தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : உங்கள் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையபாடு உள்ளது என்பதை கணடுபிடிப்பது எப்படி?

Parenting Tips : உங்கள் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையபாடு உள்ளது என்பதை கணடுபிடிப்பது எப்படி?

May 25, 2024 05:14 PM IST Priyadarshini R
May 25, 2024 05:14 PM , IST

  • Parenting Tips : உங்கள் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையபாடு உள்ளது என்பதை கணடுபிடிப்பது எப்படி?

உங்கள் குழந்தைகளின் பாத்ரூம் செல்லும் பழக்கவழக்கங்களை கண்காணியுங்கள். அடிக்கடி சிறுநீர் கழிக்கவில்லையென்றாலோ அல்லது அடர்நிறத்தில் சிறுநீர் கழித்தாலோ அது குழந்தைகளின் நீர்ச்சத்து குறைபாட்டை குறிப்பதாகும்.

(1 / 8)

நாக்கு வறண்டு போனாலோ அல்லது உதடு வறண்டாலோ அல்லது அதிக தாகம் எடுத்தாலோ இவையெல்லாம் நீர்ச்சத்தை இழந்ததற்கான அறிகுறிகள் ஆகும். எனவே உங்கள் குழந்தைகளை நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் பருக அறிவுறுத்துங்கள்.

(2 / 8)

நீர்ச்சத்துக்கள் குறைந்தால், குழந்தைகளின் கண்களில் குழிவிழும். நீங்கள் இந்த உடல் மாற்றங்களை கண்டுபிடித்தீர்கள் என்றால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

(3 / 8)

குழந்தைகளிடம் சோர்வு மற்றும் எரிச்சல் ஏற்படுவதும் நீர்ச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும். உங்கள் குழந்தைகள் வழக்கத்தைவிட சோர்வாகக் காணப்பட்டால், அது அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்ததன் அறிகுறியாகும். எனவே உங்கள் குழந்தைகள் பருகும் நீரின் அளவை கண்காணிப்பது மிகவும் முக்கியம்.

(4 / 8)

உங்கள் குழந்தையின் சருமம் வறண்டு காணப்படுகிறதா என்பதை பாருங்கள். நீர்ச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் சருமம் நெகிழ்தன்மை இருக்கம். மற்றும் சருமத்தில் வெள்ளை நிறம் தோன்றும். எனவே உங்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.

(5 / 8)

குழந்தைகள் அழும்போது கண்ணில் போதிய அளவு தண்ணீர் வரவில்லையென்றாலும் குழந்தைகள் உடலில் போதிய நீர்ச்சத்துக்கள் இல்லை என்று பொருள். உங்கள் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் அழும்போது உங்கள் கண்களில் தண்ணீர் வரும்.

(6 / 8)

அதிகப்படியான நீர்ச்சத்து குறைபாட்டால், குழந்தைகளுக்கு தலைசுற்றல் ஏற்படும். சில நேரத்தில் அவர்கள் மயங்கி விழுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

(7 / 8)

உங்கள் உணவில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். அவர்கள் விளையாடும்போதோ அல்லது வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும்போது, உங்கள் குழந்தைகள் பருகும் தண்ணீரின் அளவில் கவனம் செலுத்துங்கள். குளிர் மற்றும் மழைக்காலங்களில் உங்கள் குழந்தைகளுக்கு இயற்கையாகவே தாகம் எடுக்காது.

(8 / 8)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்