Parenting Tips : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தினருக்கு சுதந்திரம் எவ்வளவு அவசியம்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தினருக்கு சுதந்திரம் எவ்வளவு அவசியம்?

Parenting Tips : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தினருக்கு சுதந்திரம் எவ்வளவு அவசியம்?

Priyadarshini R HT Tamil
Published Jul 30, 2024 06:00 AM IST

Parenting Tips : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தினருக்கு சுதந்திரம் எவ்வளவு அவசியம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Parenting Tips : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தினருக்கு சுதந்திரம் எவ்வளவு அவசியம்?
Parenting Tips : ‘இது கத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தினருக்கு சுதந்திரம் எவ்வளவு அவசியம்?

உங்கள் குழந்தையின் 13 முதல் 18 வயது வரை அவர்களின் டீன்ஏஜ் பருவம் உள்ளது. அப்போது அவர்கள், புதிய திறன்களை கற்கிறார்கள். தினமும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனைகிறார்கள்.

வளரிளம் பருவம் என்பது, முக்கியமான காலகட்டம், இந்த காலகட்டத்தில்தான் அவர்கள் வளர்ந்தவர்களாக இந்த சமுதாயத்தில் எப்படி வலம் வரப்போகிறார்கள் என்பது தெரியவரும். அவர்களின் வளர்ச்சியும் அபிரிமிதமாக இருக்கும்.

உங்கள் டீன்ஏஜ் குழந்தைகள் பல வழிகளில் சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் இருக்க முயல்வார்கள். ஆனாலும் அவர்கள் உங்களின் வழிகாட்டுதல் தேவை. உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் சவால்களை சந்திக்கும்போது, அவர்களுக்கு புதிய வாழ்வியல் திறன்களை கற்றுக்கொடுக்க வாய்ப்புக்கள் வழங்குகள்.

அவர்களுக்கு சுதந்திரமாகவும், பொறுப்புடனும் செயல்பட வாய்ப்புக்களை வழங்குங்கள். ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அடித்தளமாகும். உங்களின் பிணைப்பையும் வலுப்படுத்தும்.

ஆரோக்கிய பழக்க வழக்கங்களை கற்பது டீன்ஏஜ் பருவத்தின் முதல்படி. அடுத்து, அவர்களின் சமூக பழக்கவழக்கங்கள். டீன் ஏஜ் வயதுடையவர்களுக்கான ப்ரைவசி மற்றும் இடம் ஆகியவற்றைக் கொடுக்கும்போது, அது உங்கள் உறவை வலுப்படுத்துகிறது.

டீன் ஏஜ் குழந்தைகளுக்கு சுதந்திரம் ஏன் அவசியம்?

ஒரு டீன் ஏஜ் குழந்தை தனது வேலையில் வெற்றியாளராக இருக்கவேண்டுமெனில், முதலில் அவர்கள் வீட்டில் எப்படி சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று பழகவேண்டும். இது அவர்களின் இடத்தை அவர்கள் சுத்தமாக வைத்துக்கொள்வதில் துவங்குகிறது.

வீட்டில் உள்ள மற்ற இடங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். அவர்களின் வேலைகளுக்கான நேரத்தை ஒதுக்கி அவர்களே அவற்றை முடித்துக்கொள்ளவேண்டும். அவர்கள் சில முக்கிய ஒழுக்கங்களையும் அவர்களாகவே தேர்ந்தெடுத்து கற்கவேண்டியது அவசியம்.

வீட்டில்

டீன் ஆண்டுகள் இளம் பருவத்தினருக்கு முக்கியமான வயது ஆகும். அவர்கள் தாங்களாகவே முடிவெடுப்பதை பழக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு அதிக பொறுப்புக்கள் வழங்கப்படவேண்டும். தற்போது அவர்கள் எடுக்கும் அதிக பொறுப்புகள், அவர்கள் எதிர்காலத்தில் பெரியவர்களாக வளர்ந்தவுடன் அவர்களை கஷ்டப்படாமல் வைத்திருக்க உதவும்.

வீட்டு வேலைகளை உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு எவ்வாறு செய்யவேண்டும் என தெரிந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள். குறிப்பாக அடிப்படை சமையல, சுத்தம் செய்வது மற்றும் துணி துவைப்பது என அவர்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

உங்கள் டீன் ஏஜ் குழந்தைக்கு, அவர்களின் பொறுப்புகளின் அடிப்படையில் முக்கியத்தும் கொடுங்கள். அவர்கள் வீட்டு வேலைகள் செய்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்க வந்தவுடன், அவர்களை பைக் மற்றும் கார்கள் ஓட்ட அனுமதியுங்கள். பின்னர் அவற்றை தனியாக இயக்க அனுமதியுங்கள்.

டீன் ஏஜ் கால பொறுப்புகள்

அவர்களின் அன்றாட வாழ்வு மற்றும் ஆன்லைனில் சமூக பொறுப்பு உள்ளவர்களாக மாற்றுங்கள்.

அவர்களின் தனிப்பட்ட சுத்தம் மற்றும் உடமைகளை அவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

வீடு, பள்ளி மற்றும் பணியில் அவர்களின் வேலைகளை சிறப்பாக அவர்கள் முடிக்க வேண்டும்.

அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். மற்றவர்களிடம் சரியாக பேசுங்கள்.

சம்பாதிக்கவும், அதை தேவையானவற்றுக்கு செலவு செய்யவும் கற்றுக்கொடுங்கள்.

அவர்கள் வளரும்போது அவர்களுக்கு கார் ஓட்டவும், வங்கியில் கணக்கு துவங்கவும் உதவுங்கள்

தங்கள் வயதையொத்தவர்களைப்பார்த்து அவர்கள் பழகும் கெட்ட பழக்கவழக்கங்களான மது, புகை மற்றும் போதை ஆகியவற்றை எவ்வாறு கையாள்வது என்று கற்றுக்கொடுங்கள்.

ஒரு குழுவில் சேர்ந்து எப்படி பணியாற்றுவது என்று கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ள அறிவுறுத்துங்கள்.

இந்த வயதிலே செக்ஸ்வல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கற்றுக்கொடுங்கள்.

அவர்களை செல்ல அனுமதியுங்கள்

உங்கள் டீன் ஏஜ் குழந்தைக்கு இசை அல்லது விளையாட்டு பிடிக்கும் என்றால், அவர்களின் முயற்சிகளை பாராட்டுங்கள். இது அவர்கள் உங்களின் கனவுகளை சுமந்துகொண்டு திரியவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களின் வேலை அவர்களின் கனவுகளை தொடர்வதுதான் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தும்.

உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் விரைவில் பெரியவர்களாகப்போகிறார்கள். உங்கள் குழந்தைக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறனை கற்றுக்கொடுங்கள். சவாலான சூழல்களையும் அவர்கள் சந்திக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் இல்லாதபோதும் அவர்கள் பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளிப்பார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.