தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips How To Raise Loving And Caring Children

Parenting Tips : அன்பும், அக்கறையும் நிறைந்த குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jan 20, 2024 01:30 PM IST

Parenting Tips : அன்பும், அக்கறையும் நிறைந்த குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

Parenting Tips : அன்பும், அக்கறையும் நிறைந்த குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
Parenting Tips : அன்பும், அக்கறையும் நிறைந்த குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

அக்கறை குடும்ப மதிப்பீடாகக்கொள்ளுங்கள்

மற்றவர்களிடம் அன்பு காட்டுவதும், பரிவுடன் நடந்துகொள்வதும், உங்கள் குடும்பத்தின் பழக்கமாக இருக்கட்டும். உங்கள் குழந்தைகளிடம் அடுத்தவர்களின் உணர்வுகள் மற்றும் தேவைகள் குறித்து பேசுங்கள். அவர்களுக்கு அன்பு எதிர்பார்க்கும் ஒன்றல்ல, கொண்டாடப்படவேண்டிய ஒன்று என்பதை கற்றுக்கொடுங்கள்.

பழக்கம்தான் உங்கள் சரியாக்குகிறது

உங்கள் குழந்தைகளின் அன்றாட வாழ்வியல் பழக்கவழக்கங்களில், நன்றியுடன் நடந்துகொள்வதை ஊக்கப்படுத்துங்கள். நன்றி கூறுவது அல்லது தேவையுள்ள நண்பருக்கு உதவுவது நீண்ட நாள் பழக்கமாக்க வேண்டும். அவர்களை வயது தொடர்பான சேவை பழக்கவழக்கங்களில் ஈடுபடுத்துங்கள். பொறுப்பு மற்றும் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

வார்த்தைகளைவிட செயல்களே அதிகம் பேசுகிறது

குழந்தைகள் சிறந்த பார்வையாளர், அவர்கள் பார்க்கும் செயல்களில் இருந்த அவர்கள் கற்கிறார்கள். எனவே நீங்கள் அவர்களுடன் தினமும் உரையாடும்போது, அன்பை மையமாக வைத்திருங்கள். ஒரு பக்கத்து வீட்டுக்காரருக்கு உதவுவது, ஒருவர் மீது பரிவு காட்டுவது, குறிப்பாக கஷ்டத்தில் உள்ளவருக்கு ஆதரவாக இருப்பது, இவற்றில் உங்கள் செயல்கள், அவர்களிடம் ஒரு பிம்பத்தை தோற்றுவிக்கும்.

மரியாதை வீட்டில் இருந்து துவங்குகிறது

உங்கள் குழந்தையை மரியாதையுடன் நடத்துங்கள். அதே மரியாதையை அவர்கள் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதையும் உறுதியாகக் கூறுங்கள். உங்கள் குடும்பத்தில் மரியாதையை நீங்கள் அறிவுறுத்துவதன் மூலம், நீங்கள் அன்பு மற்றும் ஆதரவு குறித்து உங்கள் குழந்தைக்கு ஒரு மதிப்பு மிகுந்த பாடத்தை கற்றுக்கொடுக்கிறீர்கள். 

குழந்தைகள் நேர்மறையான நடத்தைகளை அப்படியே திருப்பி செய்வார்கள். அவர்கள் முதலில் பார்க்கும் ஒன்று அவர்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதியும்.

அவர்களின் ஒழுக்க ஆசானாக இருங்கள்

ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பதில் நீங்களே முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். எனவே அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மதிப்பீடுகளை நீங்கள் பின்பற்றுங்கள். 

நேர்மை, ஒற்றுமை, நன்னடத்தை அனைத்தையும் நீங்கள் பின்பற்றுங்கள். இந்த மதிப்பீடுகளை அறிவுறுத்தும் கதைகளை அவர்களுக்கு கூறுங்கள். அறத்துடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

செயலில் பரிவு

உங்கள் குழந்தைகளுக்கு அனுதாபத்தின் ஆற்றல், புரிதல், பிறருடன் பகிர்தல், மற்றவர்களின் உணர்வை பகிர்ந்துகொள்வது, இது நண்பர்களின் சந்தோஷம் அல்லது துக்கம் எதுவாக இருந்தாலும், ஒரு பரிவுமிக்க சூழலை உருவாக்குவது, உணர்வு ரீதியாக அறிவுத்திறனுடன் இருப்பது, அவர்களை சுற்றியுள்ளவர்கள் மீது அக்கறையுடன் நடந்துகொள்வது என அவர்கள் எப்போதும் இவற்றையெல்லாம் கற்கவேண்டும்.

நன்றியுணர்வு

நன்றியுணர்வை உங்கள் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். அவர்களுக்கு நன்றியுணர்வை வெறும் வார்த்தையாக மட்டும் கற்றுக்கொடுக்காமல், அவர்களுக்கு அவர்களின் வாழ்வில் பின்பற்றத்தக்க மதிப்பாக அதை பயன்படுத்துங்கள். நன்றியுணர்வுதான், அன்பான இதயத்துக்கு அடிகோலுகிறது.

விதிகளையும், மற்றவர்களையும் மதிக்க வேண்டும்

உங்கள் குழந்தைகளுக்கு விதிகளையும், மற்றவர்களையும் மதிக்க கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு விதிகளின் முக்கியத்துவத்தை மதிக்க வையுங்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கவில்லை. ஆனால், அவர்களை வடிவமைக்கிறது. ஒரு சிறந்த மற்றும் பொறுப்பானவராக்குகிறது.

பொறுமை மற்றும் புரிதல்

பேரன்டிங் பயணத்தில் மேடு, பள்ளங்கள் அதிகம் இருக்கத்தான் செய்யும். எனவே பொறுமையாக இருந்து உங்கள் குழந்தைகளுக்கு புரிதலை ஏற்படுத்துவது முக்கியம். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வது அவசியம். அவர்கள் தவறு செய்வதற்கு அனுமதியுங்கள். அதிவிருந்து கற்க கற்றுக்கொடுங்கள், இதிலிருந்து அவர்கள் பரிவுமிக்கவராகட்டும்.

சேவைகளில் ஈடுபடுத்துங்கள்

உங்கள் குழந்தைகளை சேவைப்பணிகளில் ஈடுபடுத்துங்கள். ஏதேனும் ஒன்றில் அவர்கள் தன்னார்வலராக கலந்துகொள்ளட்டும். உள்ளூர் உணவு வங்கிக்கு உணவு சேகரிக்க செல்வது. அனைவரும் சேர்த்து வீதிகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது. இந்த நடவடிக்கைகளை குழந்தைகளுக்கு பொறுப்பை ஏற்படுத்தும். இது இந்த உலகம் குறித்த நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும்.

WhatsApp channel

டாபிக்ஸ்