Parenting Tips : உங்கள் குழந்தை பொதுவெளியில் அடம்பிடிக்கிறார்களா? அவர்களை கையாளும் வழிகள்!-parenting tips is your child throwing up in public ways to deal with them - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் குழந்தை பொதுவெளியில் அடம்பிடிக்கிறார்களா? அவர்களை கையாளும் வழிகள்!

Parenting Tips : உங்கள் குழந்தை பொதுவெளியில் அடம்பிடிக்கிறார்களா? அவர்களை கையாளும் வழிகள்!

Priyadarshini R HT Tamil
Mar 02, 2024 02:46 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தை பொதுவெளியில் அடம்பிடிக்கிறார்களா? அவர்களை கையாளும் வழிகள்!

Parenting Tips : உங்கள் குழந்தை பொதுவெளியில் அடம்பிடிக்கிறார்களா? அவர்களை கையாளும் வழிகள்!
Parenting Tips : உங்கள் குழந்தை பொதுவெளியில் அடம்பிடிக்கிறார்களா? அவர்களை கையாளும் வழிகள்!

பொதுவெளியில் அடம்

பொதுவெளியில் அடம்பிடிக்கும் குழந்தைகளை கையாள்வது மிகவும் கடினமான ஒன்றுதான். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் அதன் சூழலின் அழுத்தத்தை இன்னும் அதிகரித்துவிடும். அந்த சூழல் ஏற்கனவே சவால் நிறைந்ததாக இருந்திருக்கும். 

அதில் இதுவும் சேர்ந்து நம்மை வாட்டும். எனினும், சரியான அணுகுமுறை மற்றும் மனநிலை இந்த நேரத்தில் தன்னம்பிக்கை மற்றும் கருணையுடன் நடக்க வழிவகுக்கும். பொதுவெளியில் அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகளை கையாளும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளை கவனியுங்கள் பொதுமக்களை அல்ல

முதலில், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைகொள்ளாதீர்கள். பெரும்பாலானோர், குழந்தைகள் பொதுவெளியில் கொந்தளிக்கும்போது பெற்றோரின் மனநிலை என்னவாக இருக்கும் என்று புரிந்துகொண்டு, அனுதாபம் கொள்வார்கள். 

உங்கள் குழந்தை மீது கவனம் செலுத்துங்கள். அமைதியாக இருங்கள். உங்கள் குழந்தைக்கு உங்களின் ஆதரவு வேண்டும். கடின காலங்களில் உங்கள் குழந்தைக்கு உங்களின் புரிதல் அவசியம்.

பொதுவெளியில் சத்தம் போடாதீர்கள்

ஏற்கனவே அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் நீங்கள் சத்தம்போட்டால் அவர்கள் மேலும் தங்களின் கோவத்தை அதிகரித்து நடந்துகொள்வார்கள். எனவே உங்கள் குழந்தைகளிடம் அமைதியாக பேசவேண்டும். அவர்களை புரிந்துகொள்வதும், ஆதரிப்பதும் அவசியம்.

அவர்களுக்கு இதமான சூழலை உருவாக்குங்கள், உத்ரவாதம் கொடுங்கள்

கோவத்தில் உங்கள் குழந்தை அடம்பிடிக்கும்போதோ அல்லது கொந்தளிக்கும்போதோ உங்கள் குழந்தைக்கு, அன்பும், ஆதரவும் தேவை. எனவே அவர்கள் அளவுக்கு இறங்கிச்சென்று, கட்டியணைத்து, அவர்களுக்கு இதமளிக்கும் வார்த்தைகளை பேசினால், அவர்கள் அமைதியாவார்கள். இந்த சாதாரண விஷயங்கள் சில ஆச்சர்யங்களை ஏற்படுத்தும். உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தி, அந்த சூழலை மாற்றுகிறது.

அவர்களை மடை மாற்ற முயற்சி செய்யுங்கள்

உங்கள் குழந்தைகளை அமைதிப்படுத்த முடியவில்லையென்றால், அவர்களை மடைமாற்ற முயற்சி செய்யுங்கள். அதற்கு அவர்களை ஆச்சர்யப்படுத்தும் வேறு எதாவது ஒன்றை காட்டலாம். இது அந்த சூழலை மாற்றி, மகிழ்ச்சியானதாக்கிவிடும். அவர்களின கவனத்தை திசை திருப்புங்கள். அவர்களுக்கு கோவம் ஏற்படுத்தும் விஷயத்தை மாற்ற உதவும்.

அடம்பிடிக்கும்போது காரணத்தை கேட்பதை தவிர்க்கவேண்டும்

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது இடையில் காரணத்தை கூறுவார்கள். அவர்கள் உணர்வுகளின் வேகத்தில் இருப்பார்கள், அவர்கள் நீங்கள் கூறும் எவ்வித விளக்கத்தையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நீங்கள் கூறுவதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் அமைதியாகும் வரை பொருத்திருங்கள். எந்த பிரச்னை குறித்து நீங்கள் பேசுவதற்கு முன்னும் அமைதியாக இருப்பது அவசியம்.

சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள்

அனைத்தும் தோற்றுவிட்டால், நீங்கள் இப்போது சூழலை கையில் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே அந்த பொது இடத்தில் இருந்து உங்கள் குழந்தையை அமைதியாக அழைத்துச்சென்று விடுங்கள். உங்கள் குழந்தையின் நலம் மற்றும் பாதுகாப்பு மிகவும் அவசியம். அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.

அமைதியாகவும், நீங்களாகவும் இருங்கள்

குழந்தைகள் பொது இடத்தில் கோவம் கொள்ளும்போது, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் அமைதியை கடைபிடிப்பது அவசியம். குழந்தைகள் இதுபோல் பொதுஇடங்களில் கோவம் கொள்வது, அடம்பிடிப்பது அனைத்தும் சகஜம் என பெற்றோர் உணரவேண்டும். அவர்களை பொறுமையாக கையாள்வது மற்றும் புரிந்துகொள்வது அவசியம்.

அமைதியும், ஊட்டச்சத்து உணவையும் உறுதிசெய்யுங்கள்

இதுபோன்ற கோவம் மற்றும் அடம்பிடிப்பதும் நடக்கவிடாமல் தடுப்பது மிகவும் அவசியம். உங்கள் குழந்தை நல்ல ஓய்வை எடுத்திருக்க வேண்டும். நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். இவையிரண்டையும் உறுதி செய்யுங்கள். இந்த கோவத்துக்கு உங்கள் குழந்தைகள் பசி மற்றும் சோர்வு கூட காரணமாகலாம்.

விட்டுக்கொடுக்காதீர்கள்

இறுதியாக, ஆனால் உங்கள் குழந்தை அடம்பிடித்தால், அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள். நீங்கள் ஒருமுறை அவர்கள் அடம்பிடிக்க இடம் கொடுத்தால் கூட, அவர்கள் இதுதான் அவர்கள் நினைத்ததை சாதிக்கும் வழி என்று தெரிந்துகொள்வார்கள். எனவே ஓரளவு மட்டுமே நீங்கள் அதற்கும் இடம்கொடுக்க வேண்டும்.

எனவே இந்த குறிப்புக்களை பின்பற்றினால் போதும், உங்கள் குழந்தைகள் பொதுவெளியில் அடம்பிடித்தால், அவர்களை எளிதாக கையாள முடியும். பேரன்டிங் பயணம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. அதில் பொதுஇடங்களில் குழந்தைகள் பிடிக்கும் அடமும், கற்றல் பயணம்தான், இது இருவருக்குமே ஒரு கற்றல் அனுபவமாக இருக்கும். அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இந்த சவாலான சூழலை எதிர்கொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.