Parenting Tips : உங்கள் குழந்தையின் மைண்ட் பவரை அதிகரிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
Parenting Tips : புத்திசாலித்தனமான குழந்தைகளை வளர்க்க வேண்டுமா? இதோ இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

குழந்தைகளை வளர்ப்பது மிகவும் சவாலான ஒன்றுதான். ஆனால் அவர்கள் மனஅளவில் பலத்துடன் வளர வேண்டுமென்பது மிகவும் முக்கியம். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை நீங்கள் கடைபிடித்தீர்கள் என்றாலே போதும் உங்கள் குழந்தைகளின் மைண்ட் பவரை அதிகரிக்கலாம். மேலும் அதன் மூலம் அவர்களை நீங்கள் நன்முறையில் வளர்த்தெடுக்கலாம்.
ஒன்றாக சேர்ந்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும்
உங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு பிரச்னைகளை தீர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்க வேண்டும். தீர்வு காண மற்றும் அவர்களுக்கு எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க இவை உங்களுக்கு உதவும். இது அவர்களை புத்திசாலி ஆக்குவது மட்டுமல்ல அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து கடினமான சூழ்நிலைகளை கையாள உதவுகிறது.
நன்றாக கற்பவர்போல் சிந்திக்க வேண்டும்
உங்கள் குழந்தைகளிடம் கூறுங்கள், கடினமாக முயற்சிப்பது புத்திசாலித்தனமான ஒன்று, முயற்சிகளில் இருந்து பின்வாங்கக்கூடாது என்பதையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தவறுகள் செய்யலாம் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். ஆனால் அதிலிருந்து கற்று எப்படி திருந்தி முன்னேறிச்செல்ல வேண்டும் என்பதையும் அவர்களுக்கு புரியவையுங்கள்.
ஒரு தோல்விக்குப்பின் பலமடைவது எப்படி?
வாழ்க்கை எப்போது இலகுவாக மட்டுமே சென்றுகொண்டிருக்காது. மேடு, பள்ளங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. உங்கள் குழந்தைகளுக்கு விழுவதும், வளர்வதன் ஒரு பகுதிதான் என்பதை கற்றுக்கொடுங்கள். அவர்கள் கடின காலங்களை கடந்து அவர்கள் முன்னேறிச்செல்ல அவர்களுக்கு உதவுங்கள். இதுதான் அவர்களை பலமிக்கவர்களாக்குகிறது.
உணர்வுகளை கட்டுப்படுத்துவது
உங்கள் குழந்தைகளுக்கு உணர்வுகளை கட்டுப்படுத்த அல்லது எவ்வாறு கையாளவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுங்கள். மகிழ்ச்சி, சோகம், மனக்குழப்பம் என அனைத்துக்கும் ஒரு தீர்வு உள்ளது என்பதை கற்றுக்கொடுங்கள். அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துவது மற்றும் அவர்களை உளப்பூர்வமாக பலமாக்குவது குறித்தும் அவர்களுக்கு உணர்த்துங்கள்.
நேர்மறையாக இருப்பது மற்றும் நல்லவற்றை மட்டும் பார்ப்பது
உங்கள் குழந்தைகளை எப்போதும் ஒரு பிரச்னையில் உள்ள நல்ல பக்கத்தை பார்க்க ஊக்கப்படுத்துங்கள். வாழ்க்கை பிரச்னைகளை ஏற்படுத்தும்போது, அவர்களுக்கு தீர்வுகளை கொடுப்பது குறித்து பேசுங்கள்.
பிரச்னைகளை போட்டு குழப்பிக்கொண்டிருக்காமல், தீர்வுகளை நோக்கி நகர்த்துங்கள். இந்த நேர்மறையான எண்ணங்கள் உங்களுக்கு கடுமையான நேரங்களை எளிதாக கடக்க உதவும்.
அவர்களாகவே அவர்களின் வேலைகளை செய்துகொள்ள வேண்டும்
உங்கள் குழந்தைகளை அவர்கள் தங்களாகவே அவர்களின் வேலைகளை செய்துகொள்ள அனுமதிக்கவேண்டும். சிறு வயது முதல் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வேலைகளே தாங்களே செய்துகொள்ள வேண்டும்.
அவர்கள் தாங்களாகவே தங்களின் வேலைகளை தேர்ந்தெடுத்து செய்வது அவர்களுக்கு பொறுப்புணர்வை கொடுக்கிறது. மேலும் அவர்களின் வளர்ச்சிக்கு அது உதவுகிறது.
மற்றவர்களுடன் நன்றாக விளையாட வேண்டும்
உங்கள் குழந்தைகளுக்கு நண்பர்களுடன் சேர்ந்த விளையாட கற்றுக்கொடுங்கள். அவர்களுடன் சேர்ந்து நீங்கள் ஒன்றாக விளையாடும்போது, அது அவர்களை பலமாக்குகிறது. அவர்கள் மனஅளவிலும், உடல் அளவிலும் அவர்களை பலப்படுத்துகிறது.
வீட்டை ஒரு மகிழ்ச்சியான இடமாக மாற்றுவது
ஒரு மகிழ்ச்சியான வீட்டில் தான் உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உணர்கின்றன. அவர்களிடம் பேசுங்கள், அவர்கள் கூறுவதை கவனியுங்கள்.
அவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு அன்பு உணர்வை கொடுங்கள். அது அவர்களை மகிழ்ச்சியுடன் வாழவைக்கும். ஒரு மகிழ்ச்சியான வீடு அவர்களை பாதுகாப்புடன் வளர வைத்து, அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
அம்மா அப்பாபோல் துணிச்சல் மிக்கவராக இருங்கள்
உங்கள் குழந்தைகளிடம் எடுத்துக்கூறுங்கள். வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பிரச்னைகள் வரும். பெரியவர்களுக்கு கூட கடின காலங்கள் உண்டு. எனவே உங்கள் கதைகளை நீங்கள் பிரச்னைகளை எதிர்கொண்ட, அவற்றை சமாளித்த கதைகளை அவர்களிடம் எடுத்துக்கூறுங்கள்.
நீங்கள் கடின காலங்களை எவ்வாறு கையாண்டீர்கள் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறுங்கள். அவர்களுக்கு அது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
அவர்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும்
ஆரோக்கியம் மற்றும் அவர்கள் நன்றாக உறங்கவேண்டும், நன்றாக சாப்பிடவேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க கற்றுக்கொடுங்கள்.
நல்ல உணவு சாப்பிட கற்றுக்கொடுங்கள். பலமான உடல்தான் பலமான மனதுக்கு காரணம். எனவே உடல் நலனை பராமரிப்பது மன நலனுக்கு நல்லது என்பதை கற்றுக்கொடுங்கள்.
இறுதியாக
உங்கள் குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் மன உறுதியுடன் வளரவேண்டும். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் செய்வது நல்லது. எனவே இந்த குறிப்புகளை நீங்கள் பின்பற்றுங்கள். இதை நீங்கள் தினமுமே கடைபிடித்தீர்கள் என்றால் போதும்.
இது உங்களுக்கு உதவுகிறது. பலமான மனதை வளர்த்து, வாழ்நாள் சாதனைகளை அவர்கள் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். உங்கள் அன்பும், ஆதரவும் அவர்கள் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அது உங்கள் குழந்தையின் தன்னபிக்கையை அதிகரித்து, அவர்களின் மீள்சக்தியை அதிகரிக்க உதவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்