Parenting Tips : அடி, உதை மட்டும் கூடாது! குழந்தைகளிடம் எதில் மென்மையாக நடக்க வேண்டும்? அம்மாக்களுக்கு அறிவுரை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : அடி, உதை மட்டும் கூடாது! குழந்தைகளிடம் எதில் மென்மையாக நடக்க வேண்டும்? அம்மாக்களுக்கு அறிவுரை!

Parenting Tips : அடி, உதை மட்டும் கூடாது! குழந்தைகளிடம் எதில் மென்மையாக நடக்க வேண்டும்? அம்மாக்களுக்கு அறிவுரை!

Priyadarshini R HT Tamil
Published Jul 13, 2024 11:02 AM IST

Parenting Tips : அடி, உதை மட்டும் கூடாது. குழந்தைகளிடம் எதில் மென்மையாக நடக்க வேண்டும் என்று தெரியுமா அம்மாக்களே. இதோ இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Parenting Tips : அடி, உதை மட்டும் கூடாது! குழந்தைகளிடம் எதில் மென்மையாக நடக்க வேண்டும்? அம்மாக்களுக்கு அறிவுரை!
Parenting Tips : அடி, உதை மட்டும் கூடாது! குழந்தைகளிடம் எதில் மென்மையாக நடக்க வேண்டும்? அம்மாக்களுக்கு அறிவுரை!

நீங்கள் செய்யக்கூடாத தாய்மை தவறுகள்

குழந்தைகளை வளர்ப்பது, வழிகாட்டுவது மற்றும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுப்பது என அனைத்திலும் அம்மாக்கள் சமநிலையை கடைபிடிக்க வேண்டும். எனினும், ஆனால் நீங்கள் எப்போதும் கடுமை முகத்தை மட்டும் காட்டிக்கொண்டிருக்கவும் கூடாது. அவ்வப்போது மென்மையாகவும் நடந்துகொள்ளவேண்டும்.

நீங்கள் எப்போது உங்கள் குழந்தைகளிடம் மென்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் இரக்கத்துடன் நடந்துகொள்வதும் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவை. அம்மாக்கள் அக்கறைகொள்ளவேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக்கொடுப்பது

உங்கள் குழந்தைகளை அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். இது அவர்களின் உணர்வறிவுக்கும், மீண்டெழும் திறனுக்கும் உதவும். உங்கள் குழந்தைகளை அவர்களின் உணர்வுகளை அச்சமின்றை பகிர்ந்துகொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

அவர்கள் அவ்வாறு பகிரும்போது, அவர்களை விமர்சிக்கவோ அல்லது தண்டனை கொடுக்கவோ கூடாது. அவர்களின் உணர்வுகள், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அல்லது சோகமாக உள்ளார்களோ அல்லது கோவத்தில் இருந்தாலோ, அதை அவர்கள் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கவேண்டும்.

கற்றல் மற்றும் கல்வி

உங்கள் வீட்டில் கற்பதற்கு நேர்மையான சூழலை உருவாக்கவேண்டும். அப்போதுதான் அவர்களின் அறிவு மற்றும் கிரியேட்டிவிட்டி வளரும். அவர்களின் கல்வி வளர்ச்சியில் பொறுமையாகவும், ஆதரவாகவும் இருக்கவேண்டும். அவர்களின் முயற்சிகளை பாராட்டுங்கள், சாதனைகளை கொண்டாடுங்கள். அவர்களை விமர்சிக்காமல் திருத்தங்களை வழிகாட்டுதலாக முன்மொழியுங்கள். அவர்கள் தடுமாறும்போது கை கொடுங்கள்.

நட்பு மற்றும் சமூக தொடர்புகள்

ஆரோக்கியமான சமூக தொடர்புகள் குழந்தையின் சமூக மற்றும் உணர்வு ரீதியான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். அது அவர்களின் நட்புக்கு அடித்தளம் அமைக்கும் மற்றும் சமூக அனுபவங்களைத் தரும். அவர்களுக்கு அன்பு, கருணை, இரக்கம் என அனைத்தும் கற்றுக்கொடுங்கள். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கடும் விதிகளை விதிக்காமல் பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டும். இதனால் அவர்கள் யாருடன் நட்பு பாராட்ட வேண்டும் என்று அறிந்துகொள்வார்கள்.

ஆர்வங்கள் மற்றும் பழக்கங்கள்

உங்கள் குழந்தைகளின் ஆர்வங்கள் மற்றும் ஹாபிக்களை அவர்கள் தொடர உதவுங்கள். அவர்களுக்கு பிடித்த விஷயங்களை அவர்கள் கண்டுபிடிக்க குழந்தைகளுக்கு உதவுங்கள். அவர்களின் திறமைகளை அடையாளம் காண ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு உற்சாகப்படுத்துங்கள்.

உங்களுக்கு பிடித்தவற்றில் இருந்து அவர்கள் மாறுபட்டிருந்தாலும், அதை தடுக்காமல் அவர்கள் தொடர்ந்து அதை பெற உதவுங்கள். அவர்களுக்கு வாய்ப்புக்களை கொடுங்கள். அதற்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுங்கள். அவர்களுக்கு பிடித்தவற்றை அவர்கள் மகிழ்ச்சியுடன் செய்ய அனுமதியுங்கள்.

தவறுகள் மற்றும் தோல்வி

கற்றலின் முக்கியமான ஒன்றே, தவறுகள் செய்வதுதான். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொதுவான அறிவு வளர்ச்சிக்கு தவறுகள் துணை புரிகின்றன. 

எனவே தவறுகள் மற்றும் தோல்விகளை புரிதலுடன் அணுகி, அவற்றை கடக்க ஊக்கப்படுத்துங்கள். உக்ஙள் குழந்தைகள் இந்த அனுபவங்களை வாய்ப்பாக பார்க்க உதவுங்கள். இதனால் அவர்கள் பின்னடைவுகளில் இருந்து, வளர்வது எப்படி என்பதை கற்றுக்கொள்வார்கள்.

சுதந்திரம் மற்றும் முடிவெடுக்கும் திறன்

உங்கள் குழந்தைகள் சுதந்திரமாக எந்த செயலையும் செய்யவேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை வளரவும், அவர்கள் தன்னிறைவுடன் இருக்கவும் அவர்களுக்கு சுதந்திரம் அவசியம். 

எனவே உங்கள் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அவர்களை முடிவுகள் எடுக்க அனுமதியுங்கள். அவர்களை அதிலிருந்து கற்கவும் பழக்குங்கள். அவர்களுக்கு வழிகாட்டுங்கள். ஆதரவு கொடுங்கள். ஆனால் அவர்களை அதிகம் கட்டுப்படுத்தாதீர்கள். ஆனால் கட்டுப்படுத்தவேண்டிய இடத்தில் அமைதியாக இருக்காதீர்கள்.

உடல் குறித்த கவனம் மற்றும் தன்னம்பிக்கை

குழந்தைகள் தங்கள் உடல் குறித்து எப்போது நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டும். அவர்களுக்கு தன்னபிக்கை முக்கியம். அவர்களின் மனம் மற்றும் உணர்வு நலன்களுக்கு இவையிரண்டும் மிகவும் முக்கியம்.

உடல் குறித்த நேர்மறை எண்ணம், தனது தோற்றத்தை ஏற்கும் மனம் இரண்டையும் குழந்தைகளிடம் வளர்த்தெடுங்கள். எதிர்மறை கமெண்ட்களை தவிர்த்து விடுங்கள். அவர்களின் தோற்றம் குறித்து அவர்கள் எந்த எண்ணமும் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆனால் ஆரோக்கியம் முக்கியம். சுயகவனம் என்பது மிகவும் அவசியம் என்பதை கற்றுக்கொடுங்கள்.

குடும்பம் மற்றும் உறவுகள்

குடும்ப உறவுகள் குறித்து கற்றுக்கொடுப்பது, குழந்தைகளின் சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாகும். எனவே அவர்களுக்கு அன்பான மற்றும் ஆதரவான குடும்பச்சூழலை ஏற்படுத்திக்கொடுங்கள். அவர்களிடம் எப்போது வெளிப்படையான திறந்த உரையாடலை நடத்துங்கள். அவர்களின் கருத்துக்களை நீங்கள் ஏற்கவிட்டாலும், சண்டையிட்டாலும் அவர்களிடம் நிபந்தனையற்ற அன்பை பொழியுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.