Parenting Tips : கோவத்தில் கொந்தளிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்துவது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : கோவத்தில் கொந்தளிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்துவது எப்படி?

Parenting Tips : கோவத்தில் கொந்தளிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்துவது எப்படி?

Priyadarshini R HT Tamil
Feb 04, 2024 12:38 PM IST

Parenting Tips : கோவத்தில் கொந்தளிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்துவது எப்படி?

Parenting Tips : கோவத்தில் கொந்தளிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்துவது எப்படி?
Parenting Tips : கோவத்தில் கொந்தளிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்துவது எப்படி?

அமைதியாக இருங்கள்

நீங்கள் அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். குழந்தைகள் அடிக்கடி தங்களின் உணர்வுகளை கொட்டி தீர்ப்பார்கள். அவர்களை சுற்றியிருப்பவர்களிடம் அதை எளிதில் காட்டிவிடுவார்கள். அப்போது நீங்கள் அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது உங்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.

அவர்களின் உணர்வுகளை மதியுங்கள்

உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு அங்கீகாரமும், மரியாதையும் கொடுங்கள். கோவத்தில் கொத்தளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. அவர்களிடமும் இது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். நீங்கள் இப்போது சோர்வாக உணர்கிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் என்பது போல் கூறுங்கள்.

அவர்களுக்கு சவுகர்யமான உணர்வை கொடுங்கள்

அவர்களை கட்டி அணைத்துக்கொள்ளுங்கள், அவர்களின் முதுகில் தட்டிக்கொடுத்து அவர்களுக்கு ஒரு அமைதியான உணர்வை ஏற்படுத்துங்கள். அவர்களின் கரங்களை பற்றிக்கொள்ளுங்கள், இதுபோன்ற உடலில் தொடுவது போன்றவை, அவர்களுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுக்கிறது. இதனால் அவர்கள் ஆதரவாக உணர்வார்கள். அது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும்.

அவர்களை அமைதிப்படுத்தும் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்

அவர்களை அமைதிப்படுத்துங்கள். மிருதுவாக பேசுங்கள். அவர்களிடம் பேசும்போது அமைதியாக நடந்துகொள்ளுங்கள். அவர்களிடம் அமைதியாக பேசுவது, அவர்களை ஆற்றுப்படுத்தவும், நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்ற உணர்வையும் கொடுக்கிறது.

பாதுகாப்பான சுற்றத்தை உருவாக்குங்கள்

அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான இடத்தை உருவாக்கிக்கொடுங்கள். அவர்களுக்கு தனிமை தேவைப்படும்போது அதை அவர்கள் எடுத்துக்கொள்ள வழிவகுக்கும். அங்கு அவர்களை அமைதிப்படுத்த ஒரு நல்ல மெத்தை உள்ளிட்டவற்றை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுங்கள்.

அவர்களை மாற்ற முயற்சியுங்கள்

குழந்தைகளை விளையாட அல்லது ஏதேனும் செயல்களில் ஈடுபட அழைத்துச்செல்லுங்கள். அவர்கள் மனகுழப்பத்தில், அமைதியின்றி இருந்தால் அவர்களை அமைதிப்படுத்த அது உதவும். அவர்கள் அந்த நேரத்தில் புத்தகம் படிக்கலாம். ஓவியங்கள் வரையலாம் அல்லது விளையாடலாம்.

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி நுட்பங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு ஆழ்ந்த மூச்சுப்பயிற்சிகளை செய்ய பழக்குங்கள். அதன் மூலம் அவர்களை அமைதியாவது எப்படி என்று கற்றுக்கொஙஙகள். அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த உதவுங்கள். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி அவர்களை அமைதிப்படுத்த உதவும்.

நேர்மறையாக அவர்களை பலப்படுத்துங்கள்

உங்கள் குழந்தைகள் அமைதியடைந்தால், அவர்களின் நன்னடத்தைக்காக அவர்களை பாராட்டுங்கள். கட்டுப்பாடு மற்றும் சுயகட்டுப்படு நேர்மறையான உந்துதல்களின் வழியாக பலப்படுத்தப்படவேண்டும்.

தூண்டுதல்களை தீர்மானிக்க வேண்டும்

குழந்தையின் துன்பங்கள் ஏற்படுத்தும் சாத்தியமுள்ள விளைவுகளை அங்கீகரியுங்கள். அவர்களுக்கு கோவத்தையும் எது ஏற்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதன் மூலம் உள்ளே உள்ள பிரச்னைகளை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். எதிர்காலத்தில் அவர்கள் துவண்டுவிடாமல் இருக்க உதவும்.

அவர்களுக்கென்று ஒரு அட்டவணையை உருவாக்குங்கள்

குழந்தைகள் பாதுகாப்பாக உணர அவர்களுக்கான வாழ்க்கையில் ஒரு அட்ட்வணையை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அவர்களை அதை பின்பற்றவைத்தால் அவர்களுக்கு ஒரு வழக்கம் ஏற்படும். 

உறக்க நேரம், விளையாடும் நேரம், சாப்பிடும் நேரம், படிக்கும் நேரம் என அவர்களின் பதற்றத்தை அது குறைக்கும். அது அவர்களின் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

தேவைப்பட்டால் நிபுணர்களின் அறிவுரை

உங்கள் குழந்தை தனித்தன்மைகள் நிறைந்தவர். ஒருவருக்கு சரியாக இருப்பது மற்றவருக்கு சரியாக இருக்காது. கூடுதலாக, குழந்தையின் பிரச்னைகள் தொடர்ந்தால், அது அவற்றை பெரிதாக்கும். எனவே குழந்தை நல மருத்துவர்களை அணுகுவது நல்லது. குழந்தை மன நல ஆலோசகர்களும் உங்களுக்கு உதவலாம். 

அவர்களால் உங்கள் குழந்தையின் பிரச்னைகளை கண்டுபிடிக்க முடியும். அவர்களால் உங்கள் குழந்தைகளுக்கு தீர்வு காண முடியும். எனவே உங்களுக்கு தேவையான உதவிகளை பெறுவதில் தவறில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.