தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Parenting Tips How To Be A Good Parent See If You Have These Qualities

Parenting Tips : நல்ல பெற்றோர் எப்படியிருக்கவேண்டும்? இதோ இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 17, 2024 04:00 PM IST

Parenting Tips : நல்ல பெற்றோர் எப்படியிருக்கவேண்டும்? இதோ இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா பாருங்கள்!

Parenting Tips : நல்ல பெற்றோர் எப்படியிருக்கவேண்டும்? இதோ இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா பாருங்கள்!
Parenting Tips : நல்ல பெற்றோர் எப்படியிருக்கவேண்டும்? இதோ இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

நீங்கள் செய்யவேண்டிய சில காரியங்கள் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்தால், நீங்கள் சிறந்த பெற்றோராகலாம். உங்கள் குழந்தைகளுடன் நெருக்கமான உறவை வளர்த்து, ஒரு அன்பான சூழலை உருவாக்கி, உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலை நாட்டலாம்.

குழந்தைகளை கவனித்தல்

முதலில் நீங்கள் குழந்தைகள் கூறுவதையும், அவர்களின் செயல்களையும் உற்று கவனிக்க வேண்டும். அப்போது நீங்கள் சிறந்த பெற்றோராகலாம். உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக உணரும் ஒரு சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். அவர்கள் வெளிப்படையாக எந்த பிரச்னைகளையும் உங்களிடம் வெளிப்படுத்த வேண்டும். 

அந்த சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். அவர்களை கவனிக்கவேண்டும். அது குறித்த எந்த விமர்சனமும் இல்லாமல் அவர்களை உற்றுநோக்க வேண்டும். பெற்றோர்-குழந்தை உறவு என்பது குழந்தையின் கோணங்கள் மற்றும் உணர்வுகள் மதிக்கப்படும்போது பலப்படுகிறது. அவர்களின் அனுபவங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.

தரத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் எண்ணுக்கு அல்ல

உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் நேரத்தை செலவிடவேண்டிய சூழல் வரும்போது, தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். எண்ணுக்கு அல்லது. நீங்கள் கடும் நெருக்கடியான சூழலில் இருந்தாலும், அவர்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை நிகழ்த்துங்கள். 

உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து செய்யும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இரவு நேர விளையாட்டு, பொழுதுபோக்கு, பழக்கவழக்கங்கள் என ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள். இது உங்களின் பிணைப்பை உறுதியாக்கும் மற்றும் நல்ல நினைவுகளையும் உங்களுக்கு ஏற்படுத்தி தரும்.

திறந்த மற்றும் தெளிவான உரையாடல்

குழந்தைகளிடம் உரையாடும்போது தெளிந்த மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய உரையாடல் இருக்க வேண்டும். அவர்களின் வயது ஏற்ற பேச்சுக்களையும் பேச வேண்டும். அப்போதுதான் அவர்கள் அவர்களின் கவலைகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். 

தொடர்ந்து அவர்களுடன் உரையாடும்போது, நம்பிக்கை உருவாகிறது. இது உங்கள் குழந்தையின் மேம்பாட்டுக்கு ஆதரவாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக இருங்கள்

குழந்தைகள் அவர்களின் பெற்றோரைத்தான் அப்படியே பின்பற்றுவார்கள். எனவே அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு நல்ல நெறிகளை வளர்ப்பதற்கும், நல்ல குணங்களை வளர்ப்பதற்கும் உதவுங்கள். அதை நீங்கள் செய்யும்போதுதான், அவர்கள் அதனை பின்பற்றுவார்கள். 

நீங்கள் எடுத்துக்காட்டாக இருப்பது, அவர்களுக்கு ஆதரவான ஒரு சூழலை உருவாக்குகிறது. தனிப்பட்ட வளர்ச்சிக்கு அவர்கள்களுக்கு உதவுகிறது. உங்களின் நற்குணங்கள், நன்னடத்தைகள் அவர்களுக்கு வார்த்தைகளால் புரியவைப்பதைவிட அதிகம் உணர்த்துகிறது.

சுதந்திரத்தை ஊக்குவியுங்கள்

உங்கள் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப முடிவு எடுக்க அவர்களை அனுமதியுங்கள். அது அவர்களுக்கு அதிக சுதந்திரத்தை கொடுக்கும். இது தன்னம்பிக்கையையும், பொறுப்பாக நடந்துகொள்ளவும் ஊக்குவிக்கும். 

அவர்களின் முடிவெடுக்கும் திறனை அவர்கள் வளர்த்துக்கொள்ளும் காலகட்டத்தில் அவர்களுக்கு பாதை காட்டுங்கள். உங்களின் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் அப்போதுதான் சுதந்திமாக உணர்வார்கள்.

ஒரு நடைமுறையை உருவாக்குங்கள்

அவர்களுக்கு ஒரு அட்டவணையை ஏற்படுத்தி கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் தங்கள் வேலைகளை சிறப்பாக செய்வார்கள். அவர்களுக்கு தினசரி திட்டமிட்டு ஒரு அட்டவணையை கொடுத்துவிடுங்கள். 

படிக்கும் நேரம், சாப்பிடும் நேரம், விளையாடும் நேரம், உறங்கும் நேரம் என பிரித்துக்கொடுங்கள். பாதுகாப்பு உணர்வு மற்றும் நிலைத்தன்மை இரண்டும் முன் திட்டமிடுதலால் ஏற்படுகிறது.

அவர்களின் முயற்சிகளை மதியுங்கள், வெறும் முடிவுகளை மட்டுமல்ல

உங்கள் குழந்தைகள் செய்யும் முயற்சிகளை பாராட்டுங்கள். அவர்களுக்கு எந்த முடிவு கிடைத்தாலும் சரிதான். ஆனால் கண்டிப்பாக முயற்சிகளை பாராட்டுங்கள். இது அவர்களுக்கு வளர்ச்சி மனநிலையை உருவாக்கித்தரும். 

விடாமுயற்சி, வெற்றி எண்ணம் ஆகியவற்றின் மதிப்பை அவர்களுக்கு உணர்த்தும். அவர்களின் வெற்றிகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவை எதுபோன்றதாக இருந்தாலும் பாராட்டுங்கள்.

உண்மையான எதிர்பார்ப்புகளை வையுங்கள்

உங்கள் குழந்தைகளிடம் உண்மையான எதிர்பார்ப்புகளை மட்டும் வையுங்கள். உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் இது பொருந்தும். ஆசை நல்லது பேராசை கூடாது. 

பின்னடையும், தோல்விகள் வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களால் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க முடியும்.

நிறைய அன்பை கொடுங்கள்

உங்கள் அன்பை தொடர்ந்து உங்கள் குழந்தைகள் மேல் காட்டுங்கள். உங்கள் குழந்தைகள் அன்பை உணர்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துங்கள். நிலையான மனநிலையில் உங்கள் அன்பை கொடுங்கள். 

அவர்கள் யார் என அவர்கள் உணரவேண்டும். அது அவர்களை உணர்வு ரீதியில் பலப்படுத்தும். வாழ்வில் அவர்கள் சந்திக்கும் மாற்றங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அதற்கு அன்பு அடித்தளமாக அமையட்டும்.

சுயகவனமே முன்னிலை

நல்ல பெற்றோர் என்பவர் முதலில் தங்களை கவனித்துக்கொள்ள வேண்டும். உங்களை கவனித்துக்கொள்வதையே முன்னிலையாகக் கொள்ளுங்கள். உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டும் உங்களுக்கு முக்கியம். 

அதன் ஆரோக்கியம் மிகவும் அவசியம். உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக்கொண்டால்தான் உங்கள் குழந்தைகளை உங்களால் நன்றாக கவனித்துக்கொள்ள முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்