந்த பலம் மற்றும் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் திறன் வளரும்.
நீ நினைப்பதைவிட அதிகம் நீ நேசிக்கப்படுகிறாய்
உங்களின் எல்லையற்ற அன்பின் ஆழத்தை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்கள் இத்தனை ஆழமாக நேசிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டால், அது அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். அது அவர்கள் இரவில் நன்றாகவும், அமைதியாகவும் உறங்க நேர்மையான சூழலை உருவாக்கும்.
எனவே உறங்கச்செல்லும் முன் உங்கள் குழந்தைகளிடம் இவற்றையெல்லாம் கூறினால் அது அவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும். நிம்மதியாகவும் அவர்கள் உறங்கச்செல்லவும் உதவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்