Parenting Tips : குளிர்கால நோய்களில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி?
Parenting Tips : குளிர்கால நோய்களில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி?
குளிர்காலத்தில் அனைவருக்கும் நோய்கள் ஏற்படுவது சகஜம்தான். குறிப்பாக குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குளிர்காலத்தில் அதிகம். சளி, வைரஸ் தொற்று, காய்ச்சல் என அவர்கள் அவதிப்படுகிறார்கள். உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை பெருக்க செய்ய வேண்டியது என்ன என்று தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக குளிர்காலத்தில் அவர்களை காக்க என்ன செய்யலாம்?
போதிய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு தேவையான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள். காய்ச்சலை தடுக்க தடுப்பூசி மிகவும் அவசியம். இது முழு நோய் எதிர்ப்பை கொடுக்காது. எனினும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி வைரசுக்கு விரைவான பதில் கொடுக்கிறது. கடும் நோய்வாய்ப்படுவதையும், சிக்கல்களையும் தவிர்க்கிறது.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
எந்த உணவும் உடலின் நோயை போக்கக்கூடியவை கிடையாது. ஆனால் சரிவிகித உணவு, உடலின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாததாகிறது. எனவே உங்கள் குழந்தைகளை அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவை உங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கள் குறித்து நீங்கள் அக்கறை கொண்டீர்கள் என்றால், ஒரு உணவு நிபுணரை அணுகி அவர்கள் அறிவுத்தும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவை சாப்பிடுங்கள்.
வைட்டமின் டி
வைட்டமின் டி உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வழங்குவதில் சிறந்த பங்கு வகிக்கிறது. குளிர்கால வெப்பம் மற்றும் உணவு மட்டும் போதிய அளவு வைட்டமின் டியை வழங்காது. எனவே உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க போதிய வைட்டமின் டியை எடுத்துக்கொள்ளுங்கள்.
கை சுகாதாரத்தை பேணுங்கள்
இன்ஃபுளுயன்சா உள்ளிட்ட வைரஸ்கள், சுற்றுப்புறத்தில் 7 நாட்கள் வரை தங்கும். எனவே கை சுகாதாரத்தை பேணுவது நல்லது. இது தொற்றை தடுக்க உதவும். எனவே குழந்தைகளுக்கு முறையாக கை கழுவுவதை கற்றுகொடுங்கள். அது வைரஸ் கைகளில் இருந்து முகத்திற்கு பரவுவதை தடுக்கிறது.
மாஸ்க் அணிவது
அனைவரும் பிடிக்காத ஒன்றுதான் இந்த மாஸ் அணிவது. மாஸ்குகள் ஃப்ளூ வைரஸ்கள் உள்ளே செல்வதை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அது கோவிட் – 19 தொற்றுக்கு எதிராகவும் பாதுகாப்பை வழங்குகிறது. அது அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலனையும் காக்க உதவுகிறது.
சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்
சளி மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் நெருக்கமான தொடர்பால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு எளிதாக தொற்றுகிறது. எனவே குழந்தைகளிடம் இருந்து விலகியிருங்கள். பாத்திரங்கள், உணவுகள், பானங்கள் என அனைத்தையும் பகிர்வதை தவிருங்கள். இது வைரஸ் பரவுவதை குறைக்கும்.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது
போதிய உறக்கம், உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. உங்கள் குழந்தைகளுக்கு போதிய உறக்கத்தை உறுதிப்படுத்துங்கள். அவர்களின் தூக்க நேரம் அவசியம். எனவே அவர்களுக்கு உறங்கச்செல்லும் நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரம் இரண்டையும் உறுதிப்படுத்துங்கள். திரை நேரத்தை குறையுங்கள். கட்டாயம் உறங்கச் செல்வதற்கு ஒரு மணிநேரம் முன் திரைக்கு கட்டாயம் தடை விதியுங்கள்.
டாபிக்ஸ்