Parenting Tips : படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளா? அவர்களை எப்படி வழிக்கு கொண்டுவருவது? இதோ யோசனைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளா? அவர்களை எப்படி வழிக்கு கொண்டுவருவது? இதோ யோசனைகள்!

Parenting Tips : படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளா? அவர்களை எப்படி வழிக்கு கொண்டுவருவது? இதோ யோசனைகள்!

Priyadarshini R HT Tamil
Feb 20, 2024 04:12 PM IST

Parenting Tips : படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளா? அவர்களை எப்படி வழிக்கு கொண்டுவருவது? இதோ யோசனைகள்!

Parenting Tips : படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளா? அவர்களை எப்படி வழிக்கு கொண்டுவருவது? இதோ யோசனைகள்!
Parenting Tips : படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளா? அவர்களை எப்படி வழிக்கு கொண்டுவருவது? இதோ யோசனைகள்!

படிக்க ஊக்கமளிப்பது

உங்கள் குழந்தைகளை படிக்க ஊக்கமளிப்பதில், அவர்களின் கல்வி பயணத்தில், மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும். படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். இப்போது அவர்களை படிக்க வைப்பது எளிமையாக இருக்கலாம்.

இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கென்று, தெளிவான அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அவர்களுடன் சேர்ந்து பேசி, கல்வி இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது, குழந்தைக்கு ஊக்கமளிப்பதாகவும், அவர்கள் வெற்றி பெறுவதற்கான வழியாகவும் இருக்கும்.

அன்றாட பழக்கவழக்கங்களை ஏற்படுத்த வேண்டும்

உங்கள் குழந்தைகளின் படிப்பு அட்டவணை சரியானதாக இருக்க வேண்டும். தினமும் இத்தனை மணி நேரம், எப்போது துவங்கி படித்து எப்போது முடிக்க வேண்டும் போன்ற வழக்கங்களை நீங்கள் அவர்களுக்கு கொடுத்துவிடவேண்டும்.

இதுபோல் ஒரு வழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், அவர்களிடம் அந்த பழக்கம் ஏற்பட வேண்டும். அது அவர்களுக்கு தினமும் படிக்க உதவும். படிக்கும் நேரம் அவர்களுக்கு ஆர்வமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்க வேண்டும். அது அவர்களை அச்சுறுத்துவதாக இருக்கக்கூடாது.

அவர்களுக்கு பரிசளிப்பது

அவர்கள் படித்து முன்னேறினால், அவர்களுக்கு பரிசளிப்பதை அறிமுகப்படுத்துங்கள். அவர்களின் சாதனை எத்தனை சிறியதாக இருந்தாலும், நீங்கள் அவர்களை முழுமையாக உற்சாகப்படுத்துங்கள். அவர்களின் தொடர் முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுங்கள்.

அவர்களை எப்போதும் எதிலாவது ஈடுபடுத்துங்கள்

அவர்களுடன் கலந்துரையாடும் வகையிலான செயல்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள். அதில் விளையாட்டு இருக்கட்டும். அவர்களுக்கு படிக்ககொடுக்கும் மெட்டீரியல்கள் அவர்களுக்கு படிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

இடைவேளை நேரம்

உங்கள் குழந்தைகளுக்கு சிறிய இடைவேளை கொடுங்கள். அவ்வப்போது கொடுக்கப்படும் இடைவேளைகள் ஓய்வு எடுக்கவும், ரிலாக்ஸ் செய்வதற்கும் உதவுகிறது. படிக்கும்போது கவனத்தை சிதறவிடாமல் காக்கிறது. குழந்தைகள் அதிகம் மனஉளைச்சலுக்கு ஆளாகமல் இருக்கவும் செய்துவிடுகிறது.

சுண்டியிழுக்கும் சூழல்

குழந்தைகளுக்கான படிக்கும் அறை அல்லது இடத்தை தேர்ந்தெடுக்கும்போது, நல்ல இடமாகவும், தாராளமான, காற்றோட்டம், வெளிச்சம் உள்ள அறையை தேர்ந்தெடுக்க வேண்டும். படிப்பதற்காக மட்டுமே அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் கவனம் சிதறாமல் படிக்க முடியும். அவர்களின் திறன் அதிகரிக்கும்.

தனிப்பட்ட ஆர்வம்

அவர்களின் தனிப்பட்ட ஆர்வத்தையும், பள்ளிப்பாடங்களையும் ஒன்றிணைத்து கற்றுக்கொடுங்கள். அவர்களின் ஹாபிக்களையும், பாடங்களையும் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு அது இன்னும் ஆர்வத்தை தூண்டும். அவர்கள் விரும்பும் ஒன்றுடன் சேர்ந்து படிக்கும்போது, அவர்களின் கற்றல் திறன் இன்னும் நன்றாகவும், ஆச்சர்யங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.

நேர்மறையான எண்ணங்கள்

அவர்களிடம் எப்போதும் நேர்மறை எண்ணங்களை விதையுங்கள். அவர்களின் முயற்சிகளுக்கு அவர்களை ஊக்கப்படுத்தி, பாராட்டுங்கள். அவர்களின் முயற்சிக்கு என்ன முடிவு கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனால் பாராட்டுவது அவர்களுக்கு முன்னேற ஊக்கமளிக்கும், அவர்கள் கல்வியில் மாற்றங்களை சந்திக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் திறனை வளர்த்தெடுக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.