தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையபாடு உள்ளது என்பதை கணடுபிடிப்பது எப்படி?

Parenting Tips : உங்கள் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையபாடு உள்ளது என்பதை கணடுபிடிப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
May 25, 2024 05:31 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையபாடு உள்ளது என்பதை கணடுபிடிப்பது எப்படி என்று இங்கு தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

Parenting Tips : உங்கள் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையபாடு உள்ளது என்பதை கணடுபிடிப்பது எப்படி?
Parenting Tips : உங்கள் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையபாடு உள்ளது என்பதை கணடுபிடிப்பது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தைகள் உடலில் நீர்ச்சத்து உள்ளது என்பதற்கான அறிகுறிகள் என்பதை கண்காணித்து நமது குழந்தைகளின் நலனை உறுதிப்படுத்துங்கள். போதிய நீர்ச்சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நீர்ச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் இவைதான்.

சிறுநீர் கழிப்பது குறையும்

உங்கள் குழந்தைகளின் பாத்ரூம் செல்லும் பழக்கவழக்கங்களை கண்காணியுங்கள். அடிக்கடி சிறுநீர் கழிக்கவில்லையென்றாலோ அல்லது அடர்நிறத்தில் சிறுநீர் கழித்தாலோ அது குழந்தைகளின் நீர்ச்சத்து குறைபாட்டை குறிப்பதாகும். 

எனவே போதிய அளவு அவர்கள் தண்ணீர் பருகினால், சிறுநீர் வெளிர் நிறத்தில் போகும். வழக்கமான மஞ்சள் நிறத்திலும் இருக்கும். சிறு குழந்தைகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் டயப்பர்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டுக்கொள்ளலாம்.

வறண்ட உதடு

நாக்கு வறண்டு போனாலோ அல்லது உதடு வறண்டாலோ அல்லது அதிக தாகம் எடுத்தாலோ இவையெல்லாம் நீர்ச்சத்தை இழந்ததற்கான அறிகுறிகள் ஆகும். எனவே உங்கள் குழந்தைகளை நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் பருக அறிவுறுத்துங்கள்.

குழிவிழுந்த கண்கள்

நீர்ச்சத்துக்கள் குறைந்தால், குழந்தைகளின் கண்களில் குழிவிழும். நீங்கள் இந்த உடல் மாற்றங்களை கண்டுபிடித்தீர்கள் என்றால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

எரிச்சல் மற்றும் சோம்பல்

குழந்தைகளிடம் சோர்வு மற்றும் எரிச்சல் ஏற்படுவதும் நீர்ச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும். உங்கள் குழந்தைகள் வழக்கத்தைவிட சோர்வாகக் காணப்பட்டால், அது அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்ததன் அறிகுறியாகும். எனவே உங்கள் குழந்தைகள் பருகும் நீரின் அளவை கண்காணிப்பது மிகவும் முக்கியம்.

வறண்ட சருமம்

உங்கள் குழந்தையின் சருமம் வறண்டு காணப்படுகிறதா என்பதை பாருங்கள். நீர்ச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் சருமம் நெகிழ்தன்மை இருக்கம். மற்றும் சருமத்தில் வெள்ளை நிறம் தோன்றும். எனவே உங்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.

அழும்போது கண்ணில் தண்ணீர் வராது

குழந்தைகள் அழும்போது கண்ணில் போதிய அளவு தண்ணீர் வரவில்லையென்றாலும் குழந்தைகள் உடலில் போதிய நீர்ச்சத்துக்கள் இல்லை என்று பொருள். உங்கள் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் அழும்போது உங்கள் கண்களில் தண்ணீர் வரும்.

தலைசுற்றல்

அதிகப்படியான நீர்ச்சத்து குறைபாட்டால், குழந்தைகளுக்கு தலைசுற்றல் ஏற்படும். சில நேரத்தில் அவர்கள் மயங்கி விழுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள்

உங்கள் உணவில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். அவர்கள் விளையாடும்போதோ அல்லது வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும்போது, உங்கள் குழந்தைகள் பருகும் தண்ணீரின் அளவில் கவனம் செலுத்துங்கள். குளிர் மற்றும் மழைக்காலங்களில் உங்கள் குழந்தைகளுக்கு இயற்கையாகவே தாகம் எடுக்காது.

எனவே அவர்கள் அப்போது தண்ணீர் பருகுவது அவசியம். இதை அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியுங்கள். அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் பருகுவதை வழக்கமாக்குங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்