Parenting Tips : வேலை தேடும் குழந்தைகளுக்கு எப்படி உதவலாம்? இதோ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Parenting Tips : வேலை தேடும் குழந்தைகளுக்கு எப்படி உதவலாம்? இதோ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
உங்களின் வளர்ந்த குழந்தையை முன்னேற்றுவது
ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையை வழி நடக்துவது ஒரு சிறந்த பயணம்தான். எனினும், பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகள் குறிப்பாக வளர்ந்த குழந்தைகளில் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். குறிப்பாக அவர்களுக்கு தேர்வு நேரம், வேலைக்கு செல்லும் காலங்கள் என அவர்கள் வாழ்வில் உங்களின் பங்கு அத்யாவசியமானது.
வேலை தேடும் அவர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரை, பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். கல்லூரியில் இருந்து அவர்கள் பணிக்கு செல்லும்போது ஒரு பெரிய மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு உதவுவது மிகவும் அவசியம்.
உங்கள் ரெஸ்யூம் எப்படி இருக்கவேண்டும்?
உங்களின் ரெஸ்யூம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு நல்ல ரெஸ்யூமை அவர்கள் உருவாக்கவேண்டும். அவர்களின் திறன்கள், திறமைகள், அனுபவங்கள், சாதனைகள் என அவை அடக்கியிருக்க வேண்டும்.
அவர்களின் திறமைகள் மற்றும் அவர்களின் உழைப்பை வெளிப்படுத்திய செயல்கள், பிராஜெக்ட்கள், கிளப்களை அவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒரு சிறந்த ரெஸ்யூம் தான் சிறந்த பணியாளரை தேர்ந்தெடுக்கக்கூடிய சாதனம்.
வேலை தேடுவது
இந்த காலத்தில் வேலை தேடுவது மிகவும் எளிதான ஒன்றுதான். அதற்கு ஆன்லைன் மிகவும் உதவியாக உள்ளது. அது மட்டுமின்றி அவர்கள் வெளியே சென்றும் வேலை தேடவேண்டும். அவர்கள் முன்னாள் மாணவர்கள் சங்கம் வழியாக, அவர்களின் நண்பர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் வழியாக என்று அவர்கள் வேலை தேடவேண்டும்.
வேலைவாய்ப்பு முகாம்களில் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும். வேலைவாய்ப்புகள் எதிர்பாராத இடங்களில் மறைந்திருக்கும். நீங்கள் அவற்றை தேடிப்பிடிக்க உதவ வேண்டும்.
சிறப்பான முறையில் வேலை தேடும் வழிகள்
உங்கள் வளர்ந்த குழந்தைகளை அவர்கள் விரும்பும் துறையில் உள்ள நிபுணர்களுடன் தொடர்பு ஏற்படுத்திவிடுங்கள். நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதைவிட நிபுணர்களிடம் செல்வதுதான் சிறந்தது. அவர்கள் நேர்முகம்தேர்வுகள், தயாரிப்பது எப்படி, எதுபோன்ற கேள்விகள் கேட்கப்படும் என்றெல்லாம் அறிவுரை வழங்குவதும், நம்மை நிறுவனத்தில் பரிந்துரைக்கவும் செய்வார்கள்.
விண்ணப்பங்கள்
அவர்களின் ரெஸ்யூம்களுடன் இணைக்கப்படும் கடிதங்களை பிரத்யேகமான முறையில் தயாரிக்க கற்றுக்கொடுங்கள். குறிப்பிட்ட வேலைக்கு அவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு சரியான கடிதங்களை வைத்தால்தான் அது சிறப்பாக இருக்கும்.
வேலையின் தேவை என்ன என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் அவர்களின் திறமைகளையும், தகுதிகளையும் பட்டியலிடுங்கள். அவர்களுக்கு தேவையான கருத்துக்களையும் தெரிவியுங்கள். விண்ணபிக்கும்போது கவனம் தேவை.
நேர்முகத்தேர்வு
அவர்களுக்கு வீட்டிலேயே நேர்முகத்தேர்வுகள் நடத்தி பயிற்சி கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் நேர்முகத்தேர்வில் சிறப்பாக பங்குபெற முடியும். சில பொதுவான கேள்விகளை கேளுங்கள். ப்ரொபஷனலாக பிரசன்டேஷன்கள் செய்வது குறித்து கலந்துரையாடுங்கள்.
அந்த நிறுவனம் மற்றும் பணி குறித்து நன்றாக ஆராய்ச்சி செய்யுங்கள். தன்னம்பிக்கை மிகவும் அவசியம். அவர்கள் முன்னேற நீங்கள் உதவுங்கள்.
அவர்களுடன் உணர்வு ரீதியாக இணைந்திருங்கள்
வேலை தேடும்போது அவர்கள் கட்டாயம் வேலை கிடைப்பது குறித்து மனதளவில் கொஞ்சம் படபடப்புடன் இருப்பார்கள். எனவே அவர்களின் சிறிய சாதனைகளையும் கொண்டாடுங்கள். அவர்களுக்கு நேர்மறையான உறுதியைக்கொடுங்கள், சவால்களை புரிந்துகொள்ளுங்கள்.
உங்களின் உணர்வு ரீதியான ஆதரவுகள் அவர்களுக்கு மிகவும் அவசியம். அது அவர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்க உதவும். பயம், பதற்றம், தோல்வி ஆகியவற்றை ஏற்கவும் பழக்கும்.
நேர மேலாண்மை அவசியம்
இருவரும் சேர்ந்து வேலை தேடும் திட்டத்தை செய்யலாம் என்று அவர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள். அவர்களுக்கென்று இலக்குகள், காலக்கெடு, திட்டங்களை வகுத்துக்கெள்ளுங்கள். அவை சரியான முறையில் செல்கிறதா என்பதை பின்தொடர்ந்து கண்காணியுங்கள். தேவையான ஊக்கமும் கொடுங்கள். அப்போது உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
முடிவில்லாத சாத்தியங்கள்
உங்கள் இளம் குழந்தைக்கு பல்வேறு துறைகள் குறித்தும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களின் பலம், ஆர்வம், மதிப்பு, ஆளுமையை பொருத்து அவர்களுக்கு எது ஒத்துவரும் என்பதை அவர்கள் தேர்ந்தெடுக்க அது உதவியாக இருக்கும். உங்களின் தனிப்பட்ட அனுபங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களின் அறிவுரை, உங்களிடம் உள்ள மூலதனங்கள் என அனைத்தையும் அவர்களிடம் கூறும்போது, அவர்களின் பார்வை மேலும் விரிவடையும்.
வெற்றிக்கான திறன்களை வளர்ப்பது
தொடர்ந்து கற்பதை ஊக்குவியுங்கள். ஆன்லைன் கோர்ஸ்கள், பயிற்சி பட்டறைகள், வெபினர்கள், பாட்காஸ்களை பயன்படுத்தி அவர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள ஊக்குவியுங்கள். பயிற்சி வாய்ப்புக்களை தேடிப்பிடியுங்கள். தன்னார்வமாக பணி செய்யுங்கள். மதிப்புமிக்க அனுபவங்களை பெறுவதற்கு ஃபிரிலான்ஸ் வேலைகளை செய்து பழகுங்கள். இவை குறித்தெல்லாம் குழந்தைகளுக்கு கற்றுகொடுங்கள்.
சுயமான முடிவுகளை மதியுங்கள்
நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டலாம். அது அவர்களுக்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும், அவர்கள் சுயமாக செய்யும் எதையும் மதியுங்கள். அவர்களுக்கு தேவைப்படும்போது உதவுங்கள். அவர்களை முடிவுகள் எடுக்கும்போது நம்புங்கள், அவர்களின் சொந்த எதிர்கால வாழ்க்கை பயணத்தில் அவர்கள் பொறுப்பெடுத்த சுய முடிவுகளை எடுக்கவும் ஊக்குவியுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்