Parenting Tips : வேண்டாம்! இத மட்டும் செஞ்சுடாதீங்க உங்க குழந்தைகள் கிட்ட, அது அவர்களை எப்படி பாதிக்கிறது பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : வேண்டாம்! இத மட்டும் செஞ்சுடாதீங்க உங்க குழந்தைகள் கிட்ட, அது அவர்களை எப்படி பாதிக்கிறது பாருங்கள்!

Parenting Tips : வேண்டாம்! இத மட்டும் செஞ்சுடாதீங்க உங்க குழந்தைகள் கிட்ட, அது அவர்களை எப்படி பாதிக்கிறது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 09, 2024 02:00 PM IST

Parenting Tips : வேண்டாம்! இத மட்டும் செஞ்சுடாதீங்க உங்க குழந்தைகள் கிட்ட, அது அவர்களை எப்படி பாதிக்கிறது பாருங்கள்!

Parenting Tips : வேண்டாம்! இத மட்டும் செஞ்சுடாதீங்க உங்க குழந்தைகள் கிட்ட, அது அவர்களை எப்படி பாதிக்கிறது பாருங்கள்!
Parenting Tips : வேண்டாம்! இத மட்டும் செஞ்சுடாதீங்க உங்க குழந்தைகள் கிட்ட, அது அவர்களை எப்படி பாதிக்கிறது பாருங்கள்!

இந்த வெளியில் பாதிப்பில்லாத பொய்கள், குழந்தையின் உணர்ச்சி மற்றும் உளவியல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குழந்தை – பெற்றோர் உறவில் நம்பிக்கை

குழந்தைகள் பெற்றோரை அதிகம் நம்புவார்கள். ஏனெனில் அவர்கள் நம்பக்கூடிய நபர்களாக பெற்றோர்தான் இருப்பார்கள். இந்த நம்பிக்கை நேர்மையற்ற பெற்றோரால் குலைக்கப்படும். இளம் வயதில் குழந்தைகளுக்கு நிறைய மதிப்பீடுகளை கற்றுக்கொடுத்து நம்பிக்கையை வளர்க்க வேண்டும். 

அந்த அடித்தளத்தை தொடர் பொய் அசைத்துவிடும். இதனால் குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுடன் உறவு பாதிக்கப்படும்.

சிறிய பொய்யின் பட்டாம்பூச்சி விளைவு

சிறிய பொய்கள் பெரிதாக தெரியாது. அது குழந்தைகள் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கிறிஸ்துமஸ் தாத்தா கதைகள், அவர்களுக்கு ஏதேனும் வாங்கித்தருவேன் என்ற இதுபோன்ற பொய்கள், குழந்தைகளை குழப்புகிறது. 

எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் என்ன கூறுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இது குழந்தைகள் கற்கும் ஒழுக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நேர்மையான உரையாடல் வழியாக ஒழுக்கத்தை போதிப்பது

திறந்த மற்றும் நேர்மையான உரையாடல் வழியாக ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். உண்மைக்கும், நேர்மைக்கும் பெற்றோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். 

தங்களின் செயல்கள் மற்றும் முடிவுகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் நேர்மையை புகட்ட வேண்டும். பிரச்னைகளை தீர்ப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும் ஆரோக்கியமான அணுகுமுறை வேண்டும்.

மன நலனில் பாதிப்பு

பொய்களால் குழந்தைகளின் மனநிலை கடுமையாக பாதிக்கப்படும். இதனால் மனஅழுத்தம், பயம், பதற்றம் உருவாகும். குழந்தைகளிடம் ஏமாற்றத்தை உருவாக்கும். 

எனவே அவர்களின் வயதுக்கு ஏற்ற நேர்மையை அவர்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும். இது குழந்தைகளை உணர்வு ரீதியாக அவர்களை பலப்படுத்தி வாழ்க்கையில் அவர்கள் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

உரையாடல் மற்றும் புரிதல்

குடும்ப நபர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் எவ்வித ஒளிவுமறைவுமின்றி உரையாட வேண்டும். குழந்தைகளை கேள்வி கேட்கவைத்து அவர்களுக்கு திறந்த பதில்களை கொடுத்து, அவர்களின் வயதுக்கு ஏற்ப பொறுப்புகளை அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். 

அவர்களின் கோணத்தையும் புரிந்துகொண்டு, அவர்களின் உணர்வுகளையும் அங்கீகரிக்க வேண்டும். இதனால் அவர்கள் தங்களின் யோசனைகள் மற்றும் கவலைகளை உங்களுடன் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.