தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் குழந்தைகளை கேலி செய்யக்கூடாது! செய்தால் அது அவர்களை எவ்வாறு பாதிக்கிறது பாருங்க!

Parenting Tips : உங்கள் குழந்தைகளை கேலி செய்யக்கூடாது! செய்தால் அது அவர்களை எவ்வாறு பாதிக்கிறது பாருங்க!

Priyadarshini R HT Tamil
May 26, 2024 01:59 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தைகளை கேலி செய்யக்கூடாது! அது அவர்களை எவ்வாறு பாதிக்கிறது பாருங்க!

Parenting Tips : உங்கள் குழந்தைகளை கேலி செய்யக்கூடாது! அது அவர்களை எவ்வாறு பாதிக்கிறது பாருங்க!
Parenting Tips : உங்கள் குழந்தைகளை கேலி செய்யக்கூடாது! அது அவர்களை எவ்வாறு பாதிக்கிறது பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. அவர்களுக்கு நாள்பட்ட மனகோளாறுகளை ஏற்படுத்துகிறது. எனவே பெற்றோர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை தெரிந்துகொண்டு, குழந்தைகளை வளர்க்க அதை கடைபிடித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுங்கள்.

அவர்களின் தோற்றம்

குழந்தைகள் தாங்கள் எப்படி இருக்கிறோம் என்பது குறித்து மிகவும் அக்கறை கொள்கிறார்கள். அவர்களை அவர்களின் எடை, உயரம் அல்லது வெளிப்புறத்தோற்றத்தின் அடிப்படையில் கேலி செய்தால், அது அவர்களுக்கு வருத்தத்தைக்கொடுக்கும். 

இதனால் அவர்கள் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். குழந்தைகளின் எடை குறித்து விமர்சித்தால், அவர்கள் தாங்கள் உண்ணும் உணவின் அளவை குறைத்துக்கொண்டு பல்வேறு வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கையையும் அது குலைக்கிறது.

சமூக திறன்கள்

குழந்தைகளை அவர் கூச்ச சுபாவம் உடையவர்கள், வெளியில் அதிகம் பேசாதவர்கள் என்ற அடிப்படையில் விமர்சித்தால், அவர்களால் நண்பர்களுடன் சகஜமாக பழகமுடியவில்லை என்று குற்றம்சாட்டினால், அவர்களுக்கு சமூக அச்சம் ஏற்படுகிறது. குழந்தைகளை அவர்களின் சமூக திறனுக்காக கேலி செய்வது அவர்களின வளர்ச்சியை பாதித்து அவர்களுக்கு சமூக கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

மதிப்பெண்கள்

அனைத்து குழந்தைகளும், பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது. எனவே மதிப்பெண்கள் அடிப்படையில் குழந்தைகளை கேலி செய்வது மிகவும் தவறான செயல் ஆகும். இப்படி மதிப்பெண்கள் அடிப்படையில் குழந்தைகள் கிண்டல் செய்வது அவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். படிப்பு தொடர்பான மனஅழுத்தம், அவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், குழந்தைகளுக்கு சங்கடங்களையும் உண்டாக்குகிறது.

தனிப்பட்ட ஆர்வங்கள்

குழந்தைகளுக்கு படிப்பதற்கு சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு பொம்மைகள் வைத்து விளையாட பிடிக்கும், சிலருக்கு வெளிப்புற விளையாட்டுகள் பிடிக்கும். சிலருக்கு உள்புற விளையாட்டுகள் பிடிக்கும். இதையெல்லாம் குறித்து அவர்களை நீங்கள் கிண்டல் செய்யக்கூடாது. அது அவர்களுக்கு வலியை ஏற்படுத்தும். 

இது குழந்தைகளின் ஆர்வத்தை அழிக்கும். மேலும் அவர்கள் அதை தொடர்ந்து செய்ய முடியாமல் போகவைக்கும். குழந்தைகளின் ஆர்வங்களை வளர்த்தெடுப்பது அவர்களின் நினைவாற்றல் வளர்ச்சிக்கும், உணர்வு மேம்பாட்டுக்கும் உதவும்.

உணர்வு ரீதியான வெளிப்பாடு

குழந்தைகள் பல்வேறு வழிகளில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை அழுவதற்கு, அதிகப்படியாக ஆச்சர்யப்படுவதற்கும், பயப்படுவதற்கும் கேலி செய்தால், அவர்கள் தங்களின் உணர்வுகளை அடக்கிக்கொள்வார்கள். எனவே அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமான உணர்வுகள் தேவை. எனவே, அவர்களை கிண்டல் செய்யக்கூடாது. அது அவர்களுக்கு அச்சத்தை அதிகரிக்கும்.

உடல் திறன்கள்

குழந்தைகளால் நன்றாக விளையாட முடியவில்லையென்றால், அதுகுறித்து அவர்களை கிண்டல் செய்யக்கூடாது. அது அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கும். அவர்கள் வேறு உடல் சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடுவதை தடுக்கும். அவர்களை நீங்கள் நேர்மறையாக பாராட்டினால், அவர்கள் விளையாட்டுகளில் கலந்துகொண்டு தங்களின் உடற்திறனை வளர்த்துக்கொள்வார்கள்.

தனிப்பட்ட அச்சங்கள்

ஒவ்வொருவருக்கும் அச்சம் உண்டு, அது குழந்தைகளுக்கும் உண்டு, அவர்களை அச்சம் அல்லது இருள், பூச்சிகள், பூதங்கள் என்று நாம் மேலும் பயமுறுத்தினால், அது அவர்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கும். இதனால் அவர்களின் பாதுகாப்பு உணர்வு பாதிக்கப்படும். குழந்தைகளின் அச்ச உணர்வை நாம் குறைக்காவிட்டால், அது அவர்களுக்கு நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கற்றல் குறைபாடு

சில குழந்தைகள் கற்றல் குறைபாடு போன்ற சவால்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களும் டிஸ்லெக்ஷியா, ஏடிஹெச்டி அல்லது கற்றல் குறைபாடு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு உள்ள குறைபாடுகள் குறித்தும் அவர்களை நாம் கிண்டல் செய்யவே கூடாது. இதனால் அவர்களின் பாடம் பாதிக்கப்படும். அவர்களின் தன்னம்பிக்கையும் குறையும்.

WhatsApp channel

டாபிக்ஸ்