Parenting Tips : உங்கள் குழந்தைகளிடம் பதிலளிக்கவேண்டுமா? எதிர்வினையாற்ற வேண்டுமா? இதோ டிப்ஸ்!
Parenting Tips : உங்கள் குழந்தைகளிடம் பதிலளிக்கவேண்டுமா? எதிர்வினையாற்ற வேண்டுமா? இதோ டிப்ஸ்!
உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? அவர்களுக்கு பதிலளிக்கவேண்டுமா அல்லது அவர்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டுமா? என்ன செய்வது என்று பாருங்கள்.
நீங்கள் மிகக்கவனமுள்ள பெற்றோராக ஏன் இருக்கவேண்டும்?
நீங்கள் கவனமுள்ள பெற்றோராக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்கிறீர்கள் என்று பொருள். இதற்கு அர்த்தம் நீங்கள் கோவமடைய மாட்டீர்கள் அல்லது சோர்ந்து போகமாட்டீர்கள் என்று அர்த்தம் கிடையாது.
எந்த சூழலையும் நீங்கள் எளிதாக கையாள்வீர்கள், அதை மாற்றவோ அல்லது கடக்கவோ முயற்சிக்க மாட்டீர்கள். ஒரு பெற்றோராக நீங்கள், உங்கள் குழந்தைகளுக்கு ஒரு மகிழ்ச்சியான இடத்தைக் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களை வெளிப்படுத்தவும், அவர்களின் உணர்வுகளை சிறப்பாக கண்டுபிடிக்கவும், அதை முறைப்படுத்தவும் அவர்களுக்கு தெரிந்திருக்கும்.
கவனமுள்ள பெற்றோராக இருப்பதன் நன்மைகள்
பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே சிறந்த தொடர்பை ஏற்படுத்தவேண்டும். உங்கள் குழந்தைகளின் தேவைகள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். உங்கள் உணர்வுகளை அடக்குவதில் நீங்கள் திறமையானவர்கள்.
நீங்கள் கடுமையானவராக இருக்க மாட்டீர்கள். உங்கள் குழந்தைகளிடம் மிருதுவாக நடந்துகொள்வீர்கள். உங்கள் குழந்தைகளுடனான உங்கள் உறவு எப்போது சிறப்பாக இருக்கும்.
அவர்களின் கோணத்தை புரிந்துகொள்ளுங்கள்
கவனமான பெற்றோராக நீங்கள் இருப்பது, நீங்கள்தான் சிறந்த பெற்றோர் என்பது அர்த்தமல்ல, உங்களை உங்கள் குழந்தைகளின் இடத்தில் பொருத்தி பாருங்கள். அப்போதுதான் அவர்களின் கோணங்கள் மற்றும் சூழல் புரியும். உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதை அறிவுறுத்துங்கள். அவர்களுக்கு அறிவுரைகள் கொடுப்பது அல்லது தீர்வுகள் கொடுப்பது என்றும மட்டும் இருக்காதீர்கள்.
எல்லைகளை ஒன்றாக வகுக்கவேண்டும்
திரை நேரம், சமக வலைதள பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பயன்பாடு என்று அனைத்திலும் நீங்கள் சேர்ந்து கலந்துரையாடி எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். விதிகளை வகுத்து, அதற்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.
மரியாதையுடன் தொடர்புகொள்ளுங்கள்
உங்கள் குழந்தைகளுடன் திறந்த உரையாடலை நடத்துங்கள். அவர்களுக்கு கடினமான தலைப்புகளைக் கூட பேசுங்கள். அவர்களின் கருத்துக்கள் மற்றும் கோணங்களுக்கு மதிப்பு கொடுங்கள். மரியாதையான உரையாடல் நடத்துவது எப்படி என்பதற்கு மாதிரியாகுங்கள். அவர்கள் அதை பின்பற்றுவார்கள்.
வெற்றியையும், தோல்வியையும் கொண்டாடுங்கள்
உங்கள் குழந்தைகளின் வெற்றி கொண்டாடுங்கள். அது சிறிய முயற்சியாக இருந்தாலும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அதே நேரத்தில், தோல்விகள் குறித்து திறந்த உரையாடல் நிகழ்த்த மறுக்காதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு தோல்விகளை, வளர்ச்சி மற்றும் கற்றலுக்கு வாய்ப்புகளாக பார்க்க கற்றுக்கொடுங்கள். அவர்கள் தோல்விகளில் துவண்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
விமர்சிக்காமல் அவர்கள் கூறுவதை கேளுங்கள்
உங்கள் குழந்தைகள் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதற்கும், அவர்கள் மீது விமர்சனங்கள் வரும் என்ற அச்சத்தை போக்கி அவர்கள் உங்களிடம் எதையும் கூறுவதற்கான சூழலை ஏற்படுத்துங்கள். அவர்கள் கூறுவதை நன்றாக கேளுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அதை நீங்கள் ஏற்கவேண்டும் என்பது அல்ல. ஆனால், அவர்களுக்கு காது கொடுங்கள்.
அவர்களை அவர்களாக இருக்க அனுமதியுங்கள்
உங்கள் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதியுங்கள். அவர்களின் உணர்வுகளை அவர்களுக்கு கையாள தெரியாது. ஒரு பெற்றோராக, நீங்கள் மிகப் பொறுமையாக இருக்கவேண்டும். அவர்கள் அவர்களின் எண்ணங்களை ஒளிவுமறைவின்றி உங்களிடம் வெளிப்படுத்தவேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்றும்போது, உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் இடையே புரிதல் ஏற்படும். இருவருக்குள்ளும், தொடர்பு, பிணைப்பு ஏற்படும். இது இருவரின் வளர்ச்சிக்கும் உதவும்.
டாபிக்ஸ்