Parenting Tips : டீன்ஏஜ் குழந்தைகளை கண்டிக்கும்போது பெற்றோர் செய்துவிடும் தவறுகள்!-parenting tips mistakes parents make when scolding teenage children - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : டீன்ஏஜ் குழந்தைகளை கண்டிக்கும்போது பெற்றோர் செய்துவிடும் தவறுகள்!

Parenting Tips : டீன்ஏஜ் குழந்தைகளை கண்டிக்கும்போது பெற்றோர் செய்துவிடும் தவறுகள்!

Priyadarshini R HT Tamil
Jan 07, 2024 02:00 PM IST

Parenting Tips : டீன்ஏஜ் குழந்தைகளை கண்டிக்கும்போது பெற்றோர் செய்துவிடும் தவறுகள்!

Parenting Tips : டீன்ஏஜ் குழந்தைகளை கண்டிக்கும்போது பெற்றோர் செய்துவிடும் தவறுகள்!
Parenting Tips : டீன்ஏஜ் குழந்தைகளை கண்டிக்கும்போது பெற்றோர் செய்துவிடும் தவறுகள்!

இரட்டை போக்கை தவிர்க்கவும்

உங்கள் டீன்ஏஜ் குழந்தையுடன் அதிகம் அடையாளப்படுத்திக்கொள்வது நல்ல பிணைப்பை உருவாக்கும். ஆனால் அவர்கள் தனி நபர் என்பதை தெரிந்துகொள்வது முக்கியம். அவர்களின் ஆர்வங்கள், விருப்பங்கள், ஃபேஷன் தேர்வுகள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்வது மிகவும் அவசியம். ஆனால் அவர்களின் தனிப்பட்ட அடையாளத்தை அவர்கள் தெரிந்துகொள்ள உதவுவது மிகவும் முக்கியம்.

தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்

உங்கள் குழந்தைகள் உங்களை எதிர்த்து பேசும்போது அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தையின் மனநிலையை தொடர் நாடகத்துக்கு மாறும்படி மாற்றக்கூடாதது முக்கியம். அவர்களுக்கு தனிஇடம் கொடுங்கள்.

எதிர்காலத்தை நிர்ணயிக்காதீர்கள்

உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளின் எதிர்காலத்தை அவர்கள் இப்போது செய்யும் செயல்பாடுகளை வைத்து கணக்கிடாதீர்கள். அது உங்களுக்கு தேவையற்ற மன வருத்ததை அளிக்கும். அவர்களை சவால்களின் மூலம் வழிநடத்துங்கள். அவர்களின் முடிவுகளை அவர்களே எடுக்கும் திறன்களை வளர்த்துவிடுங்கள்.

அதிகாரம் செய்யாதீர்கள்

உங்கள் குழந்தைகளின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டுமெனில், திறந்த உரையாடலை அவர்களுடன் நடத்துங்கள். பிரச்னைகளையும் அவ்வாறே தீர்க்க முயற்சியுங்கள். அதன்மூலம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை பெறுங்கள். விடுத்து சண்டை செய்தீர்கள் என்றால் அது பிரச்னையை உருவாக்கும்.

இழப்பீடு விளையாட்டு வேண்டாம்

உங்கள் டீன்ஏஜ் குழந்தையின் முன் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்கள் முன் பெற்றோர் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்கக்கூடாது. உங்களிடம் உள்ள வேறுபாடுகளை தனிமையில் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் முன் ஒன்றாக இருங்கள்.

கவனிக்கும் கலை

பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறே அவர்கள் குழந்தைகளை கவனிக்காமல் போவதுதான். டீன்ஏஜ் குழந்தைகள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடும். அவர்களை அதற்காக குற்றம் கூறாமல் உங்கள் காதுகளை திறந்துவைத்துக்கொள்வது உங்களின் பிணைப்பை அதிகரிக்கும். உங்களின் போன்களை கீழே வைத்துவிட்டு, டிவியை அனைத்துவிட்டு, அவர்கள் கூறுவதை காதை திறந்து கேளுங்கள்.

சரியான நிலையில் இருப்பது

அதிக கடுமை, அதிக பாதுகாப்பு இரண்டுமே தவறுதான். அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அதே நேரத்தில் தேவையான எல்லைகளையும் வகுக்கவேண்டும். இந்த வகையில் நீங்கள் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

உணர்வறிதல்

உங்கள் குழந்தைகளின் உணர்வுகள் உங்களுக்கும், அவர்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்க அனுமதிக்காதீர்கள். அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லையென்றாலும், அவர்களுக்கு உதவுங்கள். இது சிறிய நடவடிக்கை அவர்களின் உணர்வு நலனில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தும்.

தனித்தன்மையை கொண்டாடுங்கள், ஒப்பீட்டை தவிருங்கள்

ஒவ்வொரு டீன்ஏஜ் குழந்தையும் தனியான குணநலன்களை கொண்டவர்கள். அவர்கள் மீது தேவையற்ற விஷயங்களை பிறர் திணிக்கலாம். ஆனால் அதற்கு அனுமதிக்காமல் அவர்களின் தனித்தன்மையை கொண்டாடுங்கள். அவர்களின் வெற்றிகளுக்கு பாராட்டு தெரிவியுங்கள். இது அவர்களின் தனிப்பட்ட பயணத்தில் பெருமையை ஏற்படுத்தும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.