Parenting Tips : சோர்ந்திருக்கும் குழந்தையை உற்சாகப்படுத்தி, உறுதிப்படுத்துவது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : சோர்ந்திருக்கும் குழந்தையை உற்சாகப்படுத்தி, உறுதிப்படுத்துவது எப்படி?

Parenting Tips : சோர்ந்திருக்கும் குழந்தையை உற்சாகப்படுத்தி, உறுதிப்படுத்துவது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jan 28, 2024 03:00 PM IST

Parenting Tips : சோர்ந்திருக்கும் குழந்தையை உற்சாகப்படுத்தி, உறுதிப்படுத்துவது எப்படி?

Parenting Tips : சோர்ந்திருக்கும் குழந்தையை உற்சாகப்படுத்தி, உறுதிப்படுத்துவது எப்படி?
Parenting Tips : சோர்ந்திருக்கும் குழந்தையை உற்சாகப்படுத்தி, உறுதிப்படுத்துவது எப்படி?

அது அவர்களின் தன்னம்பிக்கையை மட்டும் வளர்க்கவில்லை. அவர்களை பலமானவர்களாகவும் மாற்றுகிறது. தன்னம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தை அவர்களுக்கு கொடுக்கிறது.

நிபந்தனையற்ற அன்பை தினமும் கொடுங்கள்

ஒரு மலரை எப்படி சூரிய ஒளி பூத்துக்குலுங்க செய்கிறதோ, அதுபோல் உங்களின் நிபந்தனையற்ற அன்பு உங்கள் குழந்தையின் சுயமதிப்புக்கு தூண்டுகோலாக உள்ளது. உங்களின் அன்பை தினமும் கட்டிப்பிடித்தல், ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் மற்றும் தரமான நேரத்தை செலவிடுவது ஆகியவை மூலம் வெளிப்படுத்துங்கள்.

அவர்களை நீங்கள் நிபந்தனையின்றி நேசித்தால், அவர்களுக்கு அது ஒரு பாதுகாப்பான உணர்வுப்பூர்வமான இடத்தை உருக்கி அவர்கள் கல்வி கற்க, வளர, கற்றுக்கொள்ள உதவும்.

கற்றல் மூலம் சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுங்கள்

புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். அது ஒரு ஷு லேஸ் கட்டுவதாகட்டும் அல்லது ஒரு டம்ளர் பால் ஊற்றிக்கொள்வது அல்லது ஒரு பசிலை செய்து முடிப்பது என அவர்கள் தானாக முயற்சிக்கும் ஒவ்வொரு விஷயமும் அவர்களின் திறனை வளர்த்தெடுக்கும்.

இந்த சிறிய வெற்றிகள் அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாக வளர்த்தெடுக்கும்.

சிறிய மற்றும் பெரிய வெற்றிகளை கொண்டாடுங்கள்

உங்கள் குழந்தைகளில் சிறிய மற்றும் பெரிய வெற்றிகள் இரண்டையும் கொண்டாடவேண்டும். சாதாரண விஷயத்தை கூட உங்கள் குழந்தை தானாகவே முயன்று செய்திருந்தால் அதற்கு அவர்களை பாராட்டுங்கள். உங்கள் குழந்தைகளின் வெற்றிகளை அங்கீகாரத்து, அவர்களை வாழ்த்துங்கள்.

அது அவர்களுக்கு ஒருவித பெருமையை கொடுக்கும். இந்த நேர்மறையான உந்துதல் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்காது, அவர்களுக்கு இலக்குகளை நிர்ணயிக்கவும், அதை அடையவும் கற்றுக்கொடுக்கும்.

பின்னடைவுகளை கற்றல் அனுபவமாகக்கொள்ளுங்கள்

வாழ்க்கை மேடு, பள்ளங்கள் நிறைந்தது. எனவே, வாழ்வில் குழந்தைகளுக்கு ஏற்படும் பின்னடைவுகளை அவர்கள் வெற்றிக்கான படிகளாக எண்ணிக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குங்கள்.

அவர்கள் தோற்கும்போது அவர்களை பாதுகாப்பதைவிட்டுவிட்டு, அவர்களுக்கு எப்படி தோல்வியிலி இருந்து பாடம் கற்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து சவால்களை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கும்.

நேர்மறையான சுயபேச்சுக்கள்

மற்றவர்கள் அவர்களை ஊக்கப்படுத்தி பேசுவதைவிட, அவர்களே அவர்களை ஊக்கப்படுத்திக்கொள்வது நல்லது. எனவே அவர்களே அவர்களை நேர்மறையாக எப்படி உற்சாப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். அது அவர்களுக்கு எவ்வளவு நன்மை தரும் என்பதையும் அவர்களிடம் கூறுங்கள்.

அவர்கள் மீது அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்களால் முடியும் என்று உறுதியளிப்பது எப்படி என்று கற்பியுங்கள். இதுபோல் அவர்களுக்குள்ளே அவர்கள் பேசும்போது, சவால்கள் குறித்த அவர்களின் பார்வைகளை அது மாற்றி, அவர்களின் திறன்களை பயன்படுத்தி எப்படி அவர்கள் முன்னேறுவது என்று கற்றுத்தரும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை கண்காணியுங்கள்

உங்கள் குழந்தையின் திரை நேரத்தை கண்காணியுங்கள். தொழில்நுட்பம் கற்றல் மற்றும் அவர்களின் கற்பனை திறனை வளர்க்கும் கருவியாக பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள்.

ஆனால் உண்மை வாழ்க்கையில் இடையூறுகளை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. இவையிரண்டையும் சரியாக செய்தால், அது உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

பலங்கள் மற்றும் திறமைகளை வளர்க்க உதவுங்கள்

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை மற்றும் பலம் இருக்கும். அவர்களின் குறைகளில் கவனம் செலுத்தாமல், அவர்கள் நன்றாக செய்யும் வேலைகளை கொண்டாடி, அந்த திறனை வளர்த்தெடுங்கள்.

இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை மட்டும் வளர்க்காது. இது அவர்களின் திறமைகளை வளர்ப்பதில் மட்டும் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதில்லை. தனித்தன்மையையும் வளர்க்க உதவுகிறது. வாழ்வின் குறிக்கோளையும் காட்டுகிறது.

கடுமையான விமர்சனங்களை தவிருங்கள்

அவர்களுக்கு நல்ல ஃபீட் பேக்குகள் அவசியம்தான். ஆனால் அது சரியான முறையில் கொடுக்கப்படவேண்டும். கடுமையான விமர்சனங்கள், உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை குலைக்கும்.

அவர்களுக்கு வழிகாட்டாமல், அவர்களுக்கு ஆதரவாக இருப்பது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். சரியாக இல்லாவிட்டால் கூட வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும். அவர்களை அரவணைத்து வளர்த்தெடுக்கும் சூழல், விமர்சனத்தைவிட அதிகளவு தன்னம்பிக்கையை கொடுக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.