Parenting Tips : உங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டுமா? அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!
Parenting Tips : உங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டுமா அவர்களிடம் இவற்றையெல்லாம் அடிக்கடி கூறுங்கள். அவர்கள் உற்சாகமடைவார்கள்.
குழந்தைகளுக்கு முதலில் இது தெரியவேண்டும்
குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. அவர்களை ஒட்டுமொத்தமாக நல்லவர்களாக வளர்த்தெடுப்பதில் பெற்றோர்களுக்குத்தான் பொறுப்பு உள்ளது. அவர்களின் பழக்கவழக்கங்கள், அவர்கள் செய்ய வேண்டியவை ஆகியவற்றை கற்றுக்கொடுப்பது பொற்றோரின் கடமை.
உங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டுமா அவர்களிடம் இவற்றையெல்லாம் அடிக்கடி கூறுங்கள். அவர்கள் உற்சாகமடைவார்கள்.
உங்களின் முயற்சிகள் அனைத்தும் போதுமானது
இந்த உலகத்தில் வெளிப்புற சாதனைகளை வைத்து மட்டும்தான் வெற்றி அளவிடப்படுகிறது. எனவே அதற்காக உழைக்கும் நமது குழந்தைகளின் முயற்சிகளை நாம் பாராட்ட வேண்டும். அவர்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்காமல் கூட போகலாம். ஆனால் அவர்களின் முயற்சிகளை பாராட்டாமல் விடாதீர்கள். அவர்களின் அர்ப்பணிப்பு அவர்களை மீண்டெழச்செய்து, அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகிறது.
நீ எனக்கு கிடைத்த வரம்
நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்துவது, மற்றும் நன்றியுணர்வு ஆகியவை, பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே பிணைப்பை ஏற்படுத்துகிறது. எனவே உங்கள் குழந்தைகளை எப்போதும் கொண்டாடுங்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கையில் வந்தது, உங்களுக்கு நிறைவையும், அளவிடாமுடியாததாகவும் உள்ளது.
பாதுகாப்பை கொடுப்பது
வலுவான பெற்றோர் – குழந்தைகள் உறவை வளர்க்க உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை கொடுங்கள். அவர்களுக்கு எப்போதும் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற உணர்வை கொடுக்க வேண்டும். அவர்களின் கஷ்ட காலங்கள் மற்றும் துன்பங்கள் என எதுவேண்டுமானாலும் வரலாம். அவர்கள் எப்போதும் உங்களிடம் உதவி கோர முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள்.
நீ எனது அன்பை தேடிப்பெறவேண்டியதில்லை. அது நிபந்தனையின்றி உனக்கு வழங்கப்படும்
உங்களின் அன்பு நிபந்தனையுள்ளதாக இருக்கக்கூடாது. எனவே உங்கள் குழந்தைகள் மீதான உங்களின் அன்பு நிபந்தனையற்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துங்கள். அவர்களின் வெற்றியிலும், தோல்வியிலும் உங்கள் அன்பு மாறாது என்பதை எடுத்துக்கூறுங்கள். அவர்கள் எப்படியிருந்தாலும், அவர்கள் மீதான அன்பு மாறாது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
உங்களுக்கு தனிப்பட்ட கருத்து இருக்கும். நான் அதுகுறித்து அக்கறை கொள்கிறேன்
உங்கள் குழந்தைகளிடம் தனித்தன்மையை வளர்த்தெடுங்கள். உங்கள் குழந்தைகளின் சிந்தனைகளுக்கு மதிப்பளித்து, கிரிட்டிக்கல் சிந்தனைகளை வளர்த்தெடுங்கள். அவர்களின் உணர்வுகள் மற்றும் கோணங்களை புரிந்துகொள்ளுங்கள். குடும்ப கலந்துரையாடல்கள் மற்றும் முடிவெடுக்கும்போது அவர்களின் கருத்துக்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
நான் அதுபோல் எனது உணர்வை உன்னிடம் பகிர்ந்திருக்க வேண்டும். நான் மன்னிப்பு கோருகிறேன்
உணர்வுகளை எப்படி கையாள்வது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும்போது, குழந்தைகள் அவர்களின் உணர்வுகளை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்கிறார்கள். நீங்கள் தவறு செய்யும்போது அவர்களிடம் மன்னிப்பு கோருங்கள். அவர்களின் செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். அவர்களுடன் எப்போதும் நல்ல உரையாடலில் இருங்கள்.
எதுவும் உங்களை நான் நேசிப்பதை தடுக்காது
எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் அன்பின் ஆழத்தை உணர்த்துங்கள். வாழ்க்கையின் சவால்கள் அவர்கள் புரிந்துகொள்ள சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொடுங்கள். அவர்களின் குறைபாடுகளை அவர்கள் நிறையாக்க உதவுங்கள். அவர்கள் மீதான உங்கள் அன்பு எப்போதும் நிலையானது என்பதை உணர்த்துங்கள். அவர்களின் நிலையான ஆதரவாகவும், அவர்களுக்கு கம்போஃர்ட் கொடுப்பவராகவும் இருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்