Parenting Tips: உங்கள் குழந்தை போட்டி தேர்வில் வெற்றியை முத்தமிட வேண்டுமா.. பெற்றோர்களே இந்த 4 விஷயங்களில் கவனமா இருங்க
Top 4 Parenting Tips : பல நேரங்களில் பணிக்கோ படிப்புப்கோ ஒரு இடத்திற்கு பின்னால் லட்சக்கணக்கானோர் போட்டி தேர்வு எழுதுவதை பார்த்து சேர்வடைகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் போட்டிக்குத் தயார்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும்.
Parenting Tips : ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை தனது வாழ்க்கையில் வெகுதூரம் செல்ல வேண்டும். பல வெற்றிகளை தொட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லாத் துறைகளிலும் போட்டி வெகுவாக அதிகரித்துள்ளது. போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், பல துறைகளில் ஜெயிக்க முடியாது. கல்லூரி சேர்க்கையில் இருந்து நல்ல வேலை வரை எல்லாவற்றுக்கும் பெரும் போட்டி நிலவுகிறது. பல நேரங்களில் பணிக்கோ படிப்புப்கோ ஒரு இடத்திற்கு பின்னால் லட்சக்கணக்கானோர் போட்டி தேர்வு எழுதுவதை பார்த்து சேர்வடைகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் போட்டிக்குத் தயார்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும். உங்கள் பிள்ளையும் ஏதேனும் போட்டித் தேர்வுக்குத் தயாராகி கொண்டிருந்தால் பொறுப்பான பெற்றோராக நீங்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இன்று இந்த முக்கியமான விஷயங்களை உங்களுக்காகக் கொண்டு வந்துள்ளோம்.
குழந்தைகளின் உணவில் கவனம் செலுத்துங்கள்
உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் குழந்தை மனதளவிலும், உடலளவிலும் வலுவாக இருக்கும். உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, குழந்தைகளின் உணவில் அனைத்து சத்துக்களையும் சேர்த்துக் கொள்வது அவசியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் உணவில் தேவையான அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க அறிவுறுத்துங்கள், மேலும் அவர்களின் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால், குழந்தைகளை காலையில் யோகா செய்யச் சொல்லுங்கள். இது மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் குழந்தை படிப்பில் கவனம் செலுத்துவதை எளிதாக்குகிறது.
வீட்டில் சூழ்நிலையை மேம்படுத்துங்கள்
படிக்கும் குழந்தைகளை சுற்றியுள்ள சூழல் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் பிள்ளை போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமெனில், வீட்டில் உள்ள குழந்தைகளுக்குச் சாதகமான சூழலை வழங்க வேண்டும். வீட்டில் எவ்வளவு நேர்மறையாக இருக்கிறதோ, அவ்வளவு சிறப்பாக குழந்தை தனது இலக்குகளில் கவனம் செலுத்த முடியும். மன அழுத்தம் இல்லாமல் இருந்தால், குழந்தைக்கு படிக்க வேண்டும் என்ற உணர்வு வரும். குழந்தையின் மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியை அதிகரிக்க தியானம் செய்யுமாறும் நீங்கள் அவருக்கு அறிவுறுத்தலாம். இது தவிர, மன அழுத்தத்தைக் குறைக்கும் சில தாவரங்களையும் நீங்கள் வீட்டில் நடலாம்.
குழந்தைகளுடன் பேசுங்கள்
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் குழந்தைகள் பெரும்பாலும் தோல்வியடையும் போது குழப்பமும் பீதியும் அடையத் தொடங்குகிறார்கள். சரியான ஆலோசனை கிடைக்காத நேரத்தில், அவர்கள் மன அழுத்தத்திற்கு இரையாகத் தொடங்குகிறார்கள். உங்கள் குழந்தையுடன் இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தவிர்க்க, உங்கள் குழந்தையின் தொழில் தொடர்பான விஷயங்களை நீங்கள் அவ்வப்போது விவாதிக்க வேண்டும். குழந்தைகள் குழப்பத்தில் இருக்கும்போது, சரியான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் குழப்பத்தை அகற்றுங்கள்.
வழக்கத்தில் மாற்றங்களைச் செய்யுங்கள்
பல நேரங்களில் குழந்தைகள் படிக்கும் போது சலிப்படைகிறார்கள். தேர்வுக்குத் தயாராகும் போதும், அதே வழியைப் பின்பற்றும்போதும், அவர்கள் விரக்தியடையத் தொடங்குகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் செறிவு சக்தி குறையத் தொடங்குகிறது. குழந்தைகளை ஊக்குவிக்கவும், அவர்களை நேர்மறையாக வைத்திருக்கவும், அவ்வப்போது அவர்களின் வழக்கத்தை மாற்றுவது அவசியம். இதற்காக, நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். குழந்தைகளுடன் வெளிப்புற விளையாட்டுகளை விளையாட நீங்கள் எப்போதாவது திட்டமிட முடியுமா? என்று பாருங்கள். பாடநெறி சாராத செயல்பாடுகளில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்கலாம். இதனால், குழந்தைகளின் மனதில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு, மீண்டும் படிப்பில் உற்சாகமாக இருக்க முயற்சிப்பார்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்